புனே பல்கலைக்கழகம்

புனே பல்கலைக்கழகம் அல்லது சாவித்ரிபாய் புலே புனே பல்கலைக்கழகம்[1] இந்தியாவில் உள்ள முதன்மையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். புனே நகரின் வடமேற்கில் இப்பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இது 1948ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.[2] 411 ஏக்கர் (1.7 சதுர கிலோமீட்டர்கள்) நிலத்தில் பரந்து விரிந்துள்ள இப்பல்கலைக் கழகம்[3] தன்னிடத்தே 46 கல்விசார் துறைகளைக் கொண்டுள்ளது.[4] இப்பல்கலைக்கழகத்தினை கிழக்கத்திய ஒக்ஸ்போர்ட் எனவும் அழைக்கின்றனர். பெண்களின் விடுதலைக்காகவும், அதிகாரத்திற்காகவும், கல்விக்காகவும் போராடிய சாவித்ரிபாய் புலே எனும் பெண்மணியின் பெயரே பிற்காலத்தில் இப்பல்கலைக்கழகத்திற்கு சூட்டப்பட்டது.[5]

புணே பல்கலைக்கழகம்
University of Pune
पुणे विद्यपीठ
University of Pune.

குறிக்கோள்:Yah Kriyaawaan Sa Panditaha. (Learned is one who is ceaselessly active.)
நிறுவல்:பிப்ரவரி 10, 1949
வகை:பொது
அமைவிடம்:புனே, மகாராஷ்டிரா, இந்தியா
வளாகம்:நகர்ப்புற வளாகம்
சார்பு:UGC
இணையத்தளம்:unipune.ernet.in

இங்கு பற்பல ஆராய்ச்சி நிலையங்கள், இணைக்கப்பட்ட கல்லூரிகள், திணைக்களங்கள் போன்றவை அமைந்துள்ளன.[6][7]

வரலாறுதொகு

1948ஆம் ஆண்டு ஃபிப்ரவரித் திங்கள் பத்தாம் நாள் அன்று மும்பை சட்டசபை அமலாக்கிய பூனா பல்கலைக் கழகச் சட்டம் என்பதன் கீழாக புனே பல்கலைக் கழகம் நிறுவப்பட்டது. 1948ஆம் வருடத்திலேயே டாக்டர். எம்.ஆர். ஜயகர் இப்பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தர் பதவியை ஏற்றார். அப்போதைய முதலமைச்சர் மற்றும் மும்பை நகரின் கல்வியமைச்சராக இருந்த திரு பி.ஜி.கெர் இந்தப் பல்கலைக் கழகம் தனது வளாகத்திற்காகப் பெரும் இடம் பெறுவதை உறுதி செய்தார். 1950ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில், இந்தப் பல்கலைக் கழகத்திற்கு 411 ஏக்கர்கள் (அதாவது 1.7 சதுர கிலோமீட்டர்கள்) ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இந்தப் பல்கலைக் கழகம் நிறுவப்பட்டுள்ள இடத்திற்கு வரலாற்று ரீதியான முக்கியத்துவம் உண்டு. கட்கிப் போர் நிகழ்கையில் அதன் சில சம்பவங்கள் தற்போது புனே பல்கலைக் கழகம் நிறுவப்பட்டுள்ள இடத்தில் நிகழ்ந்தன. தற்போதைய பிரதானக் கட்டிடம் 1864ஆம் ஆண்டு கட்டமைக்கப்பட்டு ஆளுனர் இல்லம் எனப்பட்டது.

மதிப்பீடுகளை வழங்குவதில் நெகிழ்வற்ற முறைமையைக் கொண்டுள்ளதால், மிகவும் கண்டிப்பான பல்கலைக் கழகங்களில் ஒன்று என இது பெயர் எடுத்துள்ளது.

