விறலியர் என்பது கூத்தர் என்ற சொல்லின் பெண்பால். மலைபடுகடாம் நூலைக் கூத்தராற்றுப்படை என்பர். அதில் விறலியர் தொன்றுதொட்டு வரும் மரபுப்படி முதலில் கடவுளை வாழ்த்திப் பாடி ஆடுவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.[1]

விறலி என்பவள் பாண்மகள் எனவும் அழைக்கப்படுகின்றாள்[2]

விறலியர் இசைக்கருவிகளுடன் செல்வர்.[3]

பாட்டுப் பாடிப் பண்ணிசைக்கேற்ப ஆடுவர். பாட்டின் பொருள் புலப்படும்படி உடல் உறுப்புகளை அசைத்துக் காட்டுவர். இவர்கள் இவ்வாறு காட்டுவதற்கு ‘விறல்’ என்று பெயர்.

அகத்திணைப் பாடல்களில் விறலியர்

திருமணம் செய்துகொண்டு வாழும் கற்பு ஒழுக்கத்தில் தலைவன் பரத்தையோடு இருந்துவிட்டு வீடு திரும்பும்போது தலைவி ஊடுவாள். அந்த ஊடலைத் தீர்க்க உதவும் வாயில்களில் விறலியரும் ஒரு சாரார்.

அடிக்குறிப்புகள்

தொகு
  1. மலைபடுகடாம் 536
  2. செல்லாமோ தில் பாண்மகள் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனிடம், காக்கை பாடினியார் நச்செள்ளையார் ஆற்றுப்படுத்துகிறார் – பதிற்றுப்பத்து 60,
  3. நல்யாழ் ஆகுளி பதலையொடு சுருக்கிச், செல்லாமோ தில் சில்வளை விறலி - பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியிடம் நெடும்பல்லியத்தனார் ஆற்றுப்படுத்தும் பாடல் - புறநானூறு 64,

காண்க

தொகு
தொகு அகத்திணை மாந்தர்
அகத்திணைத் தலைவர்கள் தலைவன் | தலைவி | காமக்கிழத்தியர்
அகத்திணை வாயில்கள் தோழி | நற்றாய் | செவிலி | பார்ப்பான் | பாங்கன் | பாணன் | பாட்டி | இளையர் | விருந்தினர் | கூத்தர் | விறலியர் | அறிவர் | கண்டோர் | வரைவின் மகளிர் | பரத்தையர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=விறலியர்&oldid=4138468" இலிருந்து மீள்விக்கப்பட்டது