பிரபா ஆத்ரே
பிரபா ஆத்ரே (Prabha Atre, 13 செப்டம்பர் 1932 – 13 சனவரி 2024) கிரானா கரானாவைச் (பாடும் பாணி) சேர்ந்த ஒரு இந்துஸ்தானி இசைப் பாடகராவார். இவர் 11 புத்தகங்களை (ஒரே சமயத்தில்) வெளியிட்ட உலக சாதனையைப் படைத்துள்ளார். 18 ஏப்ரல் 2016 அன்று புதுதில்லியில் உள்ள இந்தியா வாழ்விட மையத்தில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இசை குறித்த 11 புத்தகங்களை வெளியிட்டார்.
பிரபா ஆத்ரே | |
---|---|
பிறப்பு | புனே, பம்பாய் மாகாணம், இந்தியா | 13 செப்டம்பர் 1932
இறப்பு | 13 சனவரி 2024 புனே, மகாராட்டிரா | (அகவை 91)
படித்த கல்வி நிறுவனங்கள் | புனே பல்கலைக்கழகம் (இளங்கலை) கந்தர்வ மகாவித்யாலயா இசைப்பள்ளி (முனைவர்) |
செயற்பாட்டுக் காலம் | (1950 - தற்போது வரை) |
விருதுகள் | சங்கீத நாடக அகாதமி விருது (1991) |
புகழ்ப்பட்டம் | பத்மசிறீ (1990) பத்ம பூசண் (2002) |
வலைத்தளம் | |
www |
ஆரம்பகால வாழ்க்கையும் பின்னணியும்
தொகுபுனேவில் அபாசாகேப் மற்றும் இந்திராபாய் ஆத்ரே ஆகியோருக்கு பிரபா பிறந்தார். குழந்தைகளாக, பிரபாவும் இவரது சகோதரி உஷாவும் இசையில் ஆர்வம் காட்டின. ஆனால் இவர்கள் இருவருமே இசையை ஒரு தொழிலாகத் தொடரத் திட்டமிட்டதில்லை. பிரபாவுக்கு எட்டு வயதாக இருந்தபோது, இவரது தாய் இந்திராபாய் நல்ல ஆரோக்கியத்தைக் கொண்டிருக்கவில்லை. பாரம்பரிய இசைப் பாடங்கள் அவரை நன்றாக உணர உதவும் என்று ஒரு நண்பரின் ஆலோசனையின் பேரில், அவர் சில பாடங்களை கற்ருக்கொள்ள ஆரம்பித்தார். அந்தப் பாடங்களைக் கேட்பது பிரபாவுக்கு பாரம்பரிய இசையைக் கற்கத் தூண்டியது.
இவரது இசை பயிற்சி குருகுலப் பாடசாலை பாரம்பரியத்தில் இருந்தது . இவர் சுரேஷ்பாபு மானே மற்றும் கிராபாய் பரோடேகர் ஆகியோரிடமிருந்து கிரானா கரானாவிலிருந்து பாரம்பரிய இசையைக் கற்றுக்கொண்டார். கியாலுக்கு அமீர் கான், தும்ரிக்கு படே குலாம் அலி கான் ஆகிய இரு பெரியவர்களின் செல்வாக்கை இவர் தனது கயாகியில் கொண்டுவந்தார்.
இசையைப் படிக்கும் போது, இவர்அறிவியலிலும், சட்டத்தையும் முடித்து பட்டம் பெற்றார். பின்னர் இசையில் சர்கம் என்ற ஆய்வறிக்கைக்கு முனைவர் பட்டமும் பெற்றார். மேலும் இந்திய பாரம்பரிய இசையில் சோல்-ஃபா குறிப்புகள் (சர்கம்) பயன்படுத்துவது தொடர்பானது .
விருதுகள்
தொகு- 1976 - இசைக்கு ஆச்சார்யா ஆத்ரே விருது .
- ஜகத்குரு சங்கராச்சாரியார் "கான-பிரபா" என்ற பட்டத்தை வழங்கினார்
- இந்திய அரசு 1990இல் பத்மசிறீ விருதையும், 2002இல் பத்ம பூசண் விருதையும் வழங்கியது [1]
- 1991 - சங்கீத நாடக அகாதமி விருது
- ஜயண்ட்ஸ் சர்வதேச விருதான, ராஷ்டிரிய காளிதாஸ் சம்மன்
- விருது
- தாகூர் அகாடமி ரத்னா விருது 2011 இல் சங்கீத நாடக அகாடமியிலிருந்து அறிவிக்கப்பட்டது
- தீனநாத் மங்கேசுகர விருது
- அபீஸ் அலிகான் விருது
- சர்வதேச குளோபல் ஆக்சன் சங்கம் வழங்கும் வாழ்த்து
- கோதாவரி கௌரவ் புரஸ்கார்
- ஆச்சார்யா பண்டிட் ராம் நாராயண் அறக்கட்டளை விருது மும்பை
- உஸ்தாத் பையாஸ் அகமது கான் நினைவு விருது ( கிரானா கரானா )
- இசை சாதனா ரத்னா விருது
- புனே பல்கலைக்கழகத்தின் 'வாழ்நாள் சாதனை' விருது
- மும்பை மேயரின் பாராட்டு, தேசிய மற்றும் சர்வதேச வாழ்க்கை வரலாற்றுப் படைப்புகளில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
- இவரது சுரமாயி புத்தகத்திற்கு மாநில அரசு விருது.
2011 ஆம் ஆண்டு முதல் "சுவரயோகினி டாக்டர் பிரபா ஆத்ரே ராஷ்டிரிய சாஸ்திரிய சங்க புராஸ்கர்" என்ற அரக்கட்டளாஇ தத்யாசாகேப் நேச்சு அறக்கட்டளையும் கன்வர்தன் புனே என்பராலும் நிறுவப்பட்டது.
குறிப்புகள்
தொகு- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
வெளி இணைப்புகள்
தொகு- Official website பரணிடப்பட்டது 2017-04-25 at the வந்தவழி இயந்திரம்
- India's 50 Most Illustrious Women (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-88086-19-3) by Indra Gupta
- The Great Masters: Profiles in Hindustani Classical Vocal Music by Mohan Nadkarni
- List of Padma Bhushan recipients. Retrieved 2009-06-28.