யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்

யாழ்ப்பாண சர்வதேச வானூர்தி நிலையம்
(பலாலி விமான நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் (Jaffna International Airport, (ஐஏடிஏ: JAFஐசிஏஓ: VCCJ) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் பலாலி என்னும் இடத்தில் உள்ள படைத்துறை வானூர்தித் தளமும், பன்னாட்டு வானூர்தி நிலையமும் ஆகும்.[1][2] யாழ்ப்பாண நகரில் இருந்து 16 கிமீ (9.9 மைல்) வடக்கே அமைந்துள்ள இவ்வானூர்தி நிலையம், பலாலி விமான நிலையம் (Palaly Airport) அல்லது பலாலி விமானப் படைத்தளம் (SLAF Palaly) எனவும் அழைக்கப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் போது பிரித்தானிய வான் படையின் பயன்பாட்டுக்காக நிர்மாணிக்கப்பட்டு, பின்னர் நாட்டின் இரண்டாவது பன்னாட்டு வானூர்தி நிலையமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் இலங்கை வான்படை இதனைக் கையகப்படுத்தியது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்

Jaffna International Airport
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
உரிமையாளர்இலங்கை அமைச்சரவை
இயக்குனர்இலங்கை வான்படை
சேவை புரிவதுயாழ்ப்பாணம்
அமைவிடம்பலாலி, இலங்கை
கட்டளை அதிகாரிஏ. ஜே. அமரசிங்க
உயரம் AMSL10 m / 33 ft
நிலப்படம்
JAF is located in இலங்கை
JAF
JAF
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
05/23 2,305 7,562 தார்

வரலாறு

தொகு

இரண்டாம் உலகப் போரின் போது பிரித்தானிய வான் படை இலங்கையின் காங்கேசன்துறைக்கு அருகில் பலாலியில் வான்வெளிக்களம் ஒன்றை அமைத்தது.[3][4] போரின் போது இத்தளத்தில் பிரித்தானியாவின் வான்படையணிகளும் (இல. 160, இல. 203, இல. 292, இல. 354) வான்-கடல் மீட்பு அணிகளும் இங்கு நிலை கொண்டிருந்தன.[5] போரின் முடிவை அடுத்து இவ்வான்வெளிக்களம் பிரித்தானியரால் கைவிடப்பட்டதை அடுத்து, இலங்கையின் குடிமை வான்போக்குவரத்துத் திணைக்களம் இதனைக் கையேற்றது.[4]

ஏர் சிலோன் நிறுவனத்தின் முதலாவது பயணம் 1947 டிசம்பர் 10 இல் இரத்மலானை வானூர்தி நிலையத்தில் இருந்து பலாலி வழியாக சென்னைக்கு நடத்தப்பட்டது.[6] இலங்கை விடுதலை அடைந்த பின்னர் இவ்வானூர்தி நிலையத்தூடாக தென்னிந்திய நகரங்களுக்கும், கொழும்புக்கும் சேவைகள் இடம்பெற்றன.[7] ஈழப்போர் ஆரம்பித்ததை அடுத்து பயணிகள் சேவை மட்டுப்படுத்தப்பட்டது.[7]

1976 ஆம் ஆண்டில் இலங்கை வான்படையின் பிரிவு ஒன்று இங்கு நிறுவப்பட்டது.[4] 1982 சனவரி முதல் இப்படைப்பிரிவின் வான்வெளிக்களமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.[4] வானூர்தி நிலையம் ஈழப்போரில் பங்கேற்ற ஆயுதப் படையினருக்கு பயன்பட்டது. 1990களின் ஆரம்பத்தில் வானூர்தி நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் அதியுயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டு, அங்கு குடியிருந்த பொது மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.[8][9] 1990 முதல் 1995 வரை வலிகாமம் பகுதியில் அரசுக் கட்டுப்பாட்டில் இருந்த ஒரே இடம் இந்த உயர் பாதுகாப்பு வலயம் மட்டுமே. 1995 இல் வலிகாமம் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டதை அடுத்து, பயணிகள் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. 1996 இல் லயன் ஏர் தனியார் நிறுவனம் கொழும்புக்கு போக்குவரத்து சேவையை ஆரம்பித்தது. 1998 மார்ச் மாதத்தில் மொனாரா ஏர்லைன்சு நிறுவனம் தனது சேவையை ஆரம்பித்தது.[10] இச்சேவை இராணுவத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறி விடுதலைப் புலிகள் அச்சுறுத்தியதை அடுத்து இச்சேவை 1998 செப்டம்பர் 16 இல் நிறுத்தப்பட்டது.[11] 1998 செப்டம்பர் 29 ஆம் நாள் இரத்மலானையை நோக்கி பகல் 1:48 மணிக்குப் புறப்பட்ட பயணிகள் வானூர்தி லயன்ஏர் 602,[12] 2.10 மணியளவில் காணாமல் போனது. மன்னாருக்கு 15கிமீ வடக்கே இரணைமடு என்ற இடத்தில் இது கடலில் மூழ்கியதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.[13] அதில் பயணம் செய்த அனைத்து 55 பேரும் கொல்லப்பட்டனர்.[14] இவ்வானூர்தியை விடுதலைப் புலிகளே சுட்டு வீழ்த்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.[15]

