வயாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலயம்

வயாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலயம் 18 ஆம் நுாற்றாண்டு பழைமை வாய்ந்தது எனினும் 16 ஆம் நுாற்றாண்டு காலத்தில் இருந்தே வழிபாட்டு முறை இருந்து வந்துள்ளது. வேதாகம முறைப்படி நித்திய நைமித்திய பூசைகள் நாடோறும் இரு நேரப் பூசைகளாக நடைபெற்று வந்தன. ஞானவைரவர் தமது காவல் தெய்வமாக விளங்குகிறார் என்பது வயாவிளான் மக்களின் திடமான நம்பிக்கையாகும்.

வயாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலயம்
வயாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலயம் is located in இலங்கை
வயாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலயம்
வயாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலயம்
Location within இலங்கை
ஆள்கூறுகள்:9°40′28.82″N 80°1′46.61″E / 9.6746722°N 80.0296139°E / 9.6746722; 80.0296139
பெயர்
பெயர்:வயாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலயம்
அமைவிடம்
நாடு:இலங்கை
மாகாணம்:வட மாகாணம்
மாவட்டம்:யாழ்ப்பாணம்
அமைவு:தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவு
கோயில் தகவல்கள்
மூலவர்:வைரவர்
வரலாறு
கட்டப்பட்ட நாள்:18 ஆம் நுாற்றாண்டு
இணையதளம்:http://www.vayavilan.org

அமைவிடம் தொகு

இலங்கையின் வட பகுதியில் யாழ்ப்பாண மாவட்டம், வலிகாமம் வடக்கு பிரதேச செயலர் பிரிவில் உள்ள வயாவிளான் கிராமத்தில் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள இந்து ஆலயமாகும். வயாவிளான் மத்திய கல்லூரியில் இருந்து வடக்கு பக்கமாக 200 மீற்றர் தொலைவில் பலாலி வீதியில் இருந்து கிழக்கு நோக்கி செல்லும் வீதியில் 200 மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. இது யாழ்ப்பாணத்தில் இருந்து வடக்கு நோக்கி 13 கி.மீ. தொலைவாகும்.

தல வரலாறு தொகு

 
ஆரம்ப கால வழிபாட்டு இடமான புளியமரம்

ஞானவைரவர் ஆலயம் 500 ஆண்டுகள் பழமை மிக்க ஆலயமாகும். ஆரம்ப காலத்தில் தற்போது இருக்கும் ஆலயத்தின் முன்றலில் தென்-கிழக்காக உள்ள புளிய மரத்தின் அடியில் திரி சூலம் அமைத்து வைரவரை வழிபட்டு வந்தனர். இந்த புளியமரம் இப்போது ஏறத்தாள 15 மீற்றர் சுற்றளவைக் கொண்டதாக காட்சி தருகிறது. 18 ஆம் நுாற்றாண்டில் வைரவருக்கென கிழக்கு நோக்கிய சிறு கொட்டகை ஒன்றை அமைத்து வைரவரை அங்கு அமர்த்தி வழிபட்டுவந்ததாகம், காலப்போக்கில் கொட்டகை சீமெந்து கட்டிடமாக மாற்றியதாகவும் வழிவழி வந்த மூதாதையரின் கூற்றில் இருந்து அறியக்கிடக்கிறது. வைரவர் அமர்ந்த இந்த கட்டிடமே பின்னாளில் தற்போதைய கோயிலாக பரிணமித்தது. காலப்போக்கில் படிப்படியாக மண்டபங்கள், மடப்பள்ளி என்பவற்றுடன் கூடவே ஆலயத்தில் நிரந்தர அர்சகர்களுக்காக வீடு என்பன கிராம மக்களால் கட்டப்பட்டது.

மூலவர் தொகு

மூலவர் சன்னதியில் வைரவராக உள்ளார். நிர்வாண கோலத்தில் நிற்கும் வடிவத்தில் காட்சி தருவார்.

