கல்வி ஆண்டு
கல்வி ஆண்டு (academic year) என்பது பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு கல்வி பயிலப்படும் காலத்தை குறிக்கும் ஆண்டாகும். கல்வி ஆண்டை முதல் பருவம், இரண்டாம் பருவம் மற்றும் மூன்றாம் பருவம் என மூன்று பருவங்களாக பிரித்து மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்கிறார்கள். மூன்றாம் பருவம் முடிந்தவுடன் மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்படுகிறது. சில கல்வி நிறுவனங்கள் இரண்டு பருவங்கள் கொண்ட கல்வி ஆண்டை பின்பற்றுகிறது.
ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து
தொகுஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து நாடுகளில் கல்வி நிலையங்கள், கல்வி ஆண்டை இருபருவங்களாகப் பிரித்து (செமஸ்டர்) கல்வி பயிற்றுவிக்கின்றன.
ஐக்கிய இராச்சியம்
தொகுபிரிட்டனில் கல்வி ஆண்டு, பொதுவாக மூன்று பருவங்கள் கொண்டது. கல்வி ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கி சூலை மாதத்தில் முடிவடைகிறது.
ஐக்கிய அமெரிக்க நாடு
தொகுஐக்கிய அமெரிக்க நாட்டில் கல்வி ஆண்டு ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதத்தில் துவங்கி, மே அல்லது சூன் மாதத்தில் முடிவடைகிறது.
கல்வி நாட்கள்
தொகுஅமெரிக்காவின் அரசின் பள்ளிக்கூடங்கள், 2007-2008ஆம் கல்வி ஆண்டில் 171 முதல் 184 கல்வி நாட்கள் கொண்டிருந்தது.[1] கல்வி ஆண்டில் செயல்பட வேண்டிய பள்ளி நாட்களும் மற்றும் ஒரு பள்ளி நாளில் நடத்த வேண்டிய கல்விக்கான நேரங்களும் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது.[2]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Schools and Staffing Survey (SASS) 2007–08". National Center for Education Statistics (NCES).
- ↑ Mikulecky, M. (March 15, 2013). "Number of Instructional Days/Hours in the School Year" (PDF). Education Commission of the States.