டார்வின் (ஆஸ்திரேலியா)

ஆஸ்திரேலியாவின் வட ஆட்புல மாநிலத்தின் தலைநகரம்

டார்வின் (Darwin) ஆஸ்திரேலியாவின் வட ஆள்புல மாநிலத்தின் தலைநகரம். இது ஆத்திரேலியாவின் வடக்குக் கரையில் திமோர் கடலில் அமைந்துள்ளது. 129,062 (2011) மக்கள்தொகையுடன் கூடிய இந்நகரம் அம்மாநிலத்தின் ஆகக் கூடிய மக்கள்தொகை உள்ள நகரமும், ஆத்திரேலியாவின் தலைநகர நகரங்களில் மிகச்சிறியதும் ஆகும். வெப்ப மண்டலக் காலநிலையுடன் ஈர மற்றும் உலர் பருவகாலங்களையும் கொண்டுள்ளது. ஆண்டு முழுவதும் சூடான காலநிலையைக் கொண்டிருக்கும்.[3]

டார்வின்
Darwin

வட ஆட்புலம்

டார்வின் நகரம்
மக்கள் தொகை: 120,900 (2006) [1] (16வது)
அடர்த்தி: 926/கிமீ² (2,398.3/சதுர மைல்) (2006)[2]
அமைப்பு: 1869
பரப்பளவு: 112.01 கிமீ² (43.2 சது மைல்)
நேர வலயம்: ACST (UTC+9:30)
நகர முதல்வர்: கிரயெம் சோயர்
அமைவு:
உள்ளூராட்சிகள்: டார்வின், பாமேர்ஸ்டன், லிட்ச்பீல்ட்
கவுண்டி: பாமேர்ஸ்டன் கவுண்டி
மாநில மாவட்டம்: டார்வின் துறை (மேலும் 14 தொகுதிகள்)
நடுவண் தொகுதி: சொலமன்
சராசரி அதிகபட்ச வெப்பநிலை சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை மழைவீழ்ச்சி
32.0 °செ
90 °
23.2 °செ
74 °
1,714.7 மிமீ
67.5 அங்
ஆஸ்திரேலியாவில் டார்வினின் அமைவு

பிரித்தானியர்களின் குடியேற்றம் ஆரம்பமாவதற்கு முன்னர், டார்வினின் பெரும் பகுதி லராக்கியா மக்கள் குடியிருந்தனர். 1839 செப்டம்பர் 9 இல் எச்.எம்.எஸ் பீகில் என்ற கப்பல் டார்வின் துறையைச் சென்றடைந்தது. ஜோன் விக்கம் என்பவர் அவருடைய முன்னைய கடற்பயணத்தில் தன்னுடன் பயணம் செய்த சார்லஸ் டார்வின் நினைவாக இந்நகருக்கு டார்வின் துறை (Port Darwin) எனப் பெயரிட்டார். இக்குடியேற்றத் திட்டம் 1869 ஆம் ஆண்டில் பால்மெர்ஸ்டன் (Palmerston) எனப் பெயரிடப்பட்டு, பின்னர் 1911 ஆம் ஆண்டில் மீண்டும் டார்வின் எனப் பெயர் மாற்றம் பெற்றது.[4] இரண்டாம் உலகப்போரின் போது சப்பானியர்களின் குண்டுவீச்சுக்கு இலக்காகி நகரம் பெரும் சேதமடைந்து மீள உருவாக்கப்பட்டது. பின்னர் 1974 ஆம் ஆண்டில் இடம்பெற்ற சூறாவளி டிரேசியினால் மீண்டும் நகரம் அழிக்கப்பட்டது. தற்போது ஆத்திரேலியாவின் நவீன நகரங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.[5][6]

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Australian Demographic Statistics
  2. Explore Your City Through the 2006 Census Social Atlas Series
  3. "Lightning Storms in the Top End". Australian Broadcasting Corporation. 10 டிசம்பர் 2002. பார்க்கப்பட்ட நாள் 27 சூலை 2008. {{cite web}}: Check date values in: |date= (help)
  4. "Darwin – Northern Territory – Australia – Travel – smh.com.au". The Sydney Morning Herald. 8 பெப்ரவரி 2004. பார்க்கப்பட்ட நாள் 22 மே 2010. {{cite web}}: Check date values in: |date= (help)
  5. "A brief history of Darwin". Darwin City Council. Archived from the original on 2010-02-05. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2008. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. "Darwin (Northern Territory, Australia)".. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டார்வின்_(ஆஸ்திரேலியா)&oldid=3556478" இலிருந்து மீள்விக்கப்பட்டது