ஆலயத்தின் அமைப்பு தொகு

இவ்வாலயம் தரிசன மண்டபம், நுழை வாயில், வலபக்கமாக வசந்த மண்டபம், பலி பீடத்துடன் கூடிய தம்ப மண்டம், சபா மண்டம், மகா மண்டம், கருவறை ஆகிய அமைப்புகளைக் கொண்டுள்ளது. மூலமூர்த்தியான வைரவர் கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளார். மகா மண்டபத்தில் உற்சவ மூர்த்தியான வைரவர் தெற்கு நோக்கி வீற்றிருக்கிறார். அலங்கார உற்சவ காலத்தில் இந்த உற்சவ மூர்த்தியே வீதிஉலா வருவார்.

பரிவார மூர்த்திகளின் சந்நிதிகள் தொகு

பரிவார மூர்திகளாக இடப்புறமாக பிள்ளையாரும் பக்கத்தே கோபால கிருஷ்ணரும், வலப்பக்கமாக முருகமூர்த்திக்கான சந்திதிகளும் உள்ளது. பிரதான நுழைவாயிலை கடந்தால் வலப்பக்கமாக மேற்கு நோக்கி நாகதம்பிரானுக்கான சந்நிதி உண்டு. (மணி கோபுரத்துடன்)

ஆலய பூசகர்கள் தொகு

தெற்கு புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த அப்பாசி ஐயர், காசி ஐயர் ஆகியோர் ஆரம்பத்தில் இவ் ஆலயத்தின் பூசைகளை பொறுப்பேற்று நடாத்திவந்தனர். இதன்பின்னர் பிரம்மஸ்ரீ குமாரசாமி ஐயர் மற்றும் பிரம்மஸ்ரீ இளையதம்பி ஐயர் ஆகியோர் பூசைகளை செய்து வந்தனர். இவர்களின் முதுமை காரணமாக தொடர்ந்து வடக்கு புன்னாலைக்கட்டுன் பிரம்மஸ்ரீ நடராஜ ஐயர், அவரின் மகன், அவரின் மருமகன்கள் என வழிவழி இவர்களே தற்போதைய அர்சகர்களாக இருக்கிறார்கள் என்பதுடன் தற்போதைய மூத்த பிரசைகளால் அறியப்பட்டவர்களாகும். மிப்பெரிய அதிக வடமாலையுடன் கூடிய வழிபாடுகள் இவர்கள் காலத்தில் இருந்தே ஆரம்பிக்கப்பட்டமை சிறப்பு அம்சமாகும்.

ஆலய தருமகர்த்தாக்கள் தொகு

இடைக்காலத்தில் இருந்து தர்மகர்த்தாவாக சின்னக்குட்டி விதானையாரும். தொடர்ந்து சங்கரப்பிள்ளை விதானையாரும் செயல்பட்டனர். 1958 ஆம் ஆண்டு தொடக்கம் சின்னக்குட்டி கனகசபை அவர்களும், 1978 ஆம் ஆண்டு தொடக்கம் கனகசபை இலங்கைநாயகம் அவர்களும் தர்மகர்த்தாக்களாகச் செயல்பட்டனர். 1988 ஆம் ஆண்டு பொதுமக்களால் ஆலய பரிபாலன சபை உருவாக்கப்பட்டு அனைத்து நிர்வாகச் செயற்பாடுகளையும் பொறுப்பெடுத்துச் செயல்பட்டனர்.

சிறப்பு உற்சவங்கள் தொகு

  • தை முதல் திகதி விசேட உற்சவம்

தமிழுக்கு தை மாதம் முதலாம் திகதி பொங்கலுடன் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஊஞ்சல் வழிபாடு வெகு விமர்சையாகக் கொண்டாடுவது வழக்கமாகும்.