அதிகார எல்லைதொகு

துவக்கத்தில், இந்தப் பல்கலைக் கழகத்தின் அதிகார எல்லை மஹாராஷ்டிரா மாநிலத்தின் மேற்குப் பகுதியின் 12 மாவட்டங்களைக் கொண்டிருந்தது. இருப்பினும், 1964ஆம் ஆண்டு கோலாப்பூர் நகரில் சிவாஜி பல்கலைக் கழகம் அமைக்கப் பெற்றவுடன், இதன் அதிகார எல்லையானது புனே, அகமதுநகர், நாசிக், துலே மற்றும் ஜல்காவுன் ஆகிய ஐந்து நகரங்களுக்குள்ளாகச் சுருங்கி விட்டது. இவற்றில் துலே மற்றும் ஜல்காவுன் ஆகிய இரண்டும் 1990ஆம் ஆண்டு நிறுவப்பட்ட வட மஹாராஷ்டிரா பல்கலைக் கழகத்தின் கீழாக இணைந்துள்ளன.

இணைப்புகள்தொகு

1949ஆம் வருடம் இந்தப் பல்கலைக் கழகத்துடன் இணைந்திருந்த கல்லூரிகள் மொத்தமாக 18 ஆகும். இவற்றில், 8000 மாணாக்கர்களுக்கும் மேலான எண்ணிக்கை கொண்டிருந்த, புகழ் பெற்ற ஃபெர்குசான் கல்லூரி, காலேஜ் ஆஃப் எஞ்சினியரிங், புனே, ஆர்மி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, புனே ஆகியவையும் அடங்கும். அதன் பிறகு, கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. 2004ஆம் வருடம் இந்தப் பல்கலைக் கழகம் 46 இளநிலைப் பட்டதாரித் துறைகள், 269 இணைப்புக் கல்லூரிகள் மற்றும் அங்கீகாரம் பெற்ற 118 ஆராய்ச்சி நிறுவனங்கள் உடனான 170,000 மாணவர்களை இளநிலை மற்றும் முது நிலை ஆகிய இரண்டு நிலைகளிலுமான பல்வேறு கல்வித் துறைகளில் கொண்டிருந்தது.[1]

இந்தப் பல்கலைக் கழகம் வித்யாவாணி என்னும் சமூக வானொலியை நடத்துகிறது. இதில் புனே பல்கலைக் கழகம் நடத்தும் பல்வேறு துறைகள், மாணவர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள், பல்கலைக் கழகத்தின் தேர்வுகள், அவற்றின் முடிவுகள் மற்றும் நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் ஆகியவை ஒலிபரப்பாகின்றன.[8] இளைஞர்களின் பிரச்சினைகளுடன் தொடர்புடையதான பல்வேறு கல்விசார் நிரல்களும் ஒலிபரப்பாகின்றன.[9]

ஆராய்ச்சிதொகு

புனே பல்கலைக் கழகம் 70 ஆராய்ச்சி நிறுவனங்களை அங்கீகரித்துள்ளது. இவற்றில், தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த வானியல் மற்றும் வானியற்பியல் ஆகியவற்றிற்கான பல்கலைக் கழகம் (Inter-University Centre for Astronomy and Astrophysics (IUCAA)), தேசிய வேதியியல் ஆய்வுக்கூடம் (National Chemical Laboratory, (NCL)), அணு அறிவியலுக்கான தேசிய மையம் (National Centre For Cell Science (NCCS)), அரசியல் மற்றும் பொருளாதாரத்திற்கான கோகலே கல்வி நிறுவனம் (Gokhale Institute of Politics and Economics (GIPE)), தொற்றுநோய்களுக்கான தேசிய நிறுவனம் (National Institute of Virology, (NIV)), இந்தியப் புள்ளியியல் கழகம் சார்ந்த ஆவணப்படுத்தல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் (Documentation Research and Training Centre(DRTC) of the Indian Statistical Institute (ISI)) ஆகியவை அடங்கும்.

புனே பல்கலைக் கழகத்துடன் தொடர்புடைய இதர ஆராய்ச்சி நிறுவனங்கள் பின்வருமாறு:

 • வானொலி வானியற்பியலுக்கான தேசிய மையம் (National Centre for Radio Astrophysics). இது ஜயண்ட் மெட்ரோவேவ் ரேடியோ டெலஸ்கோப் என்பதனை நடத்துகிறது.
 • முன்னேறிய முறைமைக் கணக்கிடலுக்கான மையம் (Centre for Development of Advanced Computing). பராம் வீச்சு கொண்ட மிகு திறன் வாய்ந்த கணினிகளுக்கு இதுவே தாயகமாகும்.
 • உயிரிய தகவல் நுட்பம் மற்றும் உயிரிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (Institute of Bioinformatics and Biotechnology)

