டான் பிராட்மன்

ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர்

சர் டொனால்ட் ஜார்ஜ் பிராட்மன் (Sir Donald George "Don" Bradman 27 ஆகத்து 1908 – 25 பிப்ரவரி 2001) தெ டான் எனவும் அழைக்கப்படும் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் மட்டையாளர் ஆவார். துடுப்பாட்ட வரலாற்றிலேயே மிகச்சிறந்த மட்டையாளர் என்று பெரும்பாலோரால் ஏற்றுக்கொள்ளப்படுபவர்.[3] பிராட்மனின் தேர்வுத் துடுப்பாட்ட 99.94 என்பது புள்ளிவிவரப்படி, முக்கிய விளையாட்டுகள் அனைத்திலும் உயரிய சாதனையாகக் கருதப்படுகிறது.[4]

சர்
டான் பிராட்மன்
Don Bradman

AC
1930-இல் பிராட்மன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்டொனால்டு சியார்ச் பிராட்மன்
பிறப்பு(1908-08-27)27 ஆகத்து 1908
கூட்டமாண்ட்ரா, நியூ சவுத் வேல்ஸ், ஆத்திரேலியா
இறப்பு25 பெப்ரவரி 2001(2001-02-25) (அகவை 92)
கென்சிங்டன் பார்க், தெற்கு ஆத்திரேலியா
பட்டப்பெயர்
 • தி டான்
 • பிராடில்சு
 • தி உவைட் கெட்லி
உயரம்1.70[1][2] m (5 அடி 7 அங்)
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை நேர்ச்சுழல்
பங்குமட்டையாட்டம்
உறவினர்கள்
 • ஜோன் பிராட்மன் உட்பட இருவர்
 • கிரெட்டா பிராட்மன் உட்பட 3 பேரப்பிள்ளைகள்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 124)30 நவம்பர் 1928 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வு18 ஆகத்து 1948 எ. இங்கிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1927/28–1933/34நியூ சவுத் வேல்சு
1935/36–1948/49சதேர்ன் ரெட்பாக்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்-தரம்
ஆட்டங்கள் 52 234
ஓட்டங்கள் 6,996 28,067
மட்டையாட்ட சராசரி 99.94 95.14
100கள்/50கள் 29/13 117/69
அதியுயர் ஓட்டம் 334 452*
வீசிய பந்துகள் 160 2,114
வீழ்த்தல்கள் 2 36
பந்துவீச்சு சராசரி 36.00 37.97
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 1/8 3/35
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
32/– 131/1
மூலம்: கிரிக்கின்ஃபோ, 4 திசம்பர் 2014

துவக்கத்தில் பிராட்மன் அச்சுப்பொறி உருண்டை மற்றும் குச்சம் வைத்து விளையாடியதாக ஆத்திரேலியாவில் கதைகள் உண்டு.[5] இவர் இரண்டே ஆண்டுகளில் புல் தரை துடுப்பாட்டத்திலிருந்து ஆத்திரேலிய அணியின் தேர்வுத் துடுப்பாட்ட அணியில் சேர்ந்தார். தனது இருபத்தி இரண்டாம் பிறந்த நாளுக்கு முன்பாக இவர் பல சாதனைகளை நிகழ்த்தினார் குறிப்பாக அதிக ஓட்டங்கள் எடுப்பதில். இவரின் பல சாதனைகள் இன்றுவரை முறியடிக்கப்படாமல் உள்ளது. பெரும் பொருளியல் வீழ்ச்சி காலத்தில் ஆத்திரேலிய விளையாட்டு உலகத்தின் இலட்சிய மனிதராகப் பார்க்கப்பட்டார்.

இவரின் இருபது வருட துடுப்பாட்ட வரலாற்றில் நிலையான ஓட்டங்களை எடுத்துள்ளார். இதனைப் பற்றி ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் அணித் தலைவர் பில் உட்ஃபுல் என்பவர் கூறுகையில் பிராட்மன் மூன்று ஆத்திரேலிய விரர்களுக்குச் சமம் என இவரைப் பாராட்டியுளார்.[6]

இவரின் ஓய்விற்குப் பிறகும் கூட முப்பது ஆண்டு காலங்கள் நிர்வாக இயக்குநர், தெரிந்தெடுப்பி, எழுத்தாளராக இருந்தார். இவர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ஐம்பது ஆண்டுகள் கழித்து 2001 ஆம் ஆண்டில் ஆத்திரேலியாவின் இருபத்தி ஐந்தாவது பிரதமரான ஜோன் ஹவார்ட் ஆஸ்திரேலியாவில் வாழ்பவர்களில் மிகச்சிறந்தவர் என பிராட்மனைப் பாராட்டினார்.[7]

