டேச்சு அரசியல் கைதிகள் முகாம்

டேச்சு கைதிகள் சிறைச்சாலை (Dachau Concentraion Camp) என்பது நாசி ஜெர்மனியின் கைதிகள் சிறைச்சாலையைக் குறிக்கும். அரசியல் கைதிகளையும் கம்யூனிஸ்டுகளையும் போர்க்கைதிகளையும், நாசி எதிர்ப்பாளர்களையும், தேசத்துரோகம் புரிபவர்களையும், அரசியல் பத்திரிகையாளர்களையும் அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்தும் இடமாக 29 ஏப்ரல், 1935 வரை செயல்பட்டது. இது ஜெர்மனியின் பவேரியா மாநிலத்திலுள்ள முனிச்சுக்கு அருகாமையிலுள்ள டேச்சு என்னும் ஊரில் அமைந்துள்ளது. மார்ச் 1933 ல் ஹைன்ரிச் ஹிம்லர் ஆட்சியின் போது இது திறக்கப்பட்டது. ஆரம்பத்தில் இது சாதரண சிறைச்சாலையாகத்தான் தொடங்கப்பட்டது. 1933 ஜூலை 6 ஆட்சி கலைந்தபின் இட்லரின் ஆளுமையில் இதன் செயல்பாடுகள் மாற்றப்பட்டன. இது அரசியல் கைதிகளின் சிறைச்சாலையாக அறிவிக்கப்பட்டது. டேச்சு சிறைச்சாலைக்குப்பிறகு இந்த பின்பற்றல் நடைமுறை அனைத்து நாசிச் சிறைச்சாலைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டன.

விடுதலையடைந்தபின் டேச்சு கைதிகள் சிறைச்சாலையின் நுழைவுவாயில் தோற்றம்
இரயில் மூலம் கொண்டுவந்து கொட்டப்பட்ட கொல்லப்பட்டவர்களின் உடல்கள்

சிறைச்சாலையின் கொடுமைகள்

தொகு
 
கைதிகள் மேல் கூரையில் தூக்கிலிடப்பட்டப்பின் சவங்களை எரியூட்டும் மேடை
 
கைதிகள் அடைக்கப்படும் கொட்டகை

உலகிலேயே மிகக் கொடூரமான சிறைச்சாலை இதுவாகத்தான் இருக்கும். இதை ஒற்றி அமைந்துள்ள அவுஷ்விட்ஸ் சிறைச்சாலையை ஒப்பிடுகையில் இந்த சிறையிலேயே அதிகமான கொடுமைகள் நடந்ததாக கூறப்படுகிறது. இது மக்கள் நடமாட்டமில்லாத, நகரத்துக்கு வெளியே அமைந்துள்ளதால் இந்த சிறையைப்பற்றி ஜெர்மனி மக்கள் அவ்வளவாக அறியவில்லை. இவ்விடத்தை அணுகவோ, நிழற்படம் எடுக்கவோ அல்லது விமர்சிக்கவோ அனுமதியில்லை. இங்கு பணிபுரிபவர்களுக்கு சங்கேத எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டது. அது பின்வருமாறு;

கடவுளே என்னை ஊமையாக்கிவிடு டேச்சுக்கு வருவதை விரும்பவில்லை;

இந்த சிறைச்சாலையில் 20 லட்சம் கைதிகள் இறந்தனர். அதில் மூன்றில் ஒரு பங்கு யூதர்கள் எனக்கூறப்படுகிறது. இந்த சிறைச்சாலை போதிய வெளிச்சமின்றி இருட்டறை கூடாரமாக அமைக்கப்பட்டிருந்தது. வெளிச்சக் குறைபாடு, சுகாதாரமின்மை, பசிக்கொடுமையால் பல கைதிகள் இறந்து விடுவர். எப்போதாவது உணவு, நோய்வந்தால் போதிய சிகிச்சையளிக்காமை கொட்டகையில் பலரும் அடைக்கப்படுதல், போன்ற கொடுமைகள் மிகச் சாதாரணமாக நிகழும். பிணங்கள் அடுக்கடுக்காக எடுத்துவந்து கொட்டப்பட்டு இங்குள்ள எரிமேடையில் எரிக்கப்படும்.

பலரை விசாரணையில்லாமல் சுடப்பட்டும், தூக்கில் தொங்கவிடப்பட்டும் கொல்லப்படுவர். இவர்களை எரிக்க இங்கேயே இரு எரிமேடைகள் அமைக்கப்பட்டு இருந்தது. பலர் கொத்தடிமைகளாகவும், அடிமைத் தொழிலாளர்களாகவும் முதலாளிகளுக்கும், நிலச்சுவான்தாரார்களுக்கும் அடிமைகளாகவும் விற்கப்படுவர். 1945

ல் ஜெர்மனி நேசநாட்டு அணியினரால் வீழ்ந்தபோது அமெரிக்க இராணுவம் வந்து இவ்விடத்தை மீட்டு கைதிகளுக்கு விடுதலையளித்த்து. அதன் பிறகே இந்த சிறைச்சாலையின் கொடுமை வெளி உலகுக்கு தெரியவந்தது. தற்பொழுது இச்சிறைச்சாலை மக்கள்அருங்காட்சியாமாக செயல் படுகிறது. இட்லரின் மனிதவுரிமை மீறலுக்குச் சான்றாக இச்சிறைச்சாலை விளங்குகிறது.

டேச்சு முகாமில் படுகொலை செய்யப்பட்டவர்கள்

தொகு