தேசிய உயிரணு அறிவியல் மையம்

தேசிய உயிரணு அறிவியல் மையம் (National Centre for Cell Science) என்பது தேசிய அளவிலான உயிர்த் தொழில்நுட்பம், திசு பொறியியல் மற்றும் திசு வங்கி ஆராய்ச்சி மையம் ஆகும். இது இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் புனேயில் உள்ள சாவித்ரிபாயி பூலே புனே பல்கலைக்கழக [SPPU] வளாகத்தில் அமைந்துள்ளது.[1] முன்னர் இது ”தேசிய விலங்கு திசு மற்றும் உயிரணு வளர்ப்பு வசதி" என்று அழைக்கப்பட்டது. இந்த நிறுவனம், இந்தியாவின் முதன்மையான ஆராய்ச்சி மையங்களுள் ஒன்றாகும். இது உயிரணு வளர்ப்பு, செல்-களஞ்சியம், நோயெதிர்ப்பு, குரோமாடின்-மறுவடிவமைப்பு ஆகிய பிரிவுகளில் ஆய்வு நோக்கில் செயல்படுகிறது.

தேசிய உயிரணு அறிவியல் மையம்
நிறுவப்பட்டது1986
ஆய்வு வகைபொது, உயிரியல் ஆராய்ச்சி நிறுவனம்
ஆய்வுப் பகுதிஉயிரணு உயிரியல்
பணிப்பாளர்மனோஜ் குமார் பட்
அமைவிடம்புனே, மகாராட்டிரம், இந்தியா
Campusநகரம்
Operating agencyஉயிரிதொழில்நுட்பத் துறை, இந்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு
இணையதளம்www.nccs.res.in

மேற்கோள்கள்

தொகு
  1. "National Centre for Cell Science".