டெக்கான் சார்ஜர்ஸ்

டெக்கான் சார்ஜர்ஸ் (Deccan Chargers சுருக்கமாக DC) என்பது ஐதராபாத் நகரத்தை மையமாகக் கொண்ட ஒரு செயலிழந்த ஐபிஎல் அணியாகும். [1] இந்த அணி 2008 ஆம் ஆண்டு ஐபிஎல்லின் எட்டு தொடக்க அணிகளில் ஒன்றாகவும், 2009 ஆம் ஆண்டின் வெற்றியாளராகவும் இருந்தது. இது தி டெக்கன் குரோனிக்கள் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமானது. முதல் பருவத்தில் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்த பிறகு, 2009 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற இரண்டாவது பருவத்தில் முன்னாள் ஆத்திரேலிய இலக்குக் கவனிப்பாளரும் மட்டையாளருமான ஆடம் கில்கிறிஸ்ட் தலைமையில் வெற்றி பெற்றது. ஐபிஎல்லின் முதல் மூன்று பருவங்களுக்கு கில்கிறிஸ்ட் தலைவராக இருந்தார், ரோஹித் சர்மா துணைத்தலைவராக இருந்தார். நான்காவது பருவத்தில் இருந்து, குமார் சங்கக்கார அணியை வழிநடத்தினார் மற்றும் கேமரூன் ஒயிட் துணைத் தலைவராக விளையாடினார். இந்த அணிக்கு முன்னாள் ஆத்திரேலிய வீரர் டேரன் லீமன் பயிற்சியாளராக இருந்தார். [2]

டெக்கான் சார்ஜர்ஸ்
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்குமார் சங்கக்கார
பயிற்றுநர்டேரன் லீமன்
உரிமையாளர்தி டெக்கன் குரோனிக்கள்
அணித் தகவல்
நகரம்ஐதராபாத்
நிறங்கள்DC
உருவாக்கம்2008
உள்ளக அரங்கம்
வரலாறு
ஐ.பி.எல் வெற்றிகள்1 (2009)
சாம்பியன்சு இலீகு வெற்றிகள்0
அதிகாரபூர்வ இணையதளம்:http://www.deccanchargers.com/
2012 இந்தியன் பிரீமியர் லீக்

ஐபிஎல்

தொகு

வீரர்கள்

தொகு

ஆரம்பத்தில் நட்சத்திர வீரர்களான ஆடம் கில்கிறிஸ்ட், ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், சாகித் அப்ரிடி, ஸ்காட் ஸ்டைரிஸ் மற்றும் ஹெர்ஷல் கிப்ஸ் ஆகியோரை ஏலத்தில் எடுத்தது. ஆர்.பி. சிங், நுவான் சொய்சா மற்றும் சமிந்த வாஸ் ஆகியோர் முக்கியப் பந்துவீச்சாளர்களாக இருந்தனர் ரோஹித் சர்மா, வேணுகோபால் ராவ் மற்றும் பிரக்யான் ஓஜா ஆகிய குறிப்பிடத்தகுந்த இந்திய வீரர்களும் இருந்தனர். [3]

செயல்திறன்

தொகு

ஐபிஎல் போட்டியின் தொடக்கப் பதிப்பில் வெற்றி பெறும் அணிகளில் ஒன்றாக இருந்த போதிலும், இந்த அணி கடைசி இடத்தைப் பிடித்தது. அணியின் மிகவும் விலையுயர்ந்த வீரரான ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், ஆஸ்திரேலிய தேசிய அணிக்காக விளையாடுவதற்கு முன் 3 ஆட்டப் பகுதிகளில் மட்டுமே விளையாடினார். அணித் தலைவர் விவிஎஸ் லட்சுமனுக்குக் காயம் ஏற்பட்டது. இந்தப் பருவத்தில் ஆர்பி சிங், பிரக்யான் ஓஜா மற்றும் ஷாஹித் அப்ரிடி ஆகிய மூன்று பந்துவீச்சாளர்கள் மட்டுமே 4 இலக்குகளுக்கு மேல் வீழ்த்தினர். 14 போட்டிகளில், ஒட்டுமொத்தமாக 2 வெற்றிகளை மட்டுமே பெற்றது.

துவக்கத்தில் சில போட்டிகளில் தோல்வியின்றி அதிக ஒட்டங்களைக் குவித்திருந்தாலும் பின்னர் நடைபெற்ற சில போட்டிகளில் தோல்வியடைந்து சிறிய பின்னடைவைச் சந்தித்தது. ஆனால் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், ரோஹித் சர்மா ஆகியோரின் பங்களிப்பும் தலைவர் ஆடம் கில்கிறிஸ்டின் தொடர்ச்சியான உற்சாகமும் அணிக்கு வலுவூட்டியது. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் முக்கியப் போட்டிகளில் தோல்வியடைந்ததன் மூலம், இந்த அணி அரையிறுதிக்கு முன்னேறியது. அட்டவணையில் முதலிடத்தில் இருந்த டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று வாகையாளராக ஆனது.

