தீனநாத் மங்கேசுகர்
பண்டிட் தீனநாத் மங்கேசுகர் (Deenanath Mangeshkar) ( 29 திசம்பர் 1900 - 24 ஏப்ரல் 1942) இவர் ஒரு பிரபலமான மராத்தி நாடக நடிகரும், புகழ்பெற்ற இசை நாடகக் கலைஞரும், இந்துஸ்தானி இசைப் பாடகருமாவார். இவர், பிரபல பாடகர்களான லதா மங்கேசுகர், ஆஷா போசுலே, மீனா கதிகர், உஷா மங்கேசுகர் மற்றும் இசையமைப்பாளர் இருதயநாத் மங்கேசுகர் ஆகியோரின் தந்தை ஆவார்.
பண்டிட் தீனநாத் மங்கேசுகர் | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | தீனநாத் ஆர்திகர்[1] |
பிற பெயர்கள் | பண்டிட் தீனநாத் மங்கேசுகர் பண்டிட் தீனநாத் ஆர்திகர் தினா |
பிறப்பு | மங்கேசி கிராமம், போர்த்துகேய இந்தியா (தற்போதைய கோவா, இந்தியா) | 29 திசம்பர் 1900
இறப்பு | 24 ஏப்ரல் 1942 புனே, மும்பை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய புனே, மகாராட்டிரம், இந்தியா) | (அகவை 41)
இசை வடிவங்கள் | பாரம்பரிய இசை, அரைப் பாரம்பரிய இசை, இசை நாடகம் |
தொழில்(கள்) | குரலிசைக் க்லைஞர், பாடகர், மராத்தி திரைப்படத் தயாரிப்பாளர் |
பின்னணி
தொகுபண்டிட் தினா என பிரபலமாக அழைக்கப்படும் தீனநாத் மங்கேசுகர் (பிறப்பு தீனநாத் ஆர்திகர்), 1900 திசம்பர் 29 அன்று கோவாவின் மங்கேசி கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை கணேஷ் பட் நவதே ஆர்திகர் [2] ஒரு கர்கடே பிராமணச் சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் கோவாவின் புகழ்பெற்ற மங்கேசி சிவன் கோவிலில் பூசாரியாக பணியாற்றினார். இவரது தாயார் யேசுபாய் (சில சமயங்களில் யேசுபாய் ரானே என்று அழைக்கப்பட்டார்) கோவாவின் தேவதாசி சமூகத்தைச் சேர்ந்தவர். இது இப்போது கோமந்தக் மராத்தா சமாஜம்என்று அழைக்கப்படுகிறது. குடும்பம் கோவாவின் மங்கேசி கிராமத்தில் வாழ்ந்ததாலும், இவர் அங்கே பிறந்ததாலும், இவருக்கு "மங்கேசுகர்" என்ற குடும்பப்பெயர் வழங்கப்பட்டது. தற்செயலாக, மங்கேசு என்பது மங்குசே கோயிலில் வழிபடும் தெய்வத்தின் பெயராகவும் இருந்தது.
தொழில்
தொகுஇவர் தனது ஐந்து வயதில் பாபா மசேல்கரிடமிருந்து இசைப் பாடங்களை கற்கத் தொடங்கினார். இவர் குவாலியர் பள்ளியில் சீடராகவும் இருந்தார். கயனாச்சார்யா பண்டிட் இராமகிருட்டிண புவா வழேயின் பலவகை மற்றும் ஆக்கிரமிப்பு பாணியால் இவர் ஈர்க்கப்பட்டார். தனது இளமை பருவத்தில், பிகானேருக்குச் சென்று, கிரானா கரானாவைச் சேர்ந்த பண்டிட் மணி பிரசாத்தின் தந்தை பண்டிட் சுக்தேவ் பிரசாதிடமிருந்து பாரம்பரிய இசையில் முறையான பயிற்சியைப் பெற்றார். இவர் தனது 11 வயதில் கிர்லோசுகர் இசை மண்டலியிலும், கிர்லோசுகர் நாடக மண்டலியில் சேர்ந்தார். பின்னர், இவர் கிர்லோசுகர் மண்டலியை விட்டு வெளியேறி, தனது நண்பர்களான சிந்தமன்ராவ் கோல்கத்கர் , கிருட்டிணாராவ் கோலாபுரே ஆகியோருடன் சேர்ந்து பல்வந்த் மண்டலியை உருவாக்கினார். இந்த புதிய குழுவில் இராம் நரேஷ் கட்கரியின் ஆதரவு இருந்தது. ஆனால் குழு அமைக்கப்பட்ட சிறிது காலத்திலேயே; கட்கரி 1919 சனவரியில் இறந்து போனார்.
சொந்த வாழ்க்கை
தொகுமுதல் திருமணம்
தொகுமகாராட்டிராவின் தல்னர் நகரத்தின் ( துலே மற்றும் ஜள்காவ் இடையே ஒரு வளமான தொழிலதிபரான சேத் அரிதாசு ராம்தாசு லாட் என்பவரின் மகளான நர்மதா என்பவருடன் 1922 இல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு லத்திகா என்ற மகள் பிறந்து, குழந்தை பருவத்திலேயே இறந்துவிட்டார். அதன்பிறகு இவரது மனைவியும் இறந்து போனார்.
இரண்டாவது திருமணம்
தொகுஇவர் தனது முதல் மனைவியின் சகோதரி செவந்தி என்பவரை 1927 இல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணத்தின் மூலம் இவர்களுக்கு லதா மங்கேஷ்கர், மீனா, ஆஷா போஸ்லே,உஷா மங்கேஷ்கர், மற்றும் இருதநாத் என்ற ஐந்து குழந்தைகள் பிறந்தனர்.
இறப்பு
தொகு1942 ஏப்ரல் மாதத்தில் புனேவில் தனது 41 வயதில் இறந்தார். இவரது குடும்பத்தினர் புனேவில் தீனநாத் மங்கேசுகர் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை அமைத்துள்ளனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Deenanath Mangeshkar. Marathisanmaan (3 September 2014). Retrieved on 2018-12-02.
- ↑ Ganesh Bhatt Abhisheki (deceased) - Genealogy. Geni.com (25 May 2018). Retrieved on 2018-12-02.
வெளி இணைப்புகள்
தொகு- Deenanath Mangeshkar Hospital,Pune பரணிடப்பட்டது 2014-03-12 at the வந்தவழி இயந்திரம்
- Deenanath Mangeshkar Award