வயாவிளான்

இலங்கையில் உள்ள இடம்
(வசாவிளான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வயாவிளான் (Vayavilan) என்பது இலங்கையின் வடமாகாணத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள ஒரு கிராமம். வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த இக்கிராமம் வயாவிளான் கிழக்கு (J/244), வயாவிளான் மேற்கு (J/245) என்னும் இரு கிராம சேவகர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுப் போர் காரணமாக பாதிக்கப்பட்ட கிராமங்களில் இதுவும் ஒன்று. இக்கிராமம் இலங்கை பலாலி இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்துள் அடங்கியதனால் இக்கிராம மக்களும் முழுமையாக வேறிடங்களுக்கு இடம்பெயரவேண்டி ஏற்பட்டது. 2007 ஆம் ஆண்டின் மக்கள்தொகை மதிப்பீட்டின்படி வயாவிளான் மேற்கு கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த பகுதியில் மக்கள் எவரும் இல்லை என்று குறிக்கப்பட்டுள்ளது.[1] 2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகை மதிப்பீட்டின்படி வயாவிளான் கிழக்கில் 1395 பேரும், வயாவிளான் மேற்கில் 116 பேரும் உள்ளனர்.[2]

வயாவிளான்

வயாவிளான்
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - யாழ்ப்பாணம்
அமைவிடம் 9°47′00″N 80°04′00″E / 9.7833°N 80.0667°E / 9.7833; 80.0667
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்
 - அஞ்சல்
 - தொலைபேசி
 - வாகனம்
 
 - 4112165
 - +
 - 

அமைவிடம் தொகு

வயாவிளான் கிராமம் பலாலி வீதியில் யாழ்ப்பாண நகரில் இருந்து 15 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது. கிழக்கே அச்சுவேலி, வடக்கே பலாலி, மேற்கே குரும்பசிட்டி, தெற்கே வடக்குப் புன்னாலைக்கட்டுவன் ஆகிய ஊர்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது. அத்துடன் அச்சுவேலி-அராலி பிரதான வீதியும் வயாவிளான் கிராமத்தின் வடக்கு எல்லையாக அமைகிறது. பிறிதொரு வீதியான பலாலி வீதி வடக்கு-தெற்காக வயாவிளான் மத்திய கல்லூரிக்கு முன்பாக வயாவிளான் கிராமத்தை ஊடறுத்து செல்கிறது. பலாலி வீதியும், அச்சுவேலி-அராலி வீதியும் சந்திக்கும் இடம் வயாவிளான் சந்தியாகக் கொள்ளப்படுகிறது.

இடப்பெயர்வு தொகு

யாழ்ப்பாணக் குடாநாட்டைப் பொறுத்தவரையில் வலிகாமம் வடக்கில் இடம்பெற்ற இடப்பெயர்வுதான் முதலாவது இடப்பெயர்வு எனக் குறிப்பிலாம். மக்களை தமது சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றிய இச்சம்பவம் 1986 சனவரி 13 இல் இடம்பெற்றது. இதுவே வயாவிளான் இடப்பெயர்வுமாகும். 1987 சூலையில் இந்திய அமைதிப்படை வந்திறங்கிய பின்னர் உருவாகிய அமைதிக் காலத்தில் இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் குடியமர்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி மீளக் குடியேறிய மக்கள் 1990 சூன் 15 இல் மீண்டும் இரண்டாவது முறையாக ஒரே நாளில் வெளியேற்றப்பட்டார்கள்.

மீள்குடியேற்றம் தொகு

2010 செப்டம்பர் 28 அன்று உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து வயாவிளான் மத்திய கல்லூரி விடுவிக்கப்பட்டபோது அதனுடன் சேர்ந்த பயனற்ற நிரப்பரப்புக்களும் சிறு அளவில் விடுவிக்கப்பட்டது. 2015 டிசம்பர் 30 இல் ஒட்டகப்புலம் ஒரு பகுதியும், வயாவிளான் கிழக்கு ஒருபகுதியும் விடுவிக்கப்பட்டது.

2017 நவம்பர் 30 வியாழன் அன்று உத்தரியமாதா ஆலயம், றோ.க.பாடசாலை (வடமூலை) உட்பட 29 ஏக்கர் குடியிருப்பு பகுதிகள் விடுவிக்கப்பட்டது.

2018 சூன் 19 செவ்வாய்க்கிழமை அன்று வயாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலயமும். அதனுடன் சேர்ந்த குடியிருப்புக்களுமாக 12 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டது. எனினும் குடியிருப்புக்களைக் கொண்ட கூடிய நிலப்பரப்பு விடுவிக்கப்படாத பகுதியாக என்னும் உள்ளது.

வணக்கத் தலங்கள் தொகு

வயாவிளான் மேற்கு
வயாவிளான் கிழக்கு
  • அந்தோனியார் கோவில்
  • உத்தரியமாதா கோவில்
  • முத்துமாரி அம்மன் ஆலயம்
  • அபிராமி ஆலயம்

பாடசாலைகள் தொகு

இந்த ஊரில் உள்ள பெரிய பாடசாலை வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம் ஆகும். இது யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பெரிய பாடசாலைகளுள் ஒன்று. 1990 ஆம் ஆண்டில் இப்பாடசாலை இருந்த இடம் பலாலி உயர் பாதுகாப்பு வலயத்துள் கொண்டுவரப்பட்டுப் பாடசாலை தற்காலிகமாக உரும்பிராய்க்கு மாற்றப்பட்டது. 2010 ஆம் ஆண்டில் பாடசாலை மீண்டும் திரும்பக் கையளிக்கப்பட்டது.[3] அடுத்தது குட்டியப்புலம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை. ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே உள்ள ஆரம்ப பாடசாலையாகும். மற்றும் ஒட்டகப்புலம்,வடமூலை றோமன் கத்தோலிக்க பாடசாலை இருக்கின்றன . (04.03.2016) விடுவிக்கப்படாத பகுதியாகவே உள்ளது.

பிரபலமானவர்கள் தொகு

கைலைவாசன் (படப்பிடிப்பாளர்)

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வயாவிளான்&oldid=3629832" இருந்து மீள்விக்கப்பட்டது