முதன்மை பட்டியைத் திறக்கவும்

ரோகித் சர்மா

இந்தியத் துடுப்பாட்ட வீரர்

ரோகித் குருநாத் சர்மா (Rohit Gurunath Sharma, பிறப்பு: ஏப்ரல் 30 1987, இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் , ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அணியின் உதவித் தலைவராக உள்ளார். இவர் வலது கை மட்டையாளர் அவ்வப்போது வலது கை புறத்திருப்ப பந்து வீச்சாளர் ஆவார். மும்பை மாநில அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளிலும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணித் தலைவராக விளையாடி வருகிறார்.

ரோகித் சர்மா
Rohit Sharma in 2012.jpg
ரோகித் சர்மா
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் ரோகித் சர்மா
பிறப்பு 30 ஏப்ரல் 1987 (1987-04-30) (அகவை 31)
இந்தியா
வகை துடுப்பாட்டம்
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை சுழல் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 168) சூன் 23, 2007: எ அயர்லாந்து
கடைசி ஒருநாள் போட்டி சனவரி 18, 2011:  எ தென்னாப்பிரிக்கா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2006/07–present Mumbai
2008–2010 Deccan Chargers
2011–present Mumbai Indians
தரவுகள்
தேர்வுஒ.நாமுதல்T20
ஆட்டங்கள் 2 113 60 36
ஓட்டங்கள் 288 3,174 5,090 539
துடுப்பாட்ட சராசரி 288 36.06 63.62 28.36
100கள்/50கள் 2/0 4/20 18/20 0/5
அதிகூடியது 177 264 309* 79*
பந்துவீச்சுகள் 0 539 1656 68
விக்கெட்டுகள் 0 8 22 1
பந்துவீச்சு சராசரி n/a 56.75 39.50 113.00
5 விக்/இன்னிங்ஸ் 0 0 0 0
10 விக்/ஆட்டம் n/a n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு n/a 2/27 4/41 1/22
பிடிகள்/ஸ்டம்புகள் 3/– 37/– 46/– 15/–

திசம்பர் 11, 2013 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

தனது இருபதாம் வயதில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடத் துவங்கினார். ஆனால் இவருக்கு தேசிய அணியில் 30 ஆவது வயதில் தான் இடம் கிடைத்தது. சூன் 23, 2007 ஆம் ஆண்டில் அயர்லாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். 2013 ஆம் ஆண்டிலிருந்து துவக்க வீரராக நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நவம்பர், 2013 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். அந்தத் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் நூறு ஓட்டங்கள் அடித்தார். கொல்கத்தா, ஈடன் கார்டன்ஸ் அரங்கத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் 177 ஓட்டங்களும், வான்கேடே அரங்கத்தில் நடைபெற்ற இரண்டாவது துடுப்பாட்டப் போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 111* ஓட்டங்கள் எடுத்தார்.[1][2] தனது முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடுவதற்கு முன்பாக 108 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். [3]

கொல்கத்தா, ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நவம்பர் 13, 2014 ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் 264 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுததவர் எனும் சாதனையைப் படைத்தார். தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் 106 ஓட்டங்கள் எடுத்தார். இதன் மூலம் தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 ஆகிய மூன்று வடிவங்களிலும் நூறு ஓட்டங்கள் அடித்த இரண்டாவது இந்திய அணி வீரர் எனும் சாதனையைப் படைத்தார். இவரின் தலைமையின் கீழ் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று முறை கோப்பை வென்றுள்ளது. 2015 ஆம் ஆண்டின் ஃபோர்ப்ஸ் இன் கருத்துக்கணிப்பின் படி 100 பிரபலமானவர்கள் பட்டியலில் புகழின் அடிப்படையில் 8 ஆவது இடமும் , வருமானத்தில் 46 ஆவது இடத்திலும் மொத்தமாக 12 ஆவது இடத்திலும் உள்ளார்.[4]

