நூர் இனாயத் கான்

நூர் இனாயத் கான் (Noor Inayat Khan அல்லது Nora Baker, சனவரி 1, 1914 - செப்டம்பர் 13, 1944), இந்திய முஸ்லிம் இனத்தவர். இரண்டாம் உலகப் போரின் போது பிரித்தானியாவின் சிறப்பு உளவுப் பிரிவில் (எஸ்.ஒ.இ.) ரகசிய உளவாளியாக இருந்தவர். பிரான்சை நாட்சி செருமனி கைப்பற்றியிருந்த போது பிரெஞ்சு எதிர்ப்பு இராணுவத்தினரின் உதவிக்காக அங்கு அனுப்பப்பட்டார். முதலாவது பெண் வானொலி இயக்குனராக அங்கு மாடலீன் என்ற பெயரில் பணியாற்றி லண்டனுக்கு உளவுப் பணியாற்றி வந்தார். இவர் இட்லரின் இரகசியப் படையினரால் 1943 அக்டோபர் 13 ஆம் நாள் பாரிசில் கைது செய்யப்பட்டு செருமனியில் உள்ள டேச்சு நாட்சி வதை முகாமிற்கு அனுப்பப்பட்டார். அங்கு அவர் வேறு மூன்று பெண் கைதிகளுடன் சேர்த்து 1944 செப்டம்பர் 13 ஆம் நாள் சுட்டுக் கொல்லப்பட்டார்.

நூர் இனாயத் கான்
Noor Inayat Khan
Nora Baker
1940-1942 இல் நூர் கான்
பட்டப்பெயர்(கள்)ஏஜண்ட் போனோ, மடலீன்
சார்புஐக்கிய இராச்சியம், பிரான்ஸ்
சேவை/கிளைWomen's Auxiliary Air Force,
Special Operations Executive
First Aid Nursing Yeomanry
சேவைக்காலம்1940-1944 (WAAF)/1943-1944 (SOE)
தரம்Assistant Section Officer (WAAF)/ (FANY)
படைப்பிரிவுமருத்துவர்

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=நூர்_இனாயத்_கான்&oldid=2718407" இலிருந்து மீள்விக்கப்பட்டது