சங்கீத நாடகம்

சங்கீத நாடகம் (Sangeet Natak ) என்றால் மராத்தி மொழியில் இசை நாடகம் என்று பொருள். பெயர் குறிப்பிடுவது போல, இந்த நாடக வடிவம் உரைநடை மற்றும் கவிதைகளை பாடல்களின் வடிவத்தில் இணைத்து கதையை வெளிப்படுத்துகிறது. ஒரு வகையில், அவை இசையுடன் மிகவும் ஒத்தவை. மராத்தி நாடக அரங்குகளின் வளர்ச்சியில் சங்கீத நாடகங்கள் முக்கிய பங்கு வகித்தது. இதனால் மராத்தி திரையுலகம் மற்றும் இந்தியத் திரைப்படத்துறை ஆகியவற்றில் ஒரு முக்கிய பங்கை பெற்றது.[1] சங்கீத நாடகம் இறைவன் நடராசனைப் புகழ்ந்து தொடங்கப்படுகிறது. இது நாந்தி அல்லது மங்களச்சரணம் அல்லது சுச்சக்பாத் என்று அழைக்கப்படுகிறது. இந்திய பாரம்பரிய இசையைப் பயன்படுத்த அவை பிரபலமாக உள்ளன. மகாராட்டிரா மற்றும் அதைச் சுற்றியுள்ள மாநிலங்களில் பிரபலமான இரண்டு குரல் கலைகளில் ஒன்றான நாட்டிய சங்கீதம் என்று அழைக்கப்படுகிறது. மற்றொன்று பாவகீதம் என்பதாகும்.

சங்கீத நாடகம்
நாகரிகம் துவக்கம்
மண்பாட்டு தொடக்கம்
19 ஆம் நூற்றாண்டு , மகாராட்டிரா
இசைக்கருவிகள்

வரலாறு

தொகு

ஆரம்பம்

தொகு

விஷ்ணுதாசு பவே மராத்தி நாடக அரங்கங்களின் நிறுவனர் என்று கருதப்படுகிறார். 1843ஆம் ஆண்டில், இவரது குழு மராத்தி நாடகத்தின் சீதா சுயம்வர் முதல் பொது நிகழ்ச்சியை நடத்தியது. நாடகங்களில் இசையின் ஒருங்கிணைப்பு 1879ஆம் ஆண்டில் மிகவும் தாமதமாகவே நடந்தது. நாடக எழுத்தாளரும் தயாரிப்பாளருமான திரிலோகேக்கர் தனது இசை நாடகமான நள- தமயந்தியை வழங்கினார். மராத்தி மேடையில் இதுவே முதல் இசை நாடகம் ஆகும்.

ஆனால் பல்வந்த் பாண்டுரங் கிர்லோசுகர் (அன்னாசாகேப் கிர்லோசுகர் என்று பிரபலமாக அறியப்படுபவர்) தனது முதல் இசை நாடகமான சாகுந்தலையை காளிதாசரின் அபிஞான சாகுந்தலம் என்ற நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு அரங்கேற்றியபோதுதான், 1880 அக்டோபர் 31, அன்று புனேவில் சங்கீத நாடகத்தின் போக்கு உண்மையில் தொடங்கியது. கிர்லோசுகர் தனது 7 செயல்களின் சாகுந்தலை நாடகத்தின் ஏழு பகுதிகளிலும் 209 இசைக் கோர்வைகளைச் சேர்த்துள்ளார். அவை இந்துஸ்தானி மற்றும் கருநாடக இசை மற்றும் மெல்லிசையின் கலவையைக் கொண்டிருந்தன. ஆரம்ப காலகட்டத்தில், சங்கீத நாடகத்தில் இசை சவுத்ரா போன்ற மத நாடகங்கள் ஆதிக்கம் செலுத்தின.

பொற்காலம்

தொகு

சங்கீத நாடகத்தின் புதிய போக்கு மிக விரைவாக பிரபலமடைந்தது. பிரித்தானிய இராச்சியம் அப்போது இந்தியாவில் இருந்ததால், சங்கீத நாடகங்கள் ஆப்பெராக்களுடன் ஒப்பிடப்பட்டது. இதனால் உள்ளூர் மராத்தியர் ஒத்த பொழுதுபோக்குகளைக் கண்டனர். சங்கீத நாடகங்கள் துவக்கத்தில் முக்கியமாக மகாபாரதம் அல்லது இராமாயணம் புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டிருந்தது. எனவே அவை மக்களுடன் எளிதாக இணைந்தது. அவை முழுமையான காவியங்களை வெளிபடுத்தவில்லை. ஆனால் அவற்றில் உள்ள சிறிய கதைகள் மட்டுமே இடம்பெற்றன..