பொருளடக்கம்

ஆரம்ப வாழ்க்கைதொகு

 
களத் தடுப்பாட்டப் பயிற்சியின் போது ரோகித் சர்மா

ரோகித் சர்மா ஏப்ரல் 30, 1987 இல் பன்சோத்,நாக்பூர், மகாராட்டிரத்தில் பிறந்தார். இவரின் தாய் பூர்ணிமா சர்மா விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர்.[5] இவரின் தந்தை குருனாத் சர்மா . தனது தந்தையின் வருமானம் குறைவாக இருந்ததினால் ரோகித் சர்மா ,தனது தாத்தா- பாட்டி மற்றும் மாமாவுடன் போரிவலியில் வாழ்ந்து வந்தார்.[6] இவரது பெற்றோர்கள் தோம்பிவ்லியில் [7]ஒரு அறை மட்டும் உள்ள சிறிய வீட்டில் வசித்து வந்தனர். தனது விடுமுறையின் போது பெற்றோரைக் காணச் செல்வார்.[6] இவருக்கு விசால் சர்மா எனும் மூத்த சகோதரர் உள்ளார்.[7]

துடுப்பாட்ட சாதனைதொகு

  • ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டம் (264 ஓட்டம் 173 பந்துகளில் - எதிர் அணி இலங்கை - நாள் 11/13/2014)[8]- உலக சாதனை.
  • ஒருநாள் போட்டிகளில் மூன்று முறை இரட்டை சதம் அடித்துள்ள ஒரே வீரர் - உலக சாதனை.
  • ஒருநாள் போட்டிகளில் அதிக 4 ஓட்டங்களை (33) எடுத்தவர். இது உலக சாதனை ஆகும். எதிர் அணி இலங்கை - நாள் (11/13/2014)[9]
  • ஒருநாள் போட்டிகளில் அதிக 6 ஓட்டங்களை (16) எடுத்தவர். இது உலக சாதனை ஆகும். எதிர் அணி ஆஸ்திரேலியா ஆகும்
  • ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டிகளில் அதிக 6 ஓட்டங்களை(65) எடுத்த முதலாவது வீரர் இவருக்கு அடுத்த படியாக பிரண்டன் மெக்கல்லம்(61) உள்ளார்

பெற்ற விருதுகள்தொகு

 
மனைவியுடன் ரோகித் சர்மா

2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் ஈஎஸ்பிஎன் சிறந்த ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர் விருதினைப் பெற்றுள்ளார்.[10] 2015 ஆம் ஆண்டின் ஈஎஸ்பிஎன் சிறந்த பன்னாட்டு இருபது20 மட்டையாளார் விருதினைப் பெற்றார்.[11] மேலும் இதே ஆண்டில் இந்திய அரசு இவருக்கு அருச்சுனா விருது வழங்கியது.[12]

மேற்கோள்கள்தொகு

  1. "Eden special for me, says Rohit Sharma". The Times of India. PTI. 7 November 2013. http://timesofindia.indiatimes.com/west-indies-in-india-2013/top-stories/Eden-special-for-me-says-Rohit-Sharma/articleshow/25390032.cms. பார்த்த நாள்: 23 February 2014. 
  2. "Rohit debut ton, Ashwin fifty lift India". ESPN Cricinfo. பார்த்த நாள் 7 November 2013.
  3. "Records tumble as Amla, de Kock lead SA prance in Kimberley". Cricbuzz. பார்த்த நாள் 15 October 2017.
  4. "Rohit Sharma".
  5. "Telugu connection to Twenty20 World Cup". The Hindu. பார்த்த நாள் 30 January 2016.
  6. 6.0 6.1 "Forthcoming attraction". ESPNcricinfo. பார்த்த நாள் 30 January 2016.
  7. 7.0 7.1 "Rohit’s kept his promise". The Indian Express. பார்த்த நாள் 30 January 2016.
  8. Rohit Sharma's Record 264 Powers India to 404/5
  9. Rohit 264, Sri Lanka 251
  10. Rohit Sharma completes hattrick at ESPN Cricinfo AwardsBusiness Standard 14 March 2016
  11. Williamson, Broad, Southee, de Villiers win ESPNcricinfo AwardsESPNCricinfo 14 March 2016
  12. Sania Mirza selected for Khel Ratna, Rohit Sharma for Arjuna awardFirst Post 12 August 2015

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோகித்_சர்மா&oldid=2523448" இருந்து மீள்விக்கப்பட்டது