மைக்கல் கிளார்க்

ஆஸ்திரேலிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர்

மைக்கல் ஜான் கிளார்க் (Michael John Clarke (பிறப்பு:ஏப்ரல் 2, 1981 லிவர்பூல்,நியூ சவுத் வேல்ஸ் இவுஸ்திரேலியா) ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி முன்னாள் வீரர் மற்றும் அணித் தலைவர் ஆவார். இவர் சிறப்பு மட்டையாளராக இவுஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ளார். இவர் "பப்" எனவும் அழைக்கப்படுகிறார்.[1] இவர் பொதுவாக அணியின் இடைநிலை மட்டையாளராக களமிறங்குவார். இவர் பகுதிநேர சுழற்பந்து வீச்சாளாரும் ஆவார். 2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரை வென்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் தலைவராக இருந்தார்.[2]

மைக்கல் கிளார்க்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மைக்கல் ஜான் கிளார்க்
பிறப்பு2 ஏப்ரல் 1981 (1981-04-02) (அகவை 43)
ஆஸ்திரேலியா
உயரம்1.78 m (5 அடி 10 அங்)
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைஇடதுகை மரபுவழா சுழல்
பங்குமட்டையாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 389*)6 அக்டோபர் 2004 எ. இந்தியா
கடைசித் தேர்வு26 டிசம்பர் 2012 எ. இலங்கை
ஒநாப அறிமுகம் (தொப்பி 149)19 ஜனவரி 2003 எ. இங்கிலாந்து
கடைசி ஒநாப3 செப்டம்பர் 2012 எ. பாக்கித்தான்
ஒநாப சட்டை எண்23
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2000–நியூ சவுத்து வேல்சு புளூசு
2004Hampshire
2011–Sydney Thunder
2012–presentபுனே வாரியர்சு இந்தியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒ.ப மு.து ப. அ
ஆட்டங்கள் 90 223 154 291
ஓட்டங்கள் 7,092 7,307 11,625 9,231
மட்டையாட்ட சராசரி 53.32 45.10 48.84 42.73
100கள்/50கள் 23/25 7/54 39/42 8/69
அதியுயர் ஓட்டம் 329* 130 329* 130
வீசிய பந்துகள் 2,244 2,489 3,436 3,199
வீழ்த்தல்கள் 30 56 41 83
பந்துவீச்சு சராசரி 36.60 37.12 43.90 31.59
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
2 1 2 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 6/9 5/35 6/9 5/35
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
103/– 89/0 164/– 115/0
மூலம்: Cricinfo, 1 பெப்ரவரி 2013

முதல் பன்னாட்டு இருபது20 போட்டிக்கான ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் தலைவராக இவர் இருந்தார். இவர் 23 எண் கொண்ட ஆடையை அணிந்தார். இதற்கு முன் இந்த எண் கொண்ட ஆடையை ஷேன் வோர்ன் அணிந்திருந்தார். இவர் ஓய்வு பெற்றதை அடுத்து கிளார்க் அணிந்தார். ஜனவரி ,2011 ஆம் ஆண்டில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காக பன்னாட்டு இருபது20 போட்டிகளின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார்.[3]

2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரின் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளோடு இவர் தனது ஓய்வினை அறிவித்தார். இந்தத் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 72 பந்துகளில் 74 ஓட்டங்கள் எடுத்து ஐந்தாவது முறையாக கோப்பை வெல்வதற்கு உதவினார். வெற்றி பெறுவதற்கு 9 ஓட்டங்கள் தேவைப்படும் போது இவர் பவுல்டு முறையில் வீழ்ந்தார். அப்போது மெல்போர்ன் துடுப்பாட்ட அரஙக்த்தில் இருந்த 90,013 பார்வையாளர்களும் இவருக்கு எழுந்து நின்று மரியாதை அளித்தனர்.

ஆகஸ்டு 8, 2015 ஆம் ஆண்டில் ஆஷஸ் தொடரின் இறுதிப் போட்டியின் போது அனைத்து சர்வதேச போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வினை அறிவித்தார். இந்தப் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணி வெற்றி பெற்றது. கிளார்க் தலைவராக இருந்து ஆஷஸ் தொடரை இழப்பது இது இரண்டாவது முறையாகும்.[4][5]


சர்வதேச போட்டிகள்

தொகு

அக்டோபர் 2004 ஆம் ஆண்டில் பெங்களூரில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 151 ஓட்டங்கள் எடுத்து அணி வெற்றி பெற உதவினார்.[6] 2005 ஆம் ஆண்டில் நடந்த ஆஷஸ் தொடரில் நிலையான ஆட்டத் திறனை வெளிப்படுத்த தவறினார். இதனால் 2005 ஆம் ஆம் ஆண்டின் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி விளையாடிய தேர்வுத் துடுப்பாட்டங்களில் இவருக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை. முன்பாக தேர்வுத் துடுப்பாட்ட அணியில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பது தனது கனவு என்று தெரிவித்திருந்தார்.

2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெறச் செய்தார். டேமியன் மார்ட்டின் ஓய்வு பெற்றதை அடுத்து இவர் ஐந்தாவதாக களம் இறங்கினார். இந்த உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பாக விளையாடி நான்கு ,50 கள் அடித்தார். இதில் நெதர்லாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 92 ஓட்டங்கள் எடுத்தார். பின் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 93* ஓட்டங்கள் எடுத்தார். பார்படோசுவில் நடைபெற்ற இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில்60 ஓட்டங்கள் அடித்து அணியை இறுதிப் போட்டியில் விளையாடச் செய்தார்.

