பீட்டர் தமியான்
புனித பீட்டர் தமியான், பெ.சா (சுமார். 1007[2] – 21/22 பெப்ரவரி 1072 or 1073[1]) என்பவர் திருத்தந்தை ஒன்பதாம் லியோவோடு இணைந்து கத்தோலிக்க திருச்சபையினை சீர்திருத்த முயன்றவர் ஆவார். இவர் உரோமையின் புறநகர் மறைமாவட்டமான ஓஸ்தியாவின் கர்தினால்-ஆயராக இருந்தவர் ஆவார். 1823இல் இவர் திருச்சபையின் மறைவல்லுநர் என அறிவிக்கப்பட்டார். டான்டே அலிகியேரி இவரை புனித அசிசியின் பிரான்சிசுவுக்கு முன்னோடியாகக்கருதி தனது புனைவு நூலில் இவர் விண்ணகத்தில் மிக உயரிய இடத்தில் இருப்பதாக கவிதை புனைந்துள்ளார்.
புனித பீட்டர் தமியான் | |
---|---|
புனித பீட்டர் தமியானின் சிலை | |
ஆயல், மறைவல்லுநர் | |
பிறப்பு | c. 1007 இரவேனா |
இறப்பு | 21/22 பெப்ரவரி 1072 அல்லது 1073 [1] இஃபியேன்சா |
ஏற்கும் சபை/சமயங்கள் | கத்தோலிக்க திருச்சபை |
திருவிழா | 21 பெப்ரவரி |
சித்தரிக்கப்படும் வகை | கர்தினால்களின் உடையில் |
புனிதர் பட்டம்
தொகுஇவரை கத்தோலிக்க திருச்சபையின் மறைவல்லுநர் என திருத்தந்தை பன்னிரண்டாம் லியோ 1823இல் அறிவித்தார். இவரின் விழா நாள் 21 பெப்ரவரி ஆகும். இவருக்கு முறைப்படி புனிதர் பட்டமளிப்பு நிகழவில்லை என்பது குறிக்கத்தக்கது. இவரின் இறப்பு முதலே இவருக்கு மக்கள் வணக்கம் செலுத்தி வந்துள்ளனர். இவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலிருந்து ஆறு வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு தற்போது இஃபியேன்சா மறைமாவட்ட முதன்மைக்கோவிலில் உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Howe, John (ஜூன் 2010). "Did St. Peter Damian Die in 1073 ? A New Perspective on his Final Days". Analecta Bollandiana 128 (1): 67–86. http://www.kbr.be/~socboll/P-analecta2010.php. பார்த்த நாள்: 2014-02-27.
- ↑ "five years after the death of the Emperor Otto III"
- "St. Peter Damian". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.