ஜே பி டுமினி

ஜீன்-போல் டுமினி (Jean-Paul Duminy[1], பிறப்பு: ஏப்ரல் 14, 1984), தென்னாபிரிக்கா துடுப்பாட்ட அணியின் முன்னணி துடுப்பாளர்களுள் ஒருவர். இவர் இடதுகை துடுப்பாட்டக்காரராவார். களத்தடுப்பாட்டத்திலும் குறிப்பிடத் தகுந்தவர் ஆவார். பகுதிநேரமாக பந்துவீச்சில் பங்கேற்கும் இவரின் பந்துவீச்சு நடை வலதுகை புறத்திருப்பம் ஆகும். இவர் பன்னாட்டு இருபது20 போட்டிக்கு உதவித் தலைவராக உள்ளார். பாக்கித்தான் சூப்பர் லீக்கில் இஸ்லமாதாபாத் யுனைட்டட் அணிக்காகவும், இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார். இவர் 2008 ஆம் ஆண்டு முதல் 2017 வரையிலான காலகட்டங்களில் இவர் 46 தேர்வுத் துடுப்பாட்டங்களில் விளையாடியுள்ளார்.பின் செப்டம்பர் 2017 இல் தேர்வுத் துடுப்பாட்டங்களில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.[2] இவர் தென்னாப்பிரிக்க அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம்,ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஜீன்-போல் டுமினி
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜீன்-போல் டுமினி
பட்டப்பெயர்ஜே. பி
மட்டையாட்ட நடைஇடதுகை
பந்துவீச்சு நடைவலதுகை புறத்திருப்பம்
பங்குதுடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 302)திசம்பர் 17 2008 எ. ஆத்திரேலியா
கடைசித் தேர்வுசூலை 30 2015 எ. வங்காளதேசத்
ஒநாப அறிமுகம் (தொப்பி 77)ஆகத்து 20 2004 எ. இந்தியா
கடைசி ஒநாபஅக்டோபர் 18 2015 எ. இந்தியா
ஒநாப சட்டை எண்21
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா T20I முதல்
ஆட்டங்கள் 29 146 59 88
ஓட்டங்கள் 1,280 3,937 1,406 5,604
மட்டையாட்ட சராசரி 35.55 38.98 37.00 48.73
100கள்/50கள் 4/6 4/21 –/7 17/28
அதியுயர் ஓட்டம் 166 150* 96* 200*
வீசிய பந்துகள் 2,232 2697 271 4,693
வீழ்த்தல்கள் 35 55 14 69
பந்துவீச்சு சராசரி 37.17 42.40 24.93 39.27
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0 0
சிறந்த பந்துவீச்சு 4/73 3/29 3/18 5/108
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
21/– 60/– 26/– 62/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், 13 November 2015

சர்வதேச போட்டிகள்

தொகு

டிசம்பர் 17, 2008 இல் மேற்கு ஆஸ்திரேலிய துடுப்பாட்ட சங்க அரங்கத்தில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். அணியின் துணை ஆஷ்வெல் பிரின்ஸ் காயம் காரணமாக விலகினார்.[1] இதனால் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்தப் போட்டியின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்கள் அடித்து வெற்றிக்கான ஓட்டத்தை அடித்தார். இந்தப் போட்டியில் ஏ பி டி வில்லியர்சுடன் இணைந்து 100 ஓட்டங்கள் அடித்து வெற்றிக்கு உதவினார். பீட்டர் ரோபக் உட்பட பல துடுப்பாட்ட விமர்சகர்கள் இவருடைய செயல்பாடுகளை விமர்சனத்திற்கு உள்ளாக்கினர்.[1] பின் பொக்சிங் நாள் அன்று நடந்த தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் தனது முதல் நூறு ஓட்டங்களை அடித்தார். இந்தப் போட்டியில் 166 ஓட்டங்கள் எடுத்தார். இவரும் டேல் ஸ்டெய்னுடன் 9 ஆவது இணைக்கு 180 ஓட்டங்கள் சேர்த்தனர். இதன்மூலம் 9 ஆவது இணைக்கு அதிக ஓட்டங்கள் எடுத்த தென்னாப்பிரிக்க இணை எனும் சாதனையைப் படைத்தனர். இதற்கு முன்னதாக ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் கிரயெம் சிமித் மற்றும் ஷான் பொலொக் இணை எடுத்த ஓட்டங்களே சாதனையாக இருந்தது. இந்தப் போட்டியில் 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆத்திரேலிய மண்ணில் தென்னாப்பிரிக்கா தொடரை முதல் முறையாக வென்று சாதனை படைத்தது. மேலும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஆத்திரேலியா அதன் சொந்த மண்ணில் தொடரை இழந்தது.

பிரிசுபேன் துடுப்பாட்ட அரங்கத்தில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் இவர் டேவிட் ஹசி அடித்த பந்தினை இவர் பிடித்த கேட்ச் தற்போதுவரை சிறந்த கேட்சுகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் மைக்கல் கிளார்க்கின் இலக்கினை முதல் இலக்காக கைப்பற்றினார்.

2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை தொடரில் 99 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் 99 ஓட்டங்களில் ஆட்டமிழந்த இரண்டாவது மட்டையாளர் எனும் சாதனை படைத்தார். இதற்கு முன்னதாக அடம் கில்கிறிஸ்ற் இவ்வாறு ஆட்டமிழந்தார். மேலும் இவ்வாறு ஆட்டமிழப்பது ஒட்டுமொத்தமாக 36 ஆவது முறையாகும்.[3]

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Peter Roebuck (21 December 2008). "Steely youths score greatest win". The Sydney Morning Herald. smh.com.au. பார்க்கப்பட்ட நாள் 28 December 2008.
  2. "Duminy calls time on Test career". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 16 September 2017.
  3. "South Africa vs Ireland, ICC World Cup 2011". Cricket Archives.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜே_பி_டுமினி&oldid=3214188" இலிருந்து மீள்விக்கப்பட்டது