இவரின் சாதனைகளைப் பாராட்டும் விதமாக இவர் வாழ்ந்த காலகத்திலேயே இவரின் உருவப்படம் பொறித்த நாணயம்,வில்லை , அருங்காட்சியகம் ஆகியவை ஏற்படுத்தப்பட்டது. மேலும் இவர் பிறந்து நூறாண்டுகள் ஆனதையொட்டி ஆகஸ்டு 27, 2008 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய ராயல் மின்ட்டானது பிராட்மனின் உருவம் பொறித்த $5 மதிப்புள்ள தங்க நாணயத்தை வெளியிட்டது.[8] 2009 இல் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை ஹால் ஆஃப் ஃபேமாக (புகழ் பெற்ற மனிதராக) அறிவித்தது.

ஆரம்பகால வாழ்க்கை

டொனால்டு ஜார்ஜ் பிராட்மன் ஆகஸ்டு 27, 1908 இல் நியூ சவுத் வேல்ஸ், ஆத்திரேலியாவில் பிறந்தார்.[9] இவரின் தந்தை ஜார்ஜ், தாய் எமிலி ஆவார். இவருக்கு விக்டர் எனும் சகோதரனும் இஸ்லத், லிலியன் மற்றும் எலிசபெத் மேஎனும் மூன்று சகோதரிகள் உள்ளனர்.[9] இவரின் மூதாதைகள் 1826 இல் இத்தாலியில் இருந்து ஆத்திரேலியாவிற்குப் புலம்பெயர்ந்தனர்.[10] பிராட்மனின் பெற்றோர் ஸ்டாகின்பின்கலுக்கு அருகிலுள்ள யோ யோ எனும் சிறிய கிராமத்தில் வாழ்ந்து வந்தனர். பிராட்மன் பிறந்த வீடு தற்போது அருங்காட்சியகமாக உள்ளது. பின் இவரது பெற்றோர் நியூ சவுத் வேல்சிலுள்ள பவ்ராலுக்கு குடியேறினர். இந்த இடமானது எமிலியின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இருக்கும் பகுதிக்கு அருகில் இருந்தது.[9][11][12]

துடுப்பாட்ட வாழ்க்கை

டொனால்ட் பிராட்மனின் தேர்வுத் துடுப்பாட்ட ஓட்டங்களின் சராசரி 99.94. இருபது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளுக்கு மேல் விளையாடிய எந்த ஒரு வீரருக்கும் சராசரி 61க்கு மேல் இருந்ததில்லை. பிராட்மன் 29 முறை நூறு (துடுப்பாட்டம்) 12 முறை இரட்டை நூறு (துடுப்பாட்டம்)எடுத்துள்ளார். தனது கடைசித் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் சுழியில் 'ஏரிக் ஹோல்லிச் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். தனது கடைசி தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் நான்கு ஓட்டங்கள் எடுத்திருந்தால் பிராட்மனின் சராசரி 100ஆக இருந்திருக்கும்.

ஸ்டீவ் வா, முத்தையா முரளிதரனைப் பந்து வீச்சின் பிராட்மன் என வர்ணித்துள்ளார்.[13]

பத்து முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடிய இவரை சக வீரர்கள் "பிரடிள்ஸ் " எனும் புனைபெயர் கொண்டு அழைத்தனர்.[14] இவரின் முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் சற்று மோசமான நிகழ்வுகளைச் சந்திக்க நேர்ந்தது. அதில் இருந்து சில விடயங்களைக் கற்றுக் கொண்டார். ஸ்டிக்கி விக்கெட் மூலம் ஆத்திரேலிய அணி இரண்டாவது ஆட்டப் பகுதியில் 66 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது. இதன்மூலம் 675 ஓட்டங்களில் தோல்வியடைந்தது. தற்போது வரை இதுவே மிக மோசமான தோல்வியாக உள்ளது.[15] அடுத்த போட்டியில் 18 மற்றும் 1 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால் தேர்வாளர்கள் இவரை பன்னிரண்டாவது வீரராக இரண்டாவது போட்டிக்குத் தேர்வு செய்தனர். ஆத்திரேலிய அணியின் பில் போன்ஸ் ஃபோர்ட் காயம் காரணமாக வெளியேறியதால் பிராட்மன் களத் தடுப்பாளராக விளையாடினார். அப்போது இங்கிலாந்து அணி 636 ஓட்டங்கள் எடுத்திருந்தது. முதல் போட்டியில் அந்த அணி 863 ஓட்டங்கள் எடுத்தது. மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் 79 மற்றும் 112 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானத்தில் மிக இளம் வயதில் நூறுகள் அடித்த வீரர் எனும் சாதனை படைத்தார்.[16] இருந்த போதிலும் அந்தப் போட்டியில் ஆத்திரேலிய அணி தோல்வியடைந்தது. நான்காவது போட்டியிலும் தோல்வியடைந்தது. அந்தப் போட்டியில் இவர் 58 ஓட்டங்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். ஆனால் 12 ஓட்டங்களில் அந்தப் போட்டியில் தோல்வியடைந்தது.[17] அந்த ஒரு போட்டியில் மட்டுமே இவர் ரன் அவுட் ஆனார்.[18]

