மைக்கேல் ஹசி

ஆத்திரேலியத் துடுப்பாட்டக்காரர்

மைக்கல் எட்வர்டு கில்லீன் அசி (Michael Edward Killeen Hussey - பி. 27 மே 1975) பரவலாக மைக் ஹசி என அறியப்படும் இவர் முன்னாள் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி வீரர். மிஸ்டர் கிரிக்கெட் எனும் புனைபெயரால் பரவலாக அறியப்படுபவர். ஓரளவு வயதான பின்னரேயே ஆத்திரேலிய அணியில் இடம்பிடித்தார்.

மைக்கேல் ஹசி
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு27 மே 1975 (1975-05-27) (அகவை 49)
மவுண்ட் லாலி, மேற்கு ஆஸ்திரேலியா
பட்டப்பெயர்மிஸ்டர் கிரிக்கெட்
உயரம்1.80[1] m (5 அடி 11 அங்)
மட்டையாட்ட நடைஇடது கை
பந்துவீச்சு நடைவலது கை மித வேகம்
பங்குBatsman
உறவினர்கள்டேவிட் ஹசி (சகோதரர்)
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 393)3 நவம்பர் 2005 எ. மேற்கிந்தியத்தீவுகள்
கடைசித் தேர்வு3 சனவரி 2013 எ. இலங்கை
ஒநாப அறிமுகம் (தொப்பி 150)1 பெப்ரவரி 2004 எ. இந்தியா
கடைசி ஒநாப3 செப்டம்பர் 2012 எ. பாக்கித்தான்
ஒநாப சட்டை எண்48
இ20ப அறிமுகம் (தொப்பி 4)17 பெப்ரவரி 2005 எ. நியூசிலாந்து
கடைசி இ20ப5 அக்டோபர் 2012 எ. மேற்கிந்தியத்தீவுகள்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1994/95–2012/13மேற்கு ஆஸ்திரேலியா
2001–2003நார்தாம்ப்டன்ஷைர் (squad no. 3)
2004குளோசெஸ்டர்சைர்
2005துர்காம்
2008–2013சென்னை சூப்பர் கிங்ஸ் (squad no. 48)
2011/12–2012/13பெர்த் ஸ்கார்ச்சர்சு
2013/14–2015/16[சிட்னி தண்டர்
2014மும்பை இந்தியன்ஸ் (squad no. 48)
2015சென்னை சூப்பர் கிங்ஸ்s (squad no. 48)
2015/16கேன்டர்பரி
2016லூசியா ஸோக்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒபது முதது பஅ
ஆட்டங்கள் 79 185 273 381
ஓட்டங்கள் 6,235 5,442 22,783 12,123
மட்டையாட்ட சராசரி 51.52 48.15 52.13 44.08
100கள்/50கள் 19/29 3/39 61/103 12/90
அதியுயர் ஓட்டம் 195 109* 331* 123
வீசிய பந்துகள் 588 240 2,052 786
வீழ்த்தல்கள் 7 2 27 20
பந்துவீச்சு சராசரி 43.71 117.50 40.48 41.45
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 2/2 1/22 3/34 3/52
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
85/7 105/– 307/– 200/–
மூலம்: ESPNcricinfo, 22 திசம்பர் 2016

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 28 ஆவது வயதிலும், தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் தனது 30 ஆவது வயதிலும் அறிமுகமானார்.[2] இவர் பன்னாட்டு ஆட்டங்களில் அறிமுகமாகும் முன்னர் முதல்-தர ஆட்டங்களில் 15,313 ஓட்டங்கள் எடுத்திருந்தார்[3]

அதிக வயதில் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானாலும் சிறப்பான திறனை வெளிப்படுத்தினார்.2006 ஆம் ஆண்டின் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின்ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முதல் இடம் பிடித்தார்[4]

முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் வெஸ்டர்ன் வாரியர்ஸ் அணிக்காக விளையாடினார். மேலும் இங்கிலாந்தில் உள்ள மூன்று மாகாணத் துடுப்பாட்ட சங்கங்களின் சார்பாக விளையாடினார். இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். டிசம்பர் 29,2012 அன்று சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.[5] 2015 ஆம் ஆண்டின் பிக்பாஷ் போட்டிகளோடு அனைத்து வடிவப் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

சர்வதேச போட்டிகள்

தொகு

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்

பெப்ரவரி 1, 2004 இல் பெர்த்தில் நடைபெற்ற இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் அறிமுகம் ஆனார். அந்தப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 17 ஒட்டங்களை எடுத்து 5 இலக்குகள் வித்தியாசத்தில் அணி வெற்றி பெற உதவினார்.