சங்கீத நாடகங்கள் புகழ் மற்றும் வெற்றிபெற்றவுடன், புராணக் கருப்பொருள்களைக் கைவிட்டு, சமூகப் பிரச்சினைகளை பார்வையாளர்களிடம் கொண்டு வந்து மேடையில் சோதனை தொடங்கியது. உதாரணமாக, சங்கீத சாரதா, எழுபதுகளின் பிற்பகுதியில் இருந்த ஒரு வயதான, மனைவியை இழந்தவரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டிய ஒரு இளம் பெண்ணின் உணர்வுகளை சித்தரிப்பதன் மூலம், ஒரு சமூக செய்தியை வெளிப்படுத்தியது. கீசக வதம் போன்ற சில நாடகங்கள், பிரித்தானிய ஆட்சியாளர்களைத் தடைசெய்யும் அளவிற்கு தள்ளியது. திரௌபதியை அவமதிக்க முயன்ற மகாபாரதத்தில் வரும் தீய கதாபாத்திரமான கீசகனுடன் பிரித்தானியர்கள் ஒப்பிட்டப் பட்டனர். திரௌபதி அப்போது ஒடுக்கப்பட்ட பொதுவான இந்திய மக்களுடன் ஒத்ததாக இருந்தார்.

1960களில், ஜித்தேந்திர அபிஷேக்கியின் வரவால் நாட்டிய சங்கீதத்தில் மற்றொரு திருப்பம் வந்தது. அவர் நாட்டிய சங்கீதத்தின் சிக்கலான அமைப்புக்கு எளிமையைப் பயன்படுத்திய பெருமைக்குரியவர் ஆவார்.

நாடகங்கள்

தொகு

ஜீ அரங்கங்களின் சமீபத்திய கதியர் கல்ஜத் குஸ்லி நாடகம் இசைத் திரைப்படங்களின் புதிய சகாப்தத்தைத் திறந்தது. இந்தப் படம் அதே பெயரைக் கொண்ட புகழ்பெற்ற நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது. இதன் இசையை ஜிதேந்திர அபிசேகி இசையமைத்து, வசந்த்ராவ் தேஷ்பாண்டே பாடியுள்ளார்.

குறிப்பிடத்தக்க பங்களிப்புகள்

தொகு
  • சங்கீத நாடகங்களை நிறுவிய அன்னாசாகேப் கிர்லோசுகர், சங்கீத சௌபத்ரா, ராம்ராஜ்யவியோக் போன்ற பிற பிரபலமான நாடகங்களையும் வழங்கினார்.

பால் காந்தர்வாவின் காந்தர்வ நாடக் மண்டலி; வாசுதோராவ் டோங்ரேவின் டோங்ரே மண்டலி; பண்டோபா குராவ் யவடேஸ்வர்க்கரின் வைகர் இசை மண்டலி; ஜானுபாவ் நிம்கர் மற்றும் கேசவ்ராவ் போசாலேவின் சுதேஷ்-ஹிதா-சிந்தக் மண்டலி, இது லலித்-கலதர்ஷா மண்டலமாக உருவானது; மற்றும் மாஸ்டர் தினநாத்தின் பால்வந்த் நாடக் மண்டலி ஆகியவை மகாராஷ்டிராவில் உருவாக்கப்பட்ட மற்ற முக்கிய செயல்திறன் நிறுவனங்களாகும்.

  • ஜெயமாலா ஷிலேதர் (1926-2013) - 1960 முதல் 1990 வரை பஞ்ச காலத்தில் ஜெயமாலா, அவரது கணவர் ஜெயராம் மற்றும் மகள்கள் கீர்த்தி மற்றும் லதா ஆகியோர் சங்கீத நாடகத்தை உயிரோடு வைத்திருந்தனர். 'ஏகாதியாச்சா நஷிப்', மும்பைச்சி மனசா ',' அனந்த்பாண்டி ', மற்றும் அபோகி உள்ளிட்ட 25 புதிய இசைக்கலைஞர்களை அவர்கள் தங்கள் நிறுவனமான மராத்தி ரங்கபூமி மூலம் அரங்கேற்றினர். இவர் பால் காந்தர்வாவின் வழிநடத்தப்பட்டு ஆதரிக்கப்படுபவராவார்.[2]

நாட்டிய சங்கீதத்தின் மேதை

தொகு
 
தினநாத் மங்கேஷ்கர்

மேலும் காண்க

தொகு

மேலும் படிக்க

தொகு
  • Marathi book by Govindrao Tembe "माझा संगीत व्यासंग" (My Study of Music); published 1939

குறிப்புகள்

தொகு

படித்தல் பட்டியல்

தொகு
  • Asha Kasbekar (2006). Pop culture India!: media, arts, and lifestyle. ABC-CLIO. pp. 52–53. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85109-636-1.
  • Book in Marathi by Govindrao Tembe "माझा संगीत व्यासंग" (My Study of Music) 1939

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கீத_நாடகம்&oldid=3654781" இலிருந்து மீள்விக்கப்பட்டது