இலக்குக் குச்சி

(குச்சம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இலக்குக் குச்சி (stump) என்பது துடுப்பாட்டத்தின் போது பயன்படுத்தப்படும் இலக்கில் காணப்படும் நிலைக்குத்துத் தடிகள் ஆகும். இதன் தோற்றம் தரையில் நிலைக்குத்தாக ஊன்றப்பட்ட மூன்று குச்சங்களும் அவற்றின் மேல் வைக்கப்பட்ட இரண்டு சிறிய குறுக்குத்தடிகளும் ஆகும். இலக்குக் குச்சிகள் பொதுவாக மரத்தினாலானவை. வீசுகளத்தின் இரண்டு முனைகளில் இரு இலக்குகள் அமைக்கப்பட்டிருக்கும். ஒரு இலக்கின் மொத்த அகலம் 9 அங்குலம் (22.9 செமீ) ஆகும்.

இலக்குக் குச்சி (Stump)

ஒவ்வொரு இலக்குக் குச்சியும் 28 அங்குலம் (71.1 செமீ) உயரமும் கூடிய விட்டமாக 112 அங்குலத்தையும் (3.81 செமீ) குறைந்த விட்டமாக 138 (3.49 செமீ) அங்குலத்தையும் கொண்டிருக்கும். இலக்குக் குச்சியின் ஒரு முனை தரையில் நடப்பட வசதியாக கூறாக கானப்படுவதோடு மற்றைய முனையில் இணைப்பான்களைத் தாங்கும் வகையில் அரைவட்டவடிவத் தவாளிப்பு காணப்படும்.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Stump". The Free Dictionary By Farlex. பார்க்கப்பட்ட நாள் 11 July 2012.
  2. "Cricket equipment: The stumps". BBC. 24 August 2005 இம் மூலத்தில் இருந்து 5 October 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071005174340/http://news.bbc.co.uk/sport1/hi/cricket/rules_and_equipment/4177874.stm. 
  3. "Stumps". Sports Definitions.com. Archived from the original on 31 ஆகத்து 2012. பார்க்கப்பட்ட நாள் 11 சூலை 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலக்குக்_குச்சி&oldid=4133242" இலிருந்து மீள்விக்கப்பட்டது