அச்சுவேலி
அச்சுவேலி (Atchuvely) என்பது இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் கிழக்கு பகுதியில் உள்ள கிராமமாகும். இதன் உப பிரிவுகளாக இடைக்காடு, வளலாய், தம்பலை, பத்தமேனி, கதிரிப்பாய் போன்ற கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளன. இக்கிராமத்தின் வடக்கே தொண்டைமானாறும், தெற்கே ஆவரங்காலும், மேற்கே ஓட்டகப்புலம், வசாவிளானும், கிழக்கே வல்லை கடலின் தொடர்ச்சியுடன் கூடிய பரந்த வயல் வெளியும் பற்றைக் காடுகளும் காணப்படுகின்றன.[1]
அச்சுவேலி | |
---|---|
கிராமம் | |
நாடு | ![]() |
மாகாணம் | வடக்கு |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
நேர வலயம் | இலங்கை சீர் நேரம் (ஒசநே+5:30) |
இங்கு வசிப்பவர்கள் பெருமளவு விவசாயப் பின்னணியை கொண்டவர்களாகவே காணப்படுகின்றனர். இந்து, கிறித்தவ மதங்களை பின்பற்றி வருகின்றனர். பல இந்து ஆலயங்கள் காணப்படுவதுடன் இரண்டு கிறித்தவ தேவாலயங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
பெயர்க் காரணம் தொகு
அச்சுவேலி ஒரு காரணப் பெயராக உருவானது. யாழ்நகரில் இருந்து பருத்தித்துறைக்குச் செல்லும் பெருந்தெரு, அச்சுவேலியை மையமாகக் கொண்டே செல்கின்றது. இதனால், யாழ்ப்பாணத்தையும் பருத்தித்துறையையும் இணைக்கும் வண்டிச்சக்கர அச்சுப்போல் இக்கிராமம் இருந்து “அச்சுவேலி” என நாமகரணம் பெற்றதென்பது ஒரு வரலாறு.
கோயில்கள் தொகு
- காட்டுமலைக் கந்தசுவாமி கோயில் (அச்சுவேலி தெற்கு)
- சித்திர வேலாயுதர் கோயில் (அச்சுவேலி வடக்கு)
- மகிழடி வைரவர் கோயில் (அச்சுவேலி நகரப்பகுதி)
- பத்தமேனி பிள்ளையார் கோயில் (அச்சுவேலி பத்தமேனி)
- சிவசக்தி கோயில் (அச்சுவேலி தெற்கு)
- போதிப்பிள்ளையார் கோயில் (அச்சுவேலி தோப்பு)
- பயித்தோலை நரசிம்ம வைரவர் கோவில் (அச்சுவேலி மத்தி)
- முனியப்பர் கோயில் (அச்சுவேலி வல்லை வீதி)
- புனித சூசையப்பர் ஆலயம் (அச்சுவேலி மேற்கு / தென்மூலை)
- அந்தோனியார் கோயில் (அச்சுவேலி வடக்கு)
- புரட்டத்தாந்து ஆலயம் (அச்சுவேலி நகரப்பகுதி)
பாடசாலைகள் தொகு
அச்சுவேலியில் மூன்று பாடசாலைகள் உள்ளன.[2]
- அச்சுவேலி மத்திய கல்லூரி
- அச்சுவேலி சரசுவதி வித்தியாசாலை
- புனித திரேசா மகளிர் கல்லூரி
அச்சுவேலியைச் சேர்ந்த பெரியார்கள் தொகு
- சுவாமி ஞானப்பிரகாசர் (வளர்ந்தது)[3]
- பாவலர் தம்பிமுத்துப்பிள்ளை[3]
- சேர் சிற்றம்பலம் கார்டினர்[4]
- பேராசிரியர் நந்தி
- பேராசிரியர் பாலசுப்ரமணியம்
மேற்கோள்கள் தொகு
- ↑ யாழ்ப்பாண மாவட்ட நிலப்படம்
- ↑ "வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாடசாலைகள்". http://www.valikamameast.ds.gov.lk/index.php?option=com_content&view=article&id=28&Itemid=23&lang=en.
- ↑ 3.0 3.1 நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம். 1975. பக். 5. http://noolaham.net/project/08/789/789.pdf.
- ↑ Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. பக். 54. http://www.noolaham.org/wiki/index.php?title=Dictionary_of_Biography_of_the_Tamils_of_Ceylon.