பரத்தையர் என்பவர் ஆடலிலும் பாடலிலும் வல்லவராகி அழகும் இளமையும் காட்டி இன்பத்தையும் பொருளையும் விரும்பி ஒருவரிடம் செல்லும் பெண்கள் ஆவார். இவர்கள் ஒருவரிடத்தும் தங்காத் தன்மை உடையவர்கள். கணிகையர் என்பதும் இவர் பெயர் ஆகும். இவர்களிடம் செல்லும் ஆடவர்கள் "பரத்தமை ஒழுக்கம்" மெற்கொண்டவர்கள் எனத் தொல்காப்பியம், அகப்பொருள் விளக்கம் போன்ற இலக்கண, இலக்கிய நூல்கள் குறிப்பிடுகின்றன.

பரத்தையரின் வகைகள் தொகு

பரத்தையர்கள்

  • சேரிப்பரத்தையர்
  • காதல் பரத்தையர்

எனப் பல வகைப்படுவர் சேரிப்பரத்தையர் தனிப்பட்ட யாரொருவரையும் விரும்பாமல் இயல்பினராய் பலருக்கும் உரியவர்கள் ஆவர். காதல் பரத்தையர் என்பவர் சேரிப்பரத்தையின் மகளாய்த் தலைவன் ஒருவனுக்கே உரிமைபூண்டு காதல் காரணமாகப் புணர்வோர் ஆவர். இவளே குலப்பரத்தை எனவும் காமக்கிழத்தி-யின் தாய் எனவும் கூறப்படுகிறாள். தலைவன், தலைவியை இகழ்ந்து, தம்மைப் புகழ்தலும் நிகழ் பொருள் காத்தலும் இவர்களது இயல்புகளாகக் கூறப்படுகின்றது.

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரத்தையர்&oldid=3327047" இலிருந்து மீள்விக்கப்பட்டது