ஜார்ஜ் ஹெட்லி

மேற்கு இந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணியின் வீரர்

ஜார்ஜ் அல்போன்சோ ஹெட்லி (George Alphonso Headley 30 மே 1909 - 30 நவம்பர் 1983) ஒரு மேற்கு இந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். அவர் 22 தேர்வுத் துடுப்பாட்டப் டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். இரண்டாம் உலகப் போருக்கு முன்பு. மேற்கிந்தியத் தீவுகளுக்காக விளையாடிய சிறந்த மட்டையாளர்களில் ஒருவராகவும், அனைத்துக் காலத்திற்குமான மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராகவும் கருதப்படும் ஹெட்லி ஜமைக்காவையும் பிரதிநிதித்துவப்படுத்தி இங்கிலாந்தில் தொழில்முறை துடுப்பாட்ட சங்கங்களில் விளையாடியுள்ளார்.இவரது சமயத்தில் பலம் இழந்த மேற்கிந்தியத் தீவுகள் அணியாக இருந்தது. அதனால் இவரின் மீது அதிக பொறுப்பு இருந்தது. அவர் மூன்றாம் இடத்தில் மட்டையாடினார், தேர்வுத் துடுப்பாட்டத்தில் 2,190 ஓட்டங்களை எடுத்துள்ளார். அவரது மட்டையாட்ட சராசரி 60.83 ஆகும்.மேலும் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் 9,921 ஓட்டங்களை 69.86 எனும் சராசரியில் எடுத்துள்ளார். 1934 ஆம் ஆண்டில் ஆண்டின் சிறந்த விசுடன் துடுப்பாட்ட வீரராகத் தேர்வானார்.

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

ஹெட்லி 1909 மே 30 அன்று பனாமாவின் கொலனில் பிறந்தார்.டிகோர்சி ஹெட்லி மற்றும் ஐரீன் ராபர்ட்ஸ் ஆகியோரின் மகனாக பிறந்தார். ஹெட்லியின் பெற்றோர் இருவரும் பனாமாவைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவரது தந்தை பார்படோஸையும் அவரது தாயார் ஜமைக்காவையும் சேர்ந்தவர்கள். அதே நேரத்தில் பனாமா கால்வாய் கட்டுமானத்தில் டிகோர்சி பணிபுரிந்தார். ஹெட்லிக்கு ஐந்து வயதாக இருந்தபோது, கால்வாய் பணி முடிந்தது, மேலும் இவரது குடும்பம் மேலும் வேலை தேடி கியூபாவுக்குச் சென்றது. 1919 ஆம் ஆண்டில், தனது மகனால் ஸ்பானிஷ் பேசப்படுவதைப் பற்றி கவலைப்பட்ட ஹெட்லியின் தாய் அவரை ஜமைக்காவிற்கு அழைத்துச் சென்றார், இதனால் அவருக்கு ஆங்கிலம் பேசும் பள்ளியில் கல்வி கற்க முடியும் எனக் கருதினார். [1]

ஹெட்லி தனது தாயின் மைத்துனர் திருமதி கிளாரன்ஸ் ஸ்மித்துடன், கிங்ஸ்டனின் ரே டவுனில் குடிபெயர்ந்தார். 1933 இல் இறக்கும் வரை அவருடன் இருந்தார். [1] [2] அவரது தாயார் கியூபாவுக்குத் திரும்பினார். இருந்தபோதிலும் தனது மகனுடன் தொடர்ந்து கடிதங்களைப் பரிமாறிக் கொண்டார். அவர் கலபார் தொடக்கப்பள்ளியில் பயின்றார், அங்கு அவர் பள்ளி துடுப்பாட்ட அணிக்காக இழப்புக் கவனிப்பாளராக விளையாடினார். பின்னர், கிங்ஸ்டன் உயர்நிலைப் பள்ளியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். [3] உள்ளூர் கிராபோல் பூங்காவில் நடந்த ஒரு நாள் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்கேற்ற ஹெட்லி உள்ளூர் மக்களின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கினார், [4] மற்றும் 16 வயதில், அவர் ரெய்டவுன் துடுப்பாட்ட சங்கத்ஹில் சேர்ந்தார். 1925 ஆம் ஆண்டில் அவர் தனது முதல் நூறு ஓட்டங்களை அடித்தார். க்ளோவெல்லிக்கு எதிரான ரெய்டவுனுக்கான போட்டியில் மூன்றாவது வீரராக மட்டையாடினார். [5]

பள்ளியை விட்டு வெளியேறியதும், ஹெட்லி ஒரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தற்காலிக எழுத்தராக நியமிக்கப்பட்டார். இது 1926 ஆம் ஆண்டில் செயின்ட் ஆண்ட்ரூசின் காவல் துறை அணி தரப்பில் ஒரு துடுப்பாட்டப் போட்டியில் விளையாட அவருக்கு உதவியது. [6] இவரது சிறப்பான ஆட்டத் திறனால் ஈர்க்கப்பட்ட யமைக்காஅ அணி நிர்வாகம் இவரை விளையாட அழைத்தது.ஆனால் இவரது வேலையின் காரணமாக இவரால் பங்கேற்க இயலவில்லை. அதனால் 1927 ஆம் ஆண்டில் லயனல் டென்னிசனின் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான் இவரை கருத்தில் கொள்ளவில்லை. [7]

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 Lawrence, p. 7.
  2. "Every Ward In Corporate Area Hard Hit By Rainstorm". The Daily Gleaner (Kingston, Jamaica): p. 6. 17 August 1933. 
  3. Lawrence, p. 9.
  4. Lawrence, pp. 9–10.
  5. Lawrence, p. 10.
  6. Most members of the Police team were not actual police officers. Lawrence, p. 11.
  7. Lawrence, p. 11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்ஜ்_ஹெட்லி&oldid=2892550" இலிருந்து மீள்விக்கப்பட்டது