2002 ஆம் ஆண்டில் நோர்வே அரசின் ஆதரவுடனான போர் நிறுத்தம் ஏற்பட்டதை அடுத்து பயணிகள் சேவைகள் மீண்டும் ஆரம்பித்தன.[7] சூன் 2002 எக்ஸ்போஏர் சேவை யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்கும் இடையில் ஆரம்பிக்கப்பட்டது.[16][17][18] 2013 சனவரி 4 இல் புதிய பயணிகள் ஏறுதுறை நிறுவப்பட்டது.[19][20]

வானூர்தி நிறுவனங்களும் சேரிடங்களும்

தொகு

பயணிகள் வானூர்திகள்

தொகு
விமான நிறுவனங்கள்சேரிடங்கள்
பிட்ஸ்ஏர் கொழும்பு-இரத்மலானை, திருகோணமலை
ஹெலிடூர்ஸ் கொழும்பு-இரத்மலானை, திருகோணமலை
மிலேனியம் ஏர்லைன்சு கொழும்பு-கட்டுநாயக்கா, கொழும்பு-இரத்மலானை
அலையன்ஸ் ஏர் சென்னை

சரக்கு

தொகு
விமான நிறுவனங்கள்சேரிடங்கள்
பிட்ஸ்ஏர் கொழும்பு-இரத்மலானை
லங்கன் கார்கோ கொழும்பு-இரத்மலானை

மேற்கோள்கள்

தொகு
  1. "VCCJ KANKESANTURAI / Jaffna". Aeronautical Information Services of Sri Lanka, Airport & Aviation Services. Archived from the original on 2013-12-14. பார்க்கப்பட்ட நாள் 2013-12-14.
  2. "JAF - Airport". Great Circle Mapper.
  3. "Jaffna, Sri Lanka". சிலோன் டுடே. 4 நவ. 2012 இம் மூலத்தில் இருந்து 2013-09-07 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130907180938/http://www.ceylontoday.lk/16286-print.html. 
  4. 4.0 4.1 4.2 4.3 "History of Air Force Palaly". இலங்கை வான்படை. Archived from the original on 2009-03-02. பார்க்கப்பட்ட நாள் 2013-12-14.
  5. "RAF Stations - K". Air of Authority - A History of RAF Organisation.
  6. Thiedeman, Roger (7 டிசம்பர் 1997). "A foundation in the sky: Air Ceylon was born 50 years ago". சண்டே டைம்சு. http://www.sundaytimes.lk/971207/plus10.html. 
  7. 7.0 7.1 7.2 Gunawardena, Charles A. (2005). Encyclopedia of Sri Lanka. Sterling Publishers. p. 10. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1932705481.
  8. டி. பி. எஸ். ஜெயராஜ் (18 சனவரி 2003). "High-stakes zones". புரொன்ட்லைன் 20 (2). http://www.frontline.in/navigation/?type=static&page=flonnet&rdurl=fl2002/stories/20030131080202600.htm. 
  9. "Asia Report No. 220 - Sri Lanka's North II: Rebuilding under the Military" (PDF). International Crisis Group. 16 மார்ச்சு 2012. p. 21. Archived from the original (PDF) on 2013-08-14. பார்க்கப்பட்ட நாள் 2013-12-14.
  10. "First flight fiasco". தமிழ்நெட். 2 மார்ச் 1998. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=1034. 
  11. "Jaffna airline offices close". தமிழ்நெட். 16 செப்டம்பர் 1998. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=2044. 
  12. "Lion Air flight said missing". தமிழ்நெட். 29 செப்டம்பர் 1998. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=2115. 
  13. "Fishermen say witnessed crash". தமிழ்நெட். 30 செப்டம்பர் 1998. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=2120. 
  14. "Shattered dreams behind Lion Air mystery". சண்டே டைம்ஸ்]]. 4 அக்டோபர் 1998. http://www.sundaytimes.lk/981004/spec.html. 
  15. "Information Bulletin No 19 - Lion air Flight 602 From Jaffna: Crossing The Bar Into The Twilight of Silence". யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு. 16 அக்டோபர் 1998.
  16. "Jaffna in just over 1 hour with ExpoAir Jaffna in just over 1 hour with ExpoAir". அதெதெரண. 26 சனவரி 2012. http://www.adaderana.lk/biznews.php?nid=157. 
  17. "Soaring demand for flights to Jaffna". தமிழ்நெட். 10 ஆகத்து 2002. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=7266. 
  18. "ExpoAir flies to Jaffna". தி ஐலண்டு. 24 சனவரி 2012 இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304040706/http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=43848. 
  19. "New passenger terminal for Palaly". சிலோன் டுடே. 5 சனவரி 2013 இம் மூலத்தில் இருந்து 2013-12-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131211222320/http://www.ceylontoday.lk/51-21173-news-detail-new-passenger-terminal-for-palaly.html. 
  20. "New Passenger Terminal at Palaly Airport". டெய்லி எஃப்டி. 7 சனவரி 2013 இம் மூலத்தில் இருந்து 2013-12-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131212144437/http://www.ft.lk/2013/01/07/new-passenger-terminal-at-palaly-airport/. 

வெளி இணைப்புகள்

தொகு