11 ஆகஸ்ட் 2009 அன்று, ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் மண்டல மேலாளர் தினேஷ் வாத்வா 2010க்கான தலைமை இயக்க அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

KKR க்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் தோல்வியுடன் தொடங்கியபோதும், அடுத்த மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றது. ஆனால் அதன்பிறகு அடுத்த ஐந்து போட்டிகளில் தோல்வியைத் தழுவியது. இருந்தபோதிலும்,தொடர்ந்து ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று தகுதிச் சுற்றுப் போட்டிக்குத் தகுதி பெற்றனர். ஆனால் அரையிறுதியில் தோல்வியடைந்தது.

ஏலம் தொடங்கும் முன் சார்ஜர்ஸ் நிர்வாகம் எந்த வீரரையும் தக்கவைக்க வேண்டாம் என்று முடிவு செய்து அனைத்து வீரர்களையும் ஏலத்தில் எடுத்தது. 8- 9 சனவரி 2011 இல் கேமரூன் ஒயிட், ஜே.பி. டுமினி, இஷாந்த் ஷர்மா, டேல் ஸ்டெய்ன் மற்றும் தலைவர் குமார் சங்கக்கார ஆகியோரை ஏலத்தில் எடுத்தனர், ஆனால் ஆர்.பி. சிங், ரோஹித் சர்மா, மற்றும் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மற்றும் அடம் கில்கிறிஸ்ட் ஆகியோரை இழந்தனர்.

செயல்திறன்

தொகு

அணி முதல் 2 ஆட்டங்களில் தோல்வியுடன் தொடங்கியது, ஆனால் அடுத்த போட்டியில் வென்றது. சில ஆட்டங்களில் வெற்றி பெற்ற போதிலும் அந்த அணி மோசமாக தோல்வியடையத் தொடங்கியது, அதனால் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டது.

கௌரவங்கள்

தொகு

ஐபிஎல்

தொகு
ஆண்டு லீக் நிலை இறுதி நிலை
2008 8 இல் 8வது குழு நிலை
2009 8 இல் 4வது வாகையாளர்
2010 8 இல் 2வது அரை இறுதி
2011 10ல் 7வது குழு நிலை
2012 9 இல் 8வது குழு நிலை

முடிவுகள்

தொகு

ஒட்டுமொத்தமாக

தொகு
ஆண்டு விளையாடிய

போட்டிகள்

வெற்றி தோல்வி சமன் வெற்றி% நிலை
ஐபிஎல்
2008 14 2 12 0 14% 8/8
2009 16 9 7 0 56% 1/8
2010 16 8 8 0 50% 4/8
2011 14 6 8 0 42% 7/10
2012 15 4 11 0 26.67% 8/9
Total 75 29 46 0 38.67%
சேம்பியன்ஸ் லீக் இ20
2009 2 0 2 0 0% 10/12
மொத்தம் 2 0 2 0 0%
ஒட்டுமொத்தமாக
ஒட்டுமொத்தமாக 77 29 48 0 37.67%

அணி வாரியாக

தொகு
எதிரணி காலம் போட்டி வெற்றி தோல்வி சமன் வெற்றி% சதவீதம்
IPL
சென்னை சூப்பர் கிங்ஸ் 2008–2012 10 4 6 0 0 40.00
டெல்லி கேபிடல்ஸ் 2008–2012 11 4 7 0 0 36.36
பஞ்சாப் கிங்ஸ் 2008–2012 10 3 7 0 0 30.00
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2008–2012 10 2 7 0 1 22.57
மும்பை இந்தியன்ஸ் 2008–2012 10 4 6 0 0 40.00
ராஜஸ்தான் ராயல்ஸ் 2008–2012 9 2 7 0 0 22.22
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 2008–2012 11 6 5 0 0 54.54
கொச்சி இட்டசுக்கேர்சு கேரளா 2011 1 1 0 0 0 100.00
புனே வாரியர்சு இந்தியா 2011–2012 4 3 1 0 0 75.00
மொத்தம் 2008–2012 76 29 46 0 1 38.66%
சேம்பியன்ஸ் லீக் இ20
டிரினிடாட் மற்றும் டொபாகோ 2009 1 0 1 0 0 0.00
சாம்ர்சட் சோபர்ஸ் 2009 1 0 1 0 0 0.00

மேற்கோள்கள்

தொகு
  1. "Cricket News: Live Cricket Scores, Cricket Live News, Schedule - Cricketnext". News18. Archived from the original on 23 March 2008. பார்க்கப்பட்ட நாள் 19 March 2008.
  2. "Kumar Sangakkara to lead Deccan Chargers in IPL 4". 5 April 2011. Archived from the original on 15 October 2019. பார்க்கப்பட்ட நாள் 15 October 2019.
  3. "Deccan Chargers Squad / Players". Archived from the original on 7 June 2019. பார்க்கப்பட்ட நாள் 15 October 2019.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெக்கான்_சார்ஜர்ஸ்&oldid=4059357" இலிருந்து மீள்விக்கப்பட்டது