துறைகள்தொகு

 
புனேவில் உள்ள புனே பல்கலைக் கழகத்தின் பிரதானக் கட்டிடம்
 • நிலவியல் துறை- இத்துறை 1950ஆம் ஆண்டு முதலில் புனே பல்கலைக் கழகத்தில் நிறுவப்பட்டது. ஒவ்வொரு வருடமும், இத்துறையில் எம்.ஏ./ எம்.எஸ்சி.,எம்.ஃபில் மற்றும் பி.ஹெச்டி என்னும் முனைவர் படிப்பு ஆகியவற்றிற்கு மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இத்துறை தொடர்பான தொலை உணர்வு மற்றும் நிலவியல் தொடர்பான தகவல் அமைப்புகள் (Remote Sensing and Geospatial Information Systems) போன்ற படிப்புகளையும் இது வழங்குகிறது.
 • உயிரியத் தகவல் மற்றும் உயிரிய நுட்பம் (ஐபிபி) - உயிரியத் தகவல் மற்றும் உயிரிய நுட்பம் என்னும் இத்துறையானது புனே பல்கலைக் கழகத்துடன் இணைந்துள்ள ஒரு சுயாட்சி கொண்ட கல்வி நிறுவனமாகும். இது உயிரியத் தகவல் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும், உயர்தர ஆராய்ச்சிச் சூழல் மனித வளம் ஆகியவற்றைக் குவிமையப்படுத்தவும் துவக்கப்பட்டது. ஐபிபி இந்தியாவின் புனே பல்கலைக் கழக வளாகத்தினுள் அமைந்துள்ளது.
 • வேதியியல் துறை - இது புனே பல்கலைக் கழகம் முதன் முதலாகத் துவக்கிய துறைகளுள் ஒன்றாகும். இது "சிஏஎஸ்" என்னும் உயர் நிலையை (அதாவது வேதியியலில் உயர் கல்விக்கான மையம் எனப் பொருள்படுவதான) நிலையைப் பெற்றுள்ளது.
 • நுண்ணுயிரியல் துறை - இத்துறையும் பல்கலைக் கழகத்தினுள் சுயாட்சி பெற்றுள்ள ஒரு துறையாகும். இது நுண்ணுயிரியல் தொடர்பான நோய் எதிர்ப்பியல், மருத்துவ நுண்ணுயிரியல், தொழிற்துறை நுண்ணுயிரியல் மற்றும் உயிரிய நுண்ணுயிரியல் ஆகிய படிப்புகளை வழங்குகிறது.
 • மேலாண்மை அறிவியற் துறை - இது பல்கலைக் கழகம் நடத்தும் ஒரு வணிகப் பள்ளியாகும்.
 • உயிரிய நுட்பத் துறை - 1985ஆம் ஆண்டு உயிரிய நுட்பத்திற்கான தேசிய வாரியம், இப்படிப்பில் முதுகலைப் பட்டம் வழங்கத் தகுதியுள்ள ஐந்து மையங்களில் ஒன்றாக புனே பல்கலைக் கழகத்தைத் தேர்ந்தெடுத்தது.
 • சுற்றுச்சூழல் அறிவியற்துறை - இத்துறை முதலில் ஒரு துறை சார்ந்த கல்வியாக 1978ஆம் ஆண்டு புனேவில் உருவாகியது. இதன் முதற்படியாக, அனைத்து அறிவியற் துறைகளிலும், சுற்றுச் சூழல் அறிவியல் ஒரு விருப்பப் பாடமாக அறிமுகமானது. விரைவிலேயே இதன் புகழ் ஓங்கியதன் விளைவாக பி.எஸ்சி (அப்ளைட்) என்னும் ஒரு இளங்கலைப் பட்டம் 1986ஆம் ஆண்டு துவக்கப்பட்டுப் பின்னர் முழு நேர எம்.எஸ்சி என்னும் இரண்டு வருட முதுகலைப் படிப்பாக உயர் நிலை அடையப் பெற்றது.
