பலாலி

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம்

பலாலி (Palaly) யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு நகரமாகும். இலங்கை விடுதலை அடைந்த போது, இங்குள்ள விமான நிலையம் மூலம் திருச்சிக்கு விமான சேவைகள் இருந்த போதும் பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டுப் பின்னர் கைவிடப்பட்டது. இங்கு 1986 இல் மேற்கொள்ளப்பட்ட ஒப்ரேசன் லிபரேசன் (Operation Liberation) என்னும் இராணுவ நடவடிக்கை மூலம் பலாலி, குரும்பசிட்டி தமிழர்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டு பலாலி விமானத்தளம் விரிவாக்கப்பட்டது. மிகைப் பாதுகாப்பு வலயமாக இலங்கை அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள இப்பகுதியில், இன்றுவரை இடம்பெயர்ந்த அப்பாவிப் பொதுமக்களினால் மீளக் குடியேற இயலாமல் உள்ளது.

பலாலி
Palaly
பலாலி is located in இலங்கை
பலாலி
பலாலி
ஆள்கூறுகள்: 9°48′0″N 80°05′0″E / 9.80000°N 80.08333°E / 9.80000; 80.08333
நாடுஇலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்யாழ்ப்பாணம்
பிசெ பிரிவுவலிகாமம் வடக்கு

பலாலி கிராமம், வடக்கு திசையில் பாக்குநீரினையும் அதைத்தொடர்ந்து பரந்த கடல் பரப்பான வங்காளவிரிகுடாவும், கிழக்கு திசையில் வளலாய், பத்தைமேனி, அச்சுவேலியும், தென் திசை ஒட்டகபுலம், வயாவிளான். குரும்பசிட்டியும் மேற்கு திசையில் கட்டுவன், மயிலிட்டி என்னும் கிராமங்கள் பாதுகாப்பாக அமைய அவற்றின் மத்தியில் கடல் வளமும் கொண்ட தமிழர்களின் பொருளாதார மையமாகும். வடக்கில் கரைமணலும் அதணைத்தொடர்ந்து கிராய்மண்ணும் தென்பகுதி முழுவதும் செம்மண் கனிவளத்துடன் தென்னந்தோப்புகளும் பனையடைப்புகளும் விவசாய நிலங்களும் மேய்ச்சல் நிலப்பரப்புகளும் மீன்பிடி வளங்களும் நிறைந்த அழகுமிகு கிராமம்.

ஆலயம்

தொகு

ஆரம்பத்தில் பலாலி மத்தியில் சித்தி விநாயகர் ஆலயமும் அதனைத்தொடர்ந்து பலாலி கிழக்கில் கன்னார் வயல் கண்ணகி அம்மன் ஆலையமும் அமையப்பெற்று அங்குள்ள மக்களின் பிரதிநிதியால் ஒருவரை பூசகராக நியமித்து சைவ வழிபாட்டு முறைதமிழ் பாரம்பரிய முறைப்படி பின்பற்றப்பட்டுள்ளது.

அப்போது பூசகராக பணிவிடை செய்தவர் குருக்கள் என்ற கவுரவப்பெயருடன் தனது கடமையை செய்ததினால் தொடர்ந்தும் அவர் குடும்பத்தில் உள்ள ஒருவர் இப்பதவியை ஏற்று பல தலைமுறையாக வழிபாட்டு முறை தொடர்ந்து. அப்போதும் குருக்கள் முறையும் பண்டைய தமிழ் வழிபாட்டு நடைமுறையும் தொடர்ந்தும் இருந்துள்ளது. பிற்காலத்தில் மக்கள் ஆன்மீகத்தில் இருந்து சைவசமய ஆகமங்களை பின்பற்ற தொடங்கினர் அதன் பின்னரே அந்தணர்கள்மூலம் சைவசமய விதி முறைகளுக்கு அமைய வழிபாட்டுமுறைகள் மாற்றியமைக்கப்பட்டு வட மொழியான சமஸ்கிருதம் நடைமுறையில் கொண்டுவரப்பட்டது. ஒரு கட்டத்தில் மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்பட்டு கண்ணகிக்கு துணையாக இராயராயேஸ்வரி அம்மன் வழிபாட்டை கொண்டுவந்தனர்.

புதினாறாம் நூற்றாண்டில் போர்த்துகேயரால் இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாணம் கைப்பற்றப்பட்டது. பதினாறாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் இருந்து பதினேழாம் ஆண்டு பிற்பகுதிவரை கத்தோலிக்க மதம் வேர் ஊன்றி வளர்ச்சி பெற்றது. அந்தக் காலகட்டபகுதியில் பலாலி வடபகுதி மக்கள் பலர் சைவத்தில் இருந்து கத்தோலிக்க மதத்திற்கு மாறி தமக்கென ஓர் தேவாலயத்தையும் அமைத்தனர்.

தற்போது வடக்கில் ஆரோக்கியமாதா தேவாலயம், அந்தோனியார் தேவாலயம், அம்மன் கோயில்லும், மேற்கே சென்.செபஸ்ரியார் தேவாலயம், முலைவைப் பிள்ளையார் கோயிலும். தெற்கில் சிவன் கோயிலும், வைரவர் கோயிலும், புனித யாகப்பர் ஆலயமும், ஒட்டகப்புலம் சென் மேரிஸ் தேவாலயமும், கிழக்கில் பலாலி இராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலும், பெரியதம்பிரான், வைரவர், முதலியம், பத்திரகாளி, அண்ணமார் என பல வழிபாட்டு தலங்களின் மத்தியில் பிள்ளையார் கோயில் என அழைக்கப்படும் புகழ் பெற்ற பலாலி சித்தி விநாயகர் ஆலையமும் அமைந்து அவ்வூர் மக்கள் அனைவருக்கும் அருள்பாலித்து கொண்டிருக்கின்றார்கள்.

