பாட்டி
பாட்டி என்னும் சொல் பழந்தமிழில் இருவேறு பொருள்களையும், இன்றைய தமிழில் முறைப்பெயரையும் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. 'பாட்டி' என்ற சொல் இன்றைய தமிழில் பெற்றோரின் தாயைக் குறிக்கிறது.
பழந்தமிழில்
தொகுஅகத்திணை வாயில்
தொகுஅகத்திணை மாந்தர்களில் அகத்திணை வாயிலாகச் செயல்படுவோரில் ‘பாட்டி’ என்பவரும் ஒருவர். [1] இங்குப் பாட்டி என்னும் சொல் பாடினியைக் குறிக்கும். [2] கற்பு வாழ்க்கையில் தலைவியின் ஊடல் தீர்க்கப் பாணன் உதவுவது போலப் பாடினியும் உதவுவாள் எனத் தெரிகிறது. பண் பாடுபவன் பாணன். பண் பாடுபவள் பாடினி அல்லது பாட்டி.
மீனவப்பெண்
தொகுபாணன் வரால் மீனைக் கொடுத்து நறவுக் கள்ளைப் பண்டமாற்றாக வாங்கி உண்டு வேட்டைக்குச் செல்வதை மறந்து படுத்துக் கிடந்தவனுக்குப் ‘பாட்டி’ (பாடினி) ஆம்பல் இலையில் சுடச்சுடப் பொங்கல் சோறும், இனிப்பும் புளிப்பும் கலந்த பிரம்புப் பழமும் விடியல் பொழுதில் இட்டு உண்ணச் செய்வாளாம். [3]
பெண்நாய், பெண்பன்றி
தொகுவிலங்கினத்தில் பெண்ணைக் குறிக்கும் சொற்கள் எனத் தொல்காப்பியர் 13 பெயர்களைக் குறிப்பிடுகிறார். அவற்றில் ஒன்று ‘பாட்டி’. [4]
பெண் நாயையும், பெண் பன்றியையும் பாட்டி என வழங்கி வந்தனர். [5]
அடிக்குறிப்புகள்
தொகு- ↑ தொல்காப்பியம் கற்பியல் 52
- ↑ ஒப்புநோக்குக திருவாளன் – திருவாட்டி
- ↑
நெடுங்கொடி நுடங்கும் நறவுமலி பாக்கத்து
நாள்துறைப் பட்ட மோட்டிரு வராஅல்
துடிக்கட் கொழுங்குறை நொடுத்துண்டு ஆடி
வேட்டம் மறந்து துஞ்சுங் கொழுநர்க்குப் பாட்டி
ஆம்பல் அகலிலை அமலைவெஞ் சோறு
தீம்புளிப் பிரம்பின் திரள்கனி பெய்து
விடியல் வைகறை இடூஉம் ஊர – அமநானூறு 196 - ↑ தொல்காப்பியம் மரபியல் 3
- ↑ தொல்காப்பியம் மரபியல் 66
தொகு | அகத்திணை மாந்தர் |
---|---|
அகத்திணைத் தலைவர்கள் | தலைவன் | தலைவி | காமக்கிழத்தியர்
|
அகத்திணை வாயில்கள் | தோழி | நற்றாய் | செவிலி | பார்ப்பான் | பாங்கன் | பாணன் | பாட்டி | இளையர் | விருந்தினர் | கூத்தர் | விறலியர் | அறிவர் | கண்டோர் | வரைவின் மகளிர் | பரத்தையர்
|