1831
1831 (MDCCCXXXI) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய 12 நாட்கள் பின்தங்கிய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1831 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1831 MDCCCXXXI |
திருவள்ளுவர் ஆண்டு | 1862 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2584 |
அர்மீனிய நாட்காட்டி | 1280 ԹՎ ՌՄՁ |
சீன நாட்காட்டி | 4527-4528 |
எபிரேய நாட்காட்டி | 5590-5591 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1886-1887 1753-1754 4932-4933 |
இரானிய நாட்காட்டி | 1209-1210 |
இசுலாமிய நாட்காட்டி | 1246 – 1247 |
சப்பானிய நாட்காட்டி | Tenpō 2 (天保2年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2081 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4164 |
நிகழ்வுகள்
தொகு- மார்ச் 29 – ஒட்டோமான் பேரரசுக்கு எதிரான பெரும் பொசுனியக் கிளர்ச்சி ஆரம்பமானது.
- மார்ச் 30 - யாழ்ப்பாணம், மானிப்பாயில் அமெரிக்க மிஷன் கட்டிடங்கள் தீப்பிடித்து அழிந்தன.
- ஏப்ரல் 11 - உருகுவேயில் சல்சிபுதிஸ் என்ற இடத்தில் நூற்றுக்கணக்கான சருவா இனத்தவர் படுகொலை செய்யப்பட்டனர்.
- ஏப்ரல் 18 – அலபாமா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
- சூலை 21 – பெல்ஜியத்தின் முதலாவது ஆரசனாக முதலாம் லெயோப்போல்ட் முடி சூடினார்.
- ஆகத்து 2 – பெல்ஜியத்தை பத்து நாட்களாக முற்றுகையிட்ட டச்சு இராணுவத்தினரை பிரெஞ்சு இராணுவம் தடுத்து நிறுத்தியது.
- ஆகத்து 21 – வேர்ஜீனியாவில் நாட் டர்னரின் அடிமைக் கிளர்ச்சி ஆரம்பம்.
- செப்டம்பர் 6–8 – உருசியர்கள் போலந்து தலைநகரைக் கைப்பற்றினர்.
- அக்டோபர் 23 - இலங்கைக்கான பிரித்தானிய ஆளுநராக நியமிக்கப்பட்ட சேர் ராபர்ட் வில்மொட் பதவியேற்க இலங்கை வந்தார்.
- நவம்பர் 5 - ஐக்கிய அமெரிக்காவில் அடிமைக் கிளர்ச்சியில் ஈடுபட்ட நாட் டர்னர் வேர்ஜீனியாவில் குற்றவாளியாகக் காணப்பட்டு தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டது.
- நவம்பர் 7 – பிரேசிலில் அடிமைத் தொழில் தடை செய்யப்பட்டது.
- நவம்பர் 11 - ஐக்கிய அமெரிக்காவில் அடிமைக் கிளர்ச்சியில் ஈடுபட்ட நாட் டர்னர் தூக்கிலிடப்பட்டார்.
- டிசம்பர் 27 - சார்ல்ஸ் டார்வின் உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுக்காக தென்னமெரிக்கா நோக்கிப் புறப்பட்டார்.
தேதி அறியப்படாத நிகழ்வுகள்
தொகு- யாழ்ப்பாணத்தில் மக்கள்தொகை 146,528 ஆகக் கணக்கிடப்பட்டது.
- சிட்னி மோர்னிங் ஹெரால்ட் பத்திரிகை முதன் முதலில் வெளிவந்தது.
- பிரெஞ்சுப் பயிற்சி பெற்ற முகமது அலி தலைமையிலான எகிப்தியப் படையினர் சிரியாவைக் கைப்பற்றினர்.
பிறப்புக்கள்
தொகு- ஜனவரி 3 - சாவித்திரி பாய் புலே (Savitribai Phule) இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் மற்றும் பெண்களுக்கென முதல் பள்ளி துவங்கியவர்.
- சூன் 13 - ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல், கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. 1879)
- நவம்பர் 19 - ஜேம்ஸ் கார்ஃபீல்ட், ஐக்கிய அமெரிக்காவின் 20வது குடியரசுத் தலைவர் (இ. 1881)
இறப்புக்கள்
தொகு- நவம்பர் 11 - நாட் டர்னர், ஐக்கிய அமெரிக்காவில் அடிமைக் கிளர்ச்சி செய்தவர் (பி. 1800)
- நவம்பர் 14 - எகல், இடாய்ச்சு மெய்யியல் அறிஞர் (பி. 1770)
1831 நாற்காட்டி
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Takashimaya Archives 1831-1908" (in ஜப்பானியம்). Takashimaya. Archived from the original on April 7, 2016. பார்க்கப்பட்ட நாள் 2021-01-11.
- ↑ Miskimon, Scott A. (2010). "The Fires of 1831: Fayetteville and Raleigh in Flames". State Library of North Carolina.
- ↑ "Icons, a portrait of England 1820–1840". Archived from the original on 2007-09-22. பார்க்கப்பட்ட நாள் 2007-09-12.