எட் மிலிபாண்ட்
எட்வர்ட் சாமுவேல் "எட்" மிலிபாண்ட் (Edward Samuel "Ed" Miliband, பிறப்பு: டிசம்பர் 24, 1969) ஐக்கிய இராச்சியத்தின் தொழிற் கட்சியின் 20வது தலைவரும், அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும் ஆவார். இவர் டொன்காஸ்டர் வடக்குத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக 2005 ஆம் ஆண்டில் இருந்து வருகிறார். 2007 முதல் 2010 வரை கோர்டன் பிரவுனின் ஆட்சியின் கீழ் அமைச்சராகவும் இருந்தவர்.
எட் மிலிபான்ட் Ed Miliband | |
---|---|
2007 தொழிற்கட்சி மாநாட்டில் மிலிபாண்ட் | |
எதிர்க்கட்சித் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 25 செப்டம்பர் 2010 | |
பிரதமர் | டேவிட் கேமரன் |
Deputy | ஹரியட் ஹார்மன் |
முன்னையவர் | ஹரியட் ஹார்மன் |
தொழிற்கட்சித் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 25 செப்டம்பர் 2010 | |
Deputy | ஹரியட் ஹார்மன் |
முன்னையவர் | ஹரியட் ஹார்மன் |
ஆற்றல் மற்றும் சுற்றுச்சுழல் மாற்றத்திற்கான அரசுச் செயலர் | |
பதவியில் 3 அக்டோபர் 2008 – 11 மே 2010 | |
பிரதமர் | கோர்டன் பிரவுன் |
முன்னையவர் | புதிதாகத் தோற்றுவிக்கப்பட்டது |
பின்னவர் | கிறிஸ் ஹூனி |
நாடாளுமன்ற உறுப்பினர் வடக்கு டொன்காஸ்டர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 5 மே 2005 | |
முன்னையவர் | கெவின் ஹியூஸ் |
பெரும்பான்மை | 12,656 (40%) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 24 திசம்பர் 1969 லண்டன், ஐக்கிய இராச்சியம் |
அரசியல் கட்சி | தொழிற் கட்சி |
துணைவர் | ஜஸ்டின் தோர்ண்டன் |
முன்னாள் கல்லூரி | கோர்ப்பஸ் கிறிஸ்டி கல்லூரு, ஒக்ஸ்போர்ட் பொருளியலுக்கான லண்டன் பள்ளி |
இணையத்தளம் | அதிகாரபூர்வ இணையத்தளம் |
லண்டனில் பிறந்த மிலிபாண்ட் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், மற்றும் பொருளியலுக்கான லண்டன் பள்ளி ஆகியவற்றில் பட்டம் பெற்றவர். 2010 செப்டம்பர் 25 இல் நடைபெற்ற தொழிற் கட்சிக்கான தலைவர் தேர்தலில் இவர் தனது மூத்த சகோதரரும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான டேவிட் மிலிபாண்டை எதிர்த்துப் போட்டியிட்டு மிகக்குறைந்த பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றார்.
வெளி இணைப்புகள்
தொகு- Ed Miliband, MP for Doncaster North பரணிடப்பட்டது 2012-10-14 at the வந்தவழி இயந்திரம் official site
- Ed Miliband for Labour Leader பரணிடப்பட்டது 2012-10-14 at the வந்தவழி இயந்திரம் official campaign website