 
பிராட்மேன் 452 ரன்கள் எடுத்த பிறகு அவரது எதிரிகளால் மைதானத்திற்கு வெளியே தலைமை தாங்கினார்.

ஆனால் ஐந்தாவது மற்றும் இறுதிப் போட்டியில் ஆத்திரேலிய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் பிராட்மன் 123 ஓட்டங்கள் எடுத்தார் மேலும் இரண்டாவது போட்டியில் ஓர் இலக்கினையும் கைப்பற்றினார். அந்தப்போட்டியில் ஆத்திரேலியாவின் தலைவராக இருந்த ஜாக் ரைடர் வெற்றிக்கான ஓட்டத்தினை அடித்தார். அந்தத் தொடரில் பிராட்மன் 1,690 ஓட்டங்களை 93.88 எனும் சராசரியோடு எடுத்திருந்தார்.[19] சிட்னி தூட்ப்பாட்ட அரங்கில் விக்டோரியா துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 340 ஓட்டங்கள் எடுத்து இருதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.[20] 1929-30 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போட்டிகளில் இவரின் துடுப்பாட்ட சராசரி 113.28 ஆக இருந்தது.[19] இங்கிலாந்து தொடருக்கான வீரர்களைத் தேர்வு செய்வதற்காக நடைபெற்ற போட்டியின் முதல் ஆட்டப்பகுதியில்  இவர் இறுதியாக 124 ஆட்டமிழக்காமல் இருந்தார். தலைவரான பில் உட்ஃபுல் இவரையே இரண்டாவது ஆட்டப் பகுதியினை துவங்கக் கேட்டுக்கொண்டார். அதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 225 ஓட்டங்கள் எடுத்தார். பின் குயின்சிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இவர் 452 ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் முதல்தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் எனும் சாதனை படைத்தார்.[21] 415 நிமிடங்களில் இவர் சாதனை படைத்தார்.[22]

1930 இங்கிலாந்துச் சுற்றுப் பயணம்

1930ஆம் ஆண்டில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் துடுப்பாட்டத் தொடருக்கு இவர் தேர்வானர். வோர்செஸ்டரில் நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் பிராட்மன் 236 ஓட்டங்கள் எடுத்தார். அந்த ஆண்டின் மே மாத இறுதியில் அவர் 1,000 ஓட்டங்களை முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் எடுத்தார். இந்தச் சாதனையைப் புரிந்த முதல் ஆத்திரேலிய வீர மற்றும் சர்வதேச அளவில் ஐந்தாவது வீரர் இவர் ஆவார்.[23] பின் முதலாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 131 ஓட்டங்களை எடுத்தார். ஆனால் இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் சிறப்பான ஆடத்தினை வெளிப்படுத்தி 254 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

புள்ளிவிவர சுருக்கம்

தேர்வுத் துடுப்பாட்டம்

 
இந்த வரைபடமானது பிராட்மனின் தேர்வுத் துடுப்பாட்டத்தின் செயல்பாடுகளைக் குறிக்கிறது. இதில் உள்ள சிவப்பு கோடுகள் அவ்ர் விளையாடிய போட்டிகளையும், நீல கோடுகள் இவர் கடைசியாக விளையாடிய பத்துப் போட்டிகளின் சராசரியைக் குறிக்கிறது. நீலப் புள்ளிகள் அவர் இறுதி வரை ஆட்டமிழகாத போட்டிகளைக் குறிக்கிறது
  [24]மட்டையாளர் பந்து வீச்சாளர்[25]
எதிரணி போட்டிகள் ஓட்டங்கள் சராசரி அதிக ஓட்டங்கள் 100 / 50 ஓட்டங்கள் இலக்குகள் சராசரி சிறந்தது
  இங்கிலாந்து 37 5028 89.78 334 19/12 51 1 51.00 1/23
இந்தியா 5 715 178.75 201 4/1 4 0  –  –
  தென்னாப்பிரிக்கா 5 806 201.50 299* 4/0 2 0  –  –
  மேற்கிந்தியத் தீவுகள் 5 447 74.50 223 2/0 15 1 15.00 1/8
மொத்தம் 52 6996 99.94 334 29/13 72 2 36.00 1/8