பங்குனி பூசநட்சத்திரத்தில் தொடங்கி பன்னிரண்டு அலங்கார உற்சவம் நடைபெற்று, அலங்கார மூர்த்தியாக உள்வீதி, வெளிவீதி உலா வருவார்.

  • வைகாசி பொங்கல்-பழமடை

ஆதியில் பௌர்ணமி தேய்பிறை அட்டமி திதியில் வைகாசி பொங்கல்-பழமடை நடைபெற்று வந்தது. இந்நிகழ்வில் வீட்டுப் பாவனையில் உள்ள பழங்களுடன், முக்கனிகள் முக்கிய இடம் பெறும். முதலில் கோயிலின் முன்றலில் மக்கள் பொங்கல் பொங்கி வைரவருக்கு படைப்பார்கள். தத்தமது பழங்களை அலங்காரமாக கோபுர வடிவில் அடுக்கி வெற்றிலை, பாக்கும் கூடவே வைத்து ஊதுவத்திகள் ஏற்றி வைப்பார்கள். இவர்களின் பழமடையை தடுமாற்றம் இல்லாமல் இனம் கண்டுகொள்வதற்காக ஏற்பாட்டுக் குழுவினரால் உரியவர்களின் பெயர் பொறிக்கப்பட்ட சிட்டையை பலாப்பழ துண்டில் ஒட்டிவிடுவார்கள். பூசை வழிபாடு முடிந்ததும் தேவைப்படும் பக்தர்களுக்கு பொங்கலும், பழமும் பரிமாறியபின் மிகுதியை வீட்டிற்கு எடுத்துச்செல்வார்கள். இது சொந்த பந்தங்கள், நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும் பக்தியுடன் கூடிய ஒரு நிகழ்வாகும்.

இடப்பெயர்வு தொகு

முதலாவது இடப்பெயர்விற்கு பின் அதாவது 1986 சனவரி 13 இற்கு பிற்பாடு வழிபாடுகள் எதுவும் இடம்பெறவில்லை. 1987 சூலையில் இந்திய அமைதிப்படை வருகையின் பின்னர் உருவாகிய சமாதான காலத்தில் மீண்டும் தமது சொந்த இடங்களில் குடியமர்வதற்கான அனுமதி வழங்கப்பட்டு, 1½ வருடங்கள் படிப்படியாக வளமையான நாளாந்த பூசை வழிபாடுகள் இடம்பெற்று வந்தன. 1990 ஆம் ஆண்டு சூன் மாதம் 15 ஆம் திகதி மீண்டும் இரண்டாவது இடப்பெயர்வில் ஆலயம் பல ஆண்டுகளாகக் கண்டுகொள்ளப்படவில்லை.

இடப்பெயர்வு கால வழிபாடுகள் தொகு

இடப்பெயர்வு காலப்பகுதியில் இடையிடையே வழிபட்டு வந்தாலும், 2015 ஆம் ஆண்டில் இருந்து ஆலய நிர்வாக கட்டமைப்பினை ஏற்படுத்தி மக்கள் ஒழுங்குமுறைப்படி வைகாசி விசாகப் பொங்கல்-மடை மற்றும் தைப்பூசம் ஆகிய விசேட நிகழ்வுகளை படைத்தரப்பின் அனுமதி பெற்று நடாத்தி வழிபட்டு வந்தனர்.

ஆலயம் விடுவிப்பு தொகு

மக்களினதும். அமைப்பக்களினதும் தொடர் போராட்டங்கள், பேச்சுவார்த்தைகளின் பயனாக, 28 வருடகாலமாக இராணுவ கட்டமைப்பில் இருந்த இவ்வாலயம் 19.6.2018 செவ்வாய்க்கிழமை அன்று விடுதலை பெற்றது. ஆலய சுற்றாடலில் இருந்த குடியிருப்பு பகுதிகளில் பன்னிரண்டு எக்கர் நிலப்பரப்பும் கூடவே மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

வெளி இணைப்புகள் தொகு