பாங்கன் என்பவன் தலைவனின் பாங்கறிந்து ஒழுகுபவன். எப்போதும் தலைவனுடன் இருப்பவன்.

வேறுபாட்டை நினைவில் கொள்க

பாங்கர் நிமித்தம் பன்னிரண்டு [1]

அகத்திணையில் பாங்கன் பங்கு
  • தலைவனுக்கு உறுதுணையாக இருத்தல் மட்டுமல்லாது தலைவனோடு மாறுபட்டு இடித்துரைக்கும் உரிமையும் உள்ளவன் பாங்கன். [2] களவொழுக்கக் காலத்தில் தலைவன் தலைவியின் நினைவாகவே இருக்கும்போதும், கற்பொழுக்கக் காலத்தில் தலைவன் பரத்தையை நாடும்போதும் பாங்கன் இடித்துரைப்பான்.
  • அகத்திணை மாந்தர்களில் வாயில்களில் ஒருவராக இருந்து செயலாற்றுபவன் பாங்கன். [3]
  • சிறப்பு வகையால் பாங்கன் கூற்று களவியல் வாழ்க்கையிலேயே நிகழும். [4]

அடிக்குறிப்புகள் தொகு

  1. தொல்காப்பியம் அகத்திணையியல் 13
  2. மொழியெதிர் மொழிதல் பாங்கற்கு உரித்தே – தொல்காப்பியம் கற்பியல் 41
  3. தொல்காப்பியம் கற்பியல் 52
  4. தொல்காப்பியம் செய்யுளியல் 181

காண்க தொகு

தொகு அகத்திணை மாந்தர்
அகத்திணைத் தலைவர்கள் தலைவன் | தலைவி | காமக்கிழத்தியர்
அகத்திணை வாயில்கள் தோழி | நற்றாய் | செவிலி | பார்ப்பான் | பாங்கன் | பாணன் | பாட்டி | இளையர் | விருந்தினர் | கூத்தர் | விறலியர் | அறிவர் | கண்டோர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாங்கன்&oldid=3230001" இலிருந்து மீள்விக்கப்பட்டது