கடல் வாணிபம்

தொகு

பலாலியின் வடக்கே வங்காள விரிகுடா பரந்துகிடப்பதனால் இந்நிலப்பரப்பு பலமுறை ஆழிப்பேரலையினால் தாக்கப்பட்டு பாரிய அழிவை ஏற்படுத்தி அங்கிருந்த வடபகுதி மக்களின் வாழ்வாதாரமான விவசாயத்தை முற்றா அழித்து அவர்களை சொந்த மண்ணில் அகதிகளாக வாழவைத்தது. அப்போதுதான் அவர்கள் உணர்ந்தவர்கள் தாழ்நிலமான கடல் ஓரப்பகுதியில் விவசாயம் செய்து நாம் உயிர் வாழமுடியாது என்றும் தமக்கு உயிர் வாழ ஓர் மாற்று முறையை கண்டுபிடித்தார்கள். அதுதா தரையில் விதை விதைத்து அறுவடை செய்தவர்கள் கடலில் விதை விதக்காமலே அறுவடை செய்ய உயிரைப்பணயம் வைக்க துணிந்தார்கள். அன்று தரையில் சிறு நிலப்பரப்பில் விவசாயம் செய்தவர்கள் இன்று பரந்த கடல்பரப்பையும் தமது சொந்தமாக்கியுள்ளனர்.

பலாலியின் வடக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகள் கடல் மட்டத்தில் இருந்து உயரத்தில் அமைந்திருப்பதால் அவை அழிப்பேரலையிலிருந்து தப்பி இருந்தன. இங்கிருந்தவர்கள் தொடர்ந்தும் விவசயத்தை பெற்கொண்டிருந்தனர். வடபகுதி மக்களும் ஏனைய பகுதி மக்களுடன் ஒன்று சேர்ந்து ஒருவருக்கொருவர் ஒற்றுமையாகவும் தங்களது அண்றாட வாழ்க்கைமுறையை சுமூகமாக கொண்டு செல்லும் நோக்குடன் பண்டமாற்று முறையை அறிமுகப்படுத்தினர். இம்முறையானது இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதிவை நடைமுறையில் இருந்தது.

இங்கு வாழ்ந்த மக்கள் தங்களது வாழ்வுமுறைக்கு ஏப பல மாற்றங்களை தமது சமூகத்தின் மத்தியில் கொண்டுவந்தனர், இலங்கையின் வடபகுதி மக்களின் தொழில் ரீதியான சமுதாய கட்டமைப்பை பலாலி மக்களுக்கு பின்பற்றினர்.....

இராணுவ தலைமையகம்

தொகு

இலங்கையின் வடபகுதிக்கு வரும் கள்ளக்குடியேற்றத்தை தடுக்கும் நோக்குடன் 1962 இல் இலங்கை அரசு ஒரு தடுப்பு முகாமை அமைக்க முன்வந்தது. அப்போது இருந்த நெல்லுசங்கத்தின் ஒரு பகுதியில் கள்ள குடியேற்ற தடுப்பு முகாம் அமைக்கப்பட்டது. இது நாளடைவில் நெல்லு சங்கத்தை வெளியேற்றி கள்ளக்குடியேற தடுப்பு தலைமையகம் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் இவ்விடம் பலாலி இராணுவ முகாமாக மாற்றப்பட்டு அதன் அருகில் இருந்த பலாலி சித்தி விநாயகர் வித்தியாசாலையை அங்கிருந்து வெளியேற்றி இன்று உள்ள இராணுவ தலைமையகம் அமைக்கப்பட்டது. இது இப்போது ஓர் உலக புகழ் பெற்ற கேந்திர மையமாக விளங்குகின்றது

ஆசிரியர் பயிற்சி கலாசாலை

தொகு

பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலை மிகவும் முக்கியம் வாய்ந்த ஓர் கல்வி போதனாசாலையாகும். இது பலாலி விமானநிலையத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு பல விதமான கல்வி துறைகளில் பயிற்சி வழங்கப்பட்டு இலங்கை முழுவதுக்குமான தமிழ் மொழி மூலம் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் உருவாக்கப்பட்டார்கள். இதன்முலம் பலாலி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்துள்ளது என்று கூறினால் மிகையாகாது. 

பொருளாதாரம்

தொகு

பலாலி மக்கள் விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்தினர். மிளகாய், வெங்காயம், தக்காளி, புகையிலை, கோவா, திராட்சை என பல வகையான மரக்கறி வகையையும் தானிய பெருட்களையும் உற்பத்தி செய்து தன்ணிறைவு கண்டனர். உள்ஊரிலும், யாழ்ப்பாண குடாநாட்டிலும் சந்தைப்படுதி கொண்டிருந்த பலாலி விவசாயிகள் நாட்டின் தென்பகுதிக்கு படையெடுத்தனர். நேராகவே கொழும்பு புறக்கோட்டையில் உள்ள நாலாம் குறுக்கு தெருவில் அமைந்த வியாபார நிலையங்களில் தமது விளைபொருட்களை சந்தைப்படுத்தி வெற்றியும் கண்டனர்.  

மேற்கோள்கள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=பலாலி&oldid=3504661" இலிருந்து மீள்விக்கப்பட்டது