 • கணினி அறிவியல் துறை - இந்தியப் பல்கலைக் கழகங்களில் கணினி தொடர்பாக அளிக்கப்படும் கல்வித்துறைகளில் மிகவும் மூத்தது இதுவேயாகும். கணினி என்பது மிகவும் குறைவாகவும், தகவல் தொழில் நுட்பம் என்பது முற்றிலும் அறியப்படாமலும் இருந்த 1980ஆம் ஆண்டுகளிலேயே ஒரு வருட கல்விசார் நிரல் ஒன்று பி.எஸ்சி (அப்ளைட்) என்னும் கணினி அறிவியல் இளங்கலைப் பட்டத்திற்கு முற்செல்வதாகத் துவங்கப்பட்டது. 1983ஆம் ஆண்டு எம்.சி.ஏ நிரலும் 1985ஆம் ஆண்டு எம்.டெக் நிரல் மற்றும் 1986ஆம் வருடம் ஒரு வருட பி.எஸ்சி.(அப்ளைட்) நிரல் ஒரு இரண்டு வருட முதுகலைப் படிப்பாக மாற்றப்பட்டதும் நிகழ்ந்தன.
 • இயற்பியல் துறை - புனே பல்கலைக் கழகத்தின் இயற்கை எழில் மிக்க வளாகத்தில் அமைந்துள்ள இது தனது நடவடிக்கைகளை 1952ஆம் ஆண்டு துவக்கியது. அதன் பிறகு இதற்கு ஏறுமுகம்தான். இன்றைய தினம் அறிவியலின் பல்வேறு எல்லைகளில் நிகழ்ந்து வரும் ஆராய்ச்சிகள், உயர்தர முதுகலை மற்றும் முனைவர் பட்டங்கள் அளிக்கும் கல்வித் துறை என இது ஒரு தேனீயின் சுறுசுறுப்புடன் இது இயங்கி வருகிறது. பருப்பொருள் அறிவியல், திண்மநிலை இயற்பியல், உறைவி நிலை இயற்பியல், நேரிலா இயக்கவியல், ஊருவி ஒளிவருடி நுண்ணியல், மேக இயற்பியல், மெலிய/ வலிய புகைப்படச்சுருள்கள், வைர மேற்பூச்சுகள், அணு மற்றும் விரைவி இயற்பியல், கிளர்கதிர் ஒளிமி, மின்னணு நீர்ம இயற்பியல், தள எதிர்மின்மம்/ அயனி நுண்ணியல், உயிரிய இயற்பியல் ஆகிய பல்வேறு துறைகளிலும் கல்விசார் மற்றும் ஆராய்ச்சி நிரல்களை இத்துறை கொண்டுள்ளது. இத்துறையில் கல்வி கற்பித்தல் நாட்டின் மிகச் சிறந்த பணி என்பதாக அங்கீகாரம் பெற்றுள்ளது. மாணவர்கள் மட்டும் அல்லாது பொதுமக்களிடமும் இத்துறை சார்ந்த பலன்களைக் கொண்டு செல்வதில் இத்துறையின் ஆசிரியர் குழுமம் மிகுந்த ஆவல் கொண்டுள்ளது. குறிப்பாக, உள்ளூர் பத்திரிகைகள், வானொலி, மராத்தி மற்றும் ஆங்கில மொழியில் வெகுஜன மற்றும் தொழில் நுட்பக் கட்டுரைகள், முன்னரே அறிந்ததை நினைகூர்வதற்கான புத்துணர் நிரல்கள், உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களுக்கான பயிற்சி நிரல்கள், வேனிற்கால நிரல்கள், இயற்பியல் மாணவர்களுக்கான ஒளிக்காட்சிப் பாடங்கள் ஆகியவற்றின் மூலம் இதனை நிறைவேற்றுகிறது. இந்திய அரசின் டிஎஸ்டியிலிருந்து அதன் ஃபிஸ்ட் (பிஸ்ட்) செயற்திட்டத்தின் கீழ் இத்துறை நிதியுதவி பெறுகிறது. இந்நிரல்களின் வாயிலாக எண்ணற்ற மாணவர்களும் ஆசிரியர்களும் பயன் அடைகின்றனர்.
 • வளிமண்டல மற்றும் வான்வெளி அறிவியல்கள்
 • மின்னணு அறிவியற் துறை
 • மாதிரியாக்கம் மற்றும் உருவகப்படுத்துதல் துறை

