எதிர்ச்சுழல்

எதிர்ச்சுழல் (Off spin) என்பது துடுப்பாட்டத்தில் விரற்சுழல் வீச்சு வகைகளில் ஒன்றாகும். இந்த முறையைப் பயன்படுத்துபவர் எதிர்ச்சுழலாளர் (off spinner) அல்லது சுருக்கமாக எதிராளர் (offie) என்று அழைக்கப்படுகிறார். வலது-கை சுழல் வீச்சாளர்களான எதிர்ச்சுழலாளர்கள், தங்கள் விரல்களைப் பயன்படுத்தி பந்தைச் சுழற்றி வீசுகளத்தின் இடப்பக்கத்தில் இருந்து வலப்பக்கமாக எகிறிச் செல்லும் வகையில் வீசுவர். இவ்வாறு வீசப்பட்ட பந்து எகிறும்போது ஒரு வலது-கை மட்டையாளரின் எதிர்ப்பக்கத்தில் இருந்து நேர்ப்பக்கமாக திரும்பிச் செல்வதால் எதிர்த்திருப்பம் (off break) என்று அழைக்கப்படுகிறது. இது நேர்ச்சுழலுக்கு நேர்மாறான வீச்சு முறையாகும்.[1]

எதிர்ச்சுழல் (விரற்சுழல் வகை) வீச்சின் மாதிரி இயங்குபடம்

இடது-கை வீச்சாளர்கள் இம்முறையைப் பின்பற்றி வீசுவது இடது-கை வழமையில்லாச் சுழல் என்று அறியப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Off spin". BBC Sport. http://news.bbc.co.uk/sportacademy/hi/sa/cricket/skills/newsid_3227000/3227307.stm. பார்த்த நாள்: 16 December 2012. 
  2. "How to bowl left-arm spin". BBC Sport. http://news.bbc.co.uk/sportacademy/hi/sa/cricket/skills/newsid_3207000/3207491.stm. பார்த்த நாள்: 16 December 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எதிர்ச்சுழல்&oldid=3719131" இலிருந்து மீள்விக்கப்பட்டது