உஷா மங்கேஷ்கர்
உஷா மங்கேஷ்கர் (Usha Mangeshkar)(மராத்தி: उषा मंगेशकर, இந்தி: उषा मंगेशकर) இந்தியப் பாடகி. இவர் பல பாடல்களை இந்திய மொழிகளான இந்தி, வங்காளம், மராத்தி, கன்னடம், நேபாளம், போஜ்பூரி, குஜராத் மற்றும் அஸ்ஸாம் மொழியில் பாடியுள்ளார்.
உஷா மங்கேஷ்கர் | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | 15.12.1935 மும்பை, பாம்பே பிரசிடென்சி |
இசை வடிவங்கள் | இந்திய தொன்ம இசை பாடுபவர் |
தொழில்(கள்) | பாடகி |
இசைக்கருவி(கள்) | வாய்ப்பாட்டு |
இசைத்துறையில் | 1954 |
வாழ்க்கை குறிப்பு
தொகுஇவர் பண்டிட்தீனாநாத் மங்கேஷ்கர் - ஷெவந்தி (சுதாமதி) தம்பதியின் இரண்டாவது மகளாவார். லதா மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே மற்றும் மீனா கடீகருக்கு இளைய சகோதரியாவார். பிரபல இசை இயக்குநர் ஹிருதய்நாத் மங்கேஷ்கர் இவரது சகோதரன். குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட "ஜெய் சந்தோஷி மா" என்னும் திரைப்படத்தில் பக்தி பாடல்களைப் பாடியதின் மூலமாக பிரபலமடைந்தார்.[1] அப் படத்தில் பாடிய "மைன் டு ஆர்தி" பாடலுக்காக பிலிம்பேர் சிறந்த பெண் பின்னணிப் பாடகி விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டார்.
தொழில்
தொகுஉஷா மங்கேஷ்கர், ஓவியம் வரைவதில் ஈடுபாடு உடையவர். இவர் "பிஞ்ஞாரா" மராத்தி மொழியில் வெளிவந்த திரைப்படத்தில் "முங்லா" எனத் தொடங்கும் பாடல் மூலம் அறியப்படுகிறார். "பூல்வந்தி" என்கிற தொலைக்காட்சித் தொடரை தயாரித்துள்ளார்.
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்
தொகுசிறந்த பெண் பின்னணிப் பாடகி விருது பிஎஃப்ஜேஏ விருதுகள் "ஜெய் சந்தோஷி மா" (1975) படத்தில் பாடியதற்காக இவருக்கு கிடைத்தது[2].
மைன் டு ஆர்தி" என்ற பாடலுக்காக பிலிம்ஃபேர் விருதுக்கு(1975) பரிந்துரை செய்யப்பட்டார்.
"இங்கார்" (1978) திரைப்படத்தில் இவர் பாடிய "மங்டா ஹை டொ ஆஜா" எனத் தொடங்கும் பாடலுக்கு பிலிம்ஃபேரின் சிறந்த பெண் பின்னணிப் பாடகி விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டார்.[3]
1980இல் வெளிவந்த (இக்ரார்) இந்தி திரைப்படத்தில் "ஹம்சே நாசர் டு மிலாஒ" எனத் தொடங்கும் பாடலைப் பாடியதற்காக பிலிம்ஃபேரின் சிறந்த பெண் பின்னணிப் பாடகி விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டார்.
பிரபலமான பாடல்கள்
தொகு- "பாபி ஆயி படி தூம் தாம் சே மேரி பாபி ஆயி" - "சுபா கா டாரா (1952)
- "மைன் டு ஆர்தி உடரூன்" - ஜெய் சந்தோஷி மா (1975)
- "அப்லம் சப்லம்" - ஆசாத் (1955)
- யாரிவ நன் மன", கன்னட மொழி பாடல் - கிரந்திவீர சங்கொலி ராயண்ணா (1967)
- கட்டா மீடா" - கட்டா மீடா (1978)
- சுல்தானா சுல்தானா" - டரானா (1979)
- கோரோ கி னா காலோன் கி" - டிஸ்கோ டான்சர் (1981)
- கஹெ டரசயெ ஜயரா" - சித்திரலேகா (1964), ஆஷா போஸ்லே யுடன் இணைந்து பாடியுள்ளார்.
- முங்லா" - இங்கார் (1978)
- பக்டோ, பக்டோ, பக்டோ" - 'நசீப் (1980)
- ரங் ஜமகெ ஜாயேங்கே"- நசீப் (1980)
- சாரே நியாம் டொட் டு" - குப்சூரத் (1980)
- முஜே ப்யார் கா டோஃபா டேகே" - காலா பத்தர் (1979)
- ஓ சலி சலி கைசி ஹவா யெ சலி" - பிளஃப் மாஸ்டர் (1964)
- சோனா-னொ சூரஜ் உக்யொ - "நூரனி செஹரா
- ஆவோ ஆவோ மோமினொ சகு ஆவோரே" - நூரனி செஹரா
மராத்தி மொழியில் வெளியான "பிஞ்ஞாரா" படத்தில் இவர் பாடிய "தகல லக்லி கலா", மற்றும் "தும் ஹவார் கேலி மி மர்ஜி பகர்" பாடல்கள் புகழ் பெற்றவை. .