அஜித் அகர்கர்
அஜித் அகர்கர் (Ajit Agarkar ⓘ (பிறப்பு:டிசம்பர் 4, 1977 - மும்பை) என்பவர் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் 1998 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் இந்திய அணிக்காக 200 சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். இவர் ஆடத் துவங்கிய காலத்தில் மிக வேகமாக 50 இலக்குகளை வீழ்த்தியவர் எனும் சாதனையைப் படைத்தார். இவரின் காலத்தில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக இலக்குகள் வீழ்த்திய இந்திய வீரர் எனும் சாதனையைப் படைத்தார். இவர் 1999 துடுப்பாட்ட உலகக்கிண்ணம், 2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணம், 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடர்களில் விளையாடியுள்ளார்.
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | அஜித் அகர்கர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 4 திசம்பர் 1977 மும்பை, மகாராட்டிரம், இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது கை, மித விரைவு வீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்து வீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 216) | 7 அக்டோபர் 1998 எ. சிம்பாப்வே | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 13 சனவரி 2006 எ. பாக்கித்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 111) | 1 April 1998 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 30 ஆகஸ்டு 2007 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 9 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 1) | 1 டிசம்பர் 2006 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 16 செப்டம்பர் 2007 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1996–2013 | மும்பை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2008–2010 | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2011–2013 | டெல்லி டேர்டெவிவெல்ஸ்] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: Cricinfo, 28 June 2012 |
2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பை தொடரில் மும்பை துடுப்பாட்ட அணித் தலைவராக இருந்தார். அந்தத் தொடரில் இவரின் தலமையிலான் அணி கோப்பையை வென்றது. இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடர்களில் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார். 1998 ஆம் ஆண்டில் தேர்வுத் துடுப்பாட்டத்திலும், 2006 ஆம் ஆண்டில் பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் அறிமுகமானார். 2013 ஆம் ஆண்டில் அனைத்து வடிவ துடுப்பாட்டங்களில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தனது ஓய்விற்குப் பிறகு துடுப்பாட்ட பகுப்பாய்நராக உள்ளார்.
சர்வதேச போட்டிகள்
தொகுஏப்ரல் 1, 1998 இல் கொச்சியில் நடைபெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில்அறிமுகமானார். இந்தப் போட்டியில் அடம் கில்கிறிஸ்ற் இலக்கை வீழ்த்தினார்.
பின் கொக்கக் கோலா வாகையாளர் தொடரில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் தனது 20 ஆவது வயதில் விளையாடினார். அந்தப் போட்டியில் முக்கியமான மூன்று இலக்குகளை வீழ்த்தி அந்த அணியை 98 ஓட்டங்கள் மட்டுமே எடுக்கச் செய்து வீழ்த்த உதவினார்.[1]
இவரின் துவக்க காலத்தில் ஜவகல் ஸ்ரீநாத் உடன் இணைந்து பந்துவீசினார். பின் ஆசீஷ் நேரா 1999 ஆம் ஆண்டிலும், 2000 ஆம் ஆண்டில் ஜாகிர் கான் ஆகியோரின் வருகைக்குப் பின் அணியில் இடம் கிடைப்பதில் சற்று சிக்கல் இருந்தது. இருந்தபோதிலும் இவருக்கு அணியில் இடம் கிடைத்தது. ஆனால் இவருக்கு அடிக்கடி ஏற்பட்ட காயங்களினாலும் 2004 ஆம் ஆண்டில் இர்பான் பதானின் வருகைக்குப் பிறகும் இவருக்கு அணியில் நிலையான இடம் கிடைக்கவில்லை. அகர்க்கர் 2002 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் பந்துவீச்சாளராகவும், மட்டையாளராகவும் பல சிறப்பான பங்களிப்பை அணிக்காக அளித்துள்ளார்.
மட்டையாளராகவும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். குறிப்பாக 2002 ஆம் ஆண்டில் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காமல்109* ஓட்டங்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் இந்திய அணி தோற்றபோதிலும் இவரின் பங்களிப்பு கவனிக்கத்தக்க வகையில் அமைந்தது. 2000 ஆம் ஆண்டில் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் 25 பந்துகளில் 67 ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.[2]
அதிக இலக்குகள் வீழ்த்திய இந்தியர்கள் பட்டியலில் இவர் ஜவகல் ஸ்ரீநாத் மற்றும் அனில் கும்ப்ளே ஆகியோருக்கு அடுத்தபடியாக இருந்தார். 2009-2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பை இறுதிப் போட்டியில் கருநாடக அணிக்கு எதிரான போட்டியில் 5 இலக்குகள் வீழ்த்தினார்.
சான்றுகள்
தொகு- ↑ vivek, gupta. "Ajit's first MoM-Vivek Gupta". ESPN-Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 November 2011.
- ↑ Fastest fifties at கிரிக்இன்ஃபோ