நயின் சிங் ராவத்

நயின் சிங் ராவத் (Nain Singh Rawat) (21 அக்டோபர் 1830 – 1 பிப்ரவரி 1882) பிரித்தானிய இந்தியாவின் குமாவுன் கோட்டத்தின் ஜோகர் கிராமத்தில் பிறந்த நயின் சிங் ராவத், முதன் முதலில், இந்தியாவிலிருந்து நேபாளம் மற்றும் திபெத்தின் லாசா வரையிலான இமயமலைப் பாதைகளின் வரைபடங்களை பிரித்தானிய இந்திய ஆட்சியாளர்களுக்காக தயாரித்தவர்.[1] மேலும் திபெத்திய மொழிகளையும், திபெத்தியர்களின் பழக்க வழக்கங்களையும், திபெத்திய பௌத்த சமயத்தையும் நன்கறிந்தவர்.

நயீன் சிங் ராவத்
NainSingh.gif
1876ல் இமயமலைப் பாதைகளையும், உயரங்களையும், தூரங்களையும் கணக்கிட்டு, வரைபடங்கள் தயாரித்தமைக்காக இலண்டன், இராயல் புவியியல் சங்கம், நயீன் சிங் ராவத்திற்கு தங்கப் பதக்கம் வழங்குதல்
பிறப்பு21 அக்டோபர் 1830
இறப்பு1 பிப்ரவரி 1882
மொராதாபாத்
தேசியம்இந்தியன்
பணிமலைகளை ஆய்வு செய்தல்

1855 மற்றும் 1857ல் இமயமலையில் உள்ள லாசாவின் உயரத்தையும், அங்கு செல்வதற்கான வரைபடத்தை தயாரிக்கும் பணியில் இருந்த ஜெர்மானியர்கள் அடங்கியக் குழுவில் நயீன் ராவத் சிங் பங்கெடுத்தார்.

கூறிப்படத் தக்க பதிவுகள்தொகு

1865–66ல் நயீன் சிங் ராவத், நேபாளத் தலைநகரம் காட்மாண்டிலிருந்து 1200 மைல்கள் இமயமலையில் பயணித்து, திபெத்தின் தலைநகரம் லாசாவை அடைந்து, பின் மீண்டும் நேபாளத்திற்கு திரும்புகையில், மானசரோவர் ஏரியைக் கடந்தார். இறுதியாக நயீன் சிங் ரவாத் 1873 - 75களில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியின் தலைமையிடமான லே நகரத்திலிருந்து, திபெத்தின் தலைநகரான லாசா வழியாக அசாம் வரை இமயமலையில் பயணித்து, அப்பகுதிகளின் உயரம், வெப்பநிலை மற்றும் தொலைதூரங்களை பதிவு செய்தார்.

1865ல் நயீன் சிங் ராவத் தனது உறவினர் மணி சிங் ராவத்துடன் இணைந்து, நேபாளத்தின் மலைகளில் பயணித்து, அதன் முக்கோண வடிவயியல் வரைபடத்தை வரைந்தார்.

மறைவுதொகு

நயீன் சிங் ராவத், உத்தரப் பிரதேசத்தின் மொராதாபாத் நகரத்தில் தங்கிருந்த போது வாந்திபேதியால் 1 பிப்ரவரி 1882 அன்று தனது 57வது அகவையில் காலமானார்.[2]

மரபுரிமைப் பேறுகள்தொகு

  • 1876ல் நயீன் சிங் ராவத்திற்கு, ஐக்கிய இராச்சியத்தின் அரச புவியியல் கழகம் தங்கப் பதக்கம் மற்றும் சர் பட்டத்தை வழங்கி பெருமைப்படுத்தியது.
  • இந்திய அஞ்சல் துறை, 27 சூன் 2004ல் நயீன் சிங் ராவத் உருவம் பொறித்த அஞ்சல் தலை வெளியிட்டது.[3]
  • 2006ல் எழுத்தாளர்கள் சேகர் பதக் மற்றும் உமா பட் இணைந்து, நயீன் சிங் ராவத் வாழ்க்கை வரலாற்றை நூலாக எழுதி வெளியிட்டனர்.
  • 21 அக்டோபர் 2017ல் கூகுள் நிறுவனம், நயீன் ராவத் சிங்கின் 187வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் கூகுள் சித்திரம் வெளியிட்டது.[4][5]

அடிக்குறிப்புகள்தொகு

  1. RENNELL AND THE SURVEYORS OF INDIA
  2. Smyth 1882, ப. 317.
  3. "Trigonometrical Survey". 2006-10-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-10-21 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Nain Singh Rawat's 187th birthday". www.google.com (ஆங்கிலம்). 20 October 2017 அன்று பார்க்கப்பட்டது.
  5. "நயீன் சிங் ராவத் டூடுல்". 2021-01-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-10-21 அன்று பார்க்கப்பட்டது.

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நயின்_சிங்_ராவத்&oldid=3560065" இருந்து மீள்விக்கப்பட்டது