சாதனைகள்

 • டெஸ்ட் போட்டிகள் - 52
 • இன்னிங்ஸ் - 80
 • ஓட்டங்கள் - 6996
 • சராசரி - 99.94

மேற்கோள்கள்

 1. Lane, Daniel; Swanton, Will (16 December 2007). "All but tall will suffer: Ponting". The Age இம் மூலத்தில் இருந்து 8 December 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191208145755/https://www.theage.com.au/sport/cricket/all-but-tall-will-suffer-ponting-20071216-ge6ikm.html. 
 2. Shaw, John (27 February 2001). "Sir Donald Bradman, 92, Cricket Legend, Dies". The New York Times இம் மூலத்தில் இருந்து 12 November 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201112015733/https://www.nytimes.com/2001/02/27/sports/sir-donald-bradman-92-cricket-legend-dies.html. 
 3. "Sir Donald Bradman player profile". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2008-05-18. Sir Donald Bradman of Australia was, beyond any argument, the greatest batsman who ever lived and the greatest cricketer of the 20th century. Only WG Grace, in the formative years of the game, even remotely matched his status as a player.
 4. Hutchins, Brett (2002). Don Bradman: Challenging the Myth. Cambridge University Press. p. 21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0521823846.
 5. "Legislative Assembly of ACT". Hansard. 28 February 2001. Archived from the original on 24 September 2015. பார்க்கப்பட்ட நாள் 23 August 2008.
 6. "The Sports Factor (transcript)". ABC Radio. 2 March 2001. Archived from the original on 5 February 2008. பார்க்கப்பட்ட நாள் 23 August 2008.
 7. Haigh, Gideon (2002). "Beyond the Legend". Wisden. பார்க்கப்பட்ட நாள் 22 August 2007.
 8. "The Don celebrated on commemorative $5 coin". Abc.net.au. 26 August 2008. பார்க்கப்பட்ட நாள் 21 August 2010.
 9. 9.0 9.1 9.2 "Donald George Bradman". Bradman Museum. Archived from the original on 1 September 2007. பார்க்கப்பட்ட நாள் 23 August 2008.
 10. "Bradman's Italian heritage revealed". Adelaidenow.com.au. Archived from the original on 2016-02-07. பார்க்கப்பட்ட நாள் 2016-01-25.
 11. VisitNSW பரணிடப்பட்டது 2014-03-25 at the வந்தவழி இயந்திரம். Retrieved 25 June 2014
 12. The Bradman Trail பரணிடப்பட்டது 19 சூலை 2008 at the வந்தவழி இயந்திரம். Retrieved 25 June 2014
 13. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-09-16. பார்க்கப்பட்ட நாள் 2010-09-16.
 14. "FAQs". Bradman Museum. Archived from the original on 1 September 2007. பார்க்கப்பட்ட நாள் 23 August 2008.
 15. "1st Test Australia v England, match report". Wisden. 1930. பார்க்கப்பட்ட நாள் 7 August 2007.
 16. Whitington (1974), p 147. This record was broken in the next Test when Australia's Archie Jackson hit 164 on debut at Adelaide.
 17. Bradman (1950). See appendix.
 18. "4th Test Australia v England, match report". Wisden. 1930. பார்க்கப்பட்ட நாள் 21 August 2007.
 19. 19.0 19.1 Robertson-Glasgow, R. C. (1949). "A Miracle Has Been Removed From Among Us". Wisden. பார்க்கப்பட்ட நாள் 20 August 2007.
 20. Bradman (1950), p 29.
 21. "Most running in a first class innings". பார்க்கப்பட்ட நாள் 15 January 2012.
 22. Page, Michael (1984). "Bradman Digital Library: Essay by Michael Page". Pan Macmillan Australia Pty Ltd. Archived from the original on 20 June 2008. பார்க்கப்பட்ட நாள் 23 May 2008.
 23. Page (1983), p 361.
 24. "Statsguru — DG Bradman — Test matches — Batting analysis". கிரிக்இன்ஃபோ. Archived from the original on 2 சனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 20 சூன் 2008.
 25. "Statsguru — DG Bradman — Test Bowling — Bowling analysis". கிரிக்இன்ஃபோ. Archived from the original on 2 சனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 20 சூன் 2008.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=டான்_பிராட்மன்&oldid=3993021" இலிருந்து மீள்விக்கப்பட்டது