பல்கலைக் கழகம் நடத்தும் சுயாட்சி பெற்ற துறைகள்

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்தொகு

 • சர். மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யா புகழ் பெற்ற ஒரு இந்திய பொறியாளரும் அரசியல் மேதகையுமாவார். 1955ஆம் ஆண்டு, இந்தியாவின் மிகச் சிறந்த கௌரவமான பாரத ரத்னா விருதினை அவர் பெற்றார். அவரது பொதுத் தொண்டிற்காக பிரிட்டிஷ் அரசு அவருக்கு 'சர்' என்னும் வீரப்பட்டம் அளித்தது. ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் திங்கள் 15ஆம் நாள் பொறியாளர்களின் தினம் என அவர் நினைவாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. மேலும், இந்தியாவின் முதல் பொறியாளரும் அவரேயாவார்.
 • லீலா பூனாவாலா, ஆல்ஃபா லாவல் இந்தியா என்னும் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் பத்மஸ்ரீ பட்டம் பெற்றவரும் ஆவார்.
 • லாஸ் ஏஞ்சல்ஸ் கலிஃபோர்னியா பல்கலைக் கழக ஆராய்ச்சித் துறையின் துணைவேந்தர் சி.குமார் என்.படேல் கரியமில ஒளிமியைக் கண்டுபிடித்தவர் ஆவார். இவர் 1996ஆம் ஆண்டு, ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அறிவியலுக்கான தேசியப் பதக்கம் பெற்றார்.
 • ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தின் ஹிட்டாச்சி அமெரிக்கப் பேராசிரியரான தாமஸ் கைலத் 2000ஆம் ஆண்டு தகவல் துறையில் கருத்தாக்கம் என்பது குறித்தான தமது பங்களிப்பிற்காக ஷான்னோன் விருது பெற்றார். இவர் சிலிக்கான் வேலியின் புகழ்பெற்ற பொறியாளர் கூடத்தில் (2005) அனுமதி பெற்றுள்ளார். கணிதம் மற்றும் பொறியியல் ஆகிய துறைகளில் அளித்த பங்களிப்பிற்காக இந்திய அரசின் பத்ம பூஷண் விருதினையும் 2009ஆம் ஆண்டு இவர் பெற்றார்.
 • இந்தியாவின் மிகப்பெரும் இருசக்கர விசையுந்தித் தயாரிப்பு நிறுவனமான பஜாஜ் ஆட்டோவின் மேலாண்மை இயக்குனரான ராஜிவ் பஜாஜ்.
 • இந்திய அறிவியற் கழகத்தின் இயக்குனர் பத்மநாபன் பலராம் இவர் புனே பல்கலைக் கழகத்தில் தனது இளங்கலைப் பட்டத்தினையும், பின்னர் கார்னேஜி மெல்லான் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டத்தையும் உயர் நிலையில் பெற்றார். ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில், நோபெல் பரிசு வென்றவரான ராபர்ட் பர்ன்ஸ் வுட்வார்ட் உடன் முதுகலை முனைவு நிரல் ஒன்றில் பங்கேற்ற பின்னர் இவர் இந்திய அறிவியற் கழகத்திற்குத் திரும்பி அங்கு மூலக்கூறு உயிரிய இயற்பியல் துறை ஆசிரியர் குழுமத்தில் பணியாற்றி வருகிறார்.

குறிப்புதவிகள்தொகு

 1. "It's Savitribai Phule Pune University". Times Of India. பார்த்த நாள் 7 August 2014.
 2. "Pune University History". Pune University. பார்த்த நாள் 21 September 2013.
 3. "The University of Pune Campus". University of Pune (2010). மூல முகவரியிலிருந்து 29 September 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 29 September 2011.
 4. http://www.naac.gov.in/
 5. "Pune university to be renamed after Savitribai Phule". The Times of India. 8 July 2014. http://timesofindia.indiatimes.com/city/pune/Pune-university-to-be-renamed-after-Savitribai-Phule/articleshow/37989022.cms. பார்த்த நாள்: 22 July 2015. 
 6. "List of Affiliated Colleges and Institutions". Pune University. பார்த்த நாள் 22 September 2013.
 7. "Departments List". Pune University. பார்த்த நாள் 22 September 2013.
 8. "Visually impaired get taste of radio broadcasts". Times of India.
 9. http://www.unipune.ac.in/university_files/vidyavani.htm

புற இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புனே_பல்கலைக்கழகம்&oldid=3030679" இருந்து மீள்விக்கப்பட்டது