அகடோபர் 9, 2005 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான சூப்பர் சீரிசின் மூன்றாவது போட்டியில் மகாயா நிதினி வீசிய பந்தை விளையாட்டு அரங்கத்தின் கூரையின் மேல் அடித்தார்.பெப்ரவரி 6, 2006 ஆம் ஆண்டிற்கான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட சிறந்த ஆத்திரேலிய வீரருக்கான ஆலன் பார்டர் பதக்கத்திற்கான வாக்கெடுப்பில் அடம் கில்கிறிஸ்ற், ஆண்ட்ரு சைமண்ட்ஸ், பிறெட் லீ மற்றும் இவரும் தலா 22 வாக்குகள் பெற்றனர்.

சைமண்ட்ஸ் குடி போதையில் இருந்த குற்றச்சாட்டு காரணமாக அவர் தகுதிநீக்கம் பெற்றார். அதன்பின் நடந்த வாக்கெடுப்பில் அடம் கில்கிறிஸ்ற், பிறெட் லீ ஆகியோரை விட அதிக வாக்குகள் பெற்று ஆலன்பார்டர் பதக்கம் பெற்றார். நவம்பர், 2006 இல் மும்பையில் நடைபெற்ற பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை விருது வழங்கும் விழாவில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட சிறந்த வீரருக்கான விருதைப் பெற்றார். மேலும் 2016 ஆம் ஆண்டிற்கான உலக லெவன் அணியில் 12 ஆவது வீரராக இடம்பெற்றார்.

ஆத்திரேலியத் துடுப்பாட்ட வாரியத்தின் சுழல்முறை தலைவர் திட்டத்தினால் கோலாலம்பூரில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டித் தொடரில்

ரிக்கிபாண்டிங்கிற்குப் பதிலாக மைக் ஹசி

தலைவராக நியமிக்கப்பட்டார். இந்தப் போட்டியில் துவக்க வீரர்கள் விரைவில் ஆட்டமிழக்க பிராட் ஹாடினுடன் இனைந்து 165 ஓட்டங்கள் சேர்த்தார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் 6 வது இலக்கிற்கு அதிக ஓட்டங்கள் சேர்த்த இணை எனும் சாதனையைப் படைத்தனர்.[6][7][8][9]

.

குறிப்புதவி

தொகு
  1. "Mike Hussey". cricket.com.au. Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 13 February 2015.
  2. "Sporting Life: Mike Hussey". Archived from the original on 3 செப்டெம்பர் 2007.
  3. கிரிக்கெட் 365-Career Summary
  4. "LGICCRANKINGS.COM".
  5. "Hussey announces Test farewell". ABC News (Australian Broadcasting Corporation). 29 December 2012. http://www.abc.net.au/news/2012-12-29/hussey-announces-test-retirement/4447230. பார்த்த நாள்: 29 December 2012. 
  6. "Highest Partnership for Each Wicket in ODIs". CricketArchive. Archived from the original on 11 January 2008. பார்க்கப்பட்ட நாள் 2 October 2006.
  7. Booth, Lawrence (21 November 2006). "Australia's next captain? Hussey goes from the solid to downright spectacular". London: Guardian. http://sport.guardian.co.uk/ashes2006-07/story/0,,1953020,00.html. பார்த்த நாள்: 27 November 2006. 
  8. Wilde, Simon (5 November 2006). "Hussey's left turn". London: The Times. http://www.timesonline.co.uk/article/0,,2094-2437815,00.html. பார்த்த நாள்: 27 November 2006. 
  9. "Warne's 'ball' the best of all". Townsville Bulletin. 23 November 2006. http://townsvillebulletin.news.com.au/common/story_page/0,7034,20807080%255E23212,00.html. பார்த்த நாள்: 27 November 2006.  [தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கேல்_ஹசி&oldid=3986812" இலிருந்து மீள்விக்கப்பட்டது