சொந்த வாழ்க்கை

தொகு

மைக்கேல் கிளார்க்கின் தந்தை ஒரு உட்புற விளையாட்டு மையத்தை சொந்தமாக வைத்திருந்தார்.[7] 2005-2006 ஆம் ஆண்டில் மைக்கேல் கிளார்க்குக்கு தோல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இவருக்கு 17 வயதில் நாள்பட்ட முதுகுவலி இருப்பது கண்டறியப்பட்டது. அன்றிலிருந்து இவர் தனது முதுகுவலியானது இவரது துடுப்பாட்ட வாழ்க்கையினைப் பாதிக்காத வண்னம் பார்த்துக் கொண்டார். இவரது தொழில் வாழ்க்கையின் பிற்பகுதியிலும் இவர் தொடை காயங்களால் பாதிக்கப்பட்டார். இயல்பாகவே இடது கை வீரராக இருந்தபோதிலும், இவர் தனது விளையாட்டை தனது தந்தையினைப் போல வடிவமைத்தார், மேலும் இடது கையினால் பந்துவீசும்போதும் வலது கை மட்டையாட்டம் ஆடக் கற்றுக்கொண்டார்.

நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஆத்திரேலியத் துடுப்பாட்ட சுற்றுப்பயணத்தின் போது மார்ச் 2010 இல், கிளார்க் தனிப்பட்ட காரணங்களுக்காக சிட்னி திரும்ப வேண்டியிருந்ததால் சுற்றுப் பயணத்திலிருந்து வெளியேறினார். மார்ச் 12, 2010 அன்று ஒரு இரவு பத்திரிகையாளர் சந்திப்பில், கிளார்க்கின் நிர்வாக உறுப்பினர்கள் இவரும் அப்போதைய வருங்கால மனைவியுமான லாரா பிங்கிள் (இப்போது வொர்திங்டன்) ஆகியோரின் நிச்சயதார்த்தத்தை நிறுத்த முடிவு செய்திருப்பதை உறுதிப்படுத்தினர்.[8] நவம்பர் 2010 இல் ஜி.க்யூ ஆத்திரேலியாவுடன் பேசிய கிளார்க், நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை விட்டு வெளியேறுவதற்கான தனது முடிவைப் பற்றி கூறினார், "நான் அங்கு எடுத்த எனது முடிவு, சரியானது என்று நான் நினைத்தேன். நான் என் நாட்டிற்காக விளையாடுவதை மதிக்கிறேன்,என்னை விட ஒரு சிறந்த வேலையைச் செய்யக்கூடிய வேறு யாரோ இருக்கிறார்கள். வீட்டிற்கு செல்வது எனக்கு சரியாகப் பட்டது, எனவே அந்த முடிவுக்கு நான் வருத்தப்படவில்லை" எனத் தெரிவித்தார்.[9]

கிளார்க் 15 மே 2012 அன்று வணிக உரிமையாளரும் வடிவழகியுமான கைலி போல்டியை மணந்தார் .[10][11] இந்தத் தம்பதியருக்கு ஒரு மகள் உள்ளார்.[12]

இவர் முன்னாள் ஆஸ்திரேலிய தேர்வுத் துடுப்பாட்டத் தொடக்க ஆட்டக்காரர் பில் ஹியூஸுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார், மேலும் நவம்பர் 2014 இல் சிட்னி துடுப்பாட்ட அரங்கத்தில் நடந்த ஷெஃபீல்ட் ஷீல்ட் போட்டியின் போது 25 வயதான ஹியூசின் கழுத்தில் பந்து தாக்கிதால் அவர் இறந்தார். அந்த நிகழ்வினால் இவர் சற்று கலக்கம் அடைந்தார். ஹியூஸின் இறுதிச் சடங்கில் கிளார்க் உணர்ச்சிபூர்வமான உரை நிகழ்த்தினார்.[13] பின்னர் ஹியூசின் ஆடையான 64 எனும் எண்ணை யாரும் பயன்படுத்த வேண்டாம் எனத் தெரிவித்தார்.

2016 ஆம் ஆண்டில் கிளார்க் மை ஸ்டோரி என்ற சுயசரிதையினை வெளியிட்டார்.[14]


சான்றுகள்

தொகு
  1. "Martin Crowe: Michael Clarke has 'growing up to do'". www.newshub.co.nz. பார்க்கப்பட்ட நாள் 2016-03-03.
  2. "Smith, Hazlewood book semi-final berth". ESPNcricinfo (ESPN (Sports Media)). 28 March 2015. http://www.espncricinfo.com/australia/content/story/856431.html. பார்த்த நாள்: 29 March 2015. 
  3. "Michael Clarke Quits Twenty20 | Michael Clarke Quits T20 Cricket". Smh.com.au. பார்க்கப்பட்ட நாள் 2012-02-21.
  4. Clarke announces his retirement Clarke announces his retirement
  5. It started with a 6am text...
  6. Roebuck 2008.
  7. Guess What?! Episode 5. YouTube.com (2 March 2016). Retrieved on 27 May 2018.
  8. Nicholls, Sean & Mahar, Jessica (11 March 2010) "Clarke and Bingle over, says friend" Sydney Morning Herald Accessed 12 March 2010
  9. "Michael Clarke – Stronger for the Storm". GQ Australia. 25 November 2010. பார்க்கப்பட்ட நாள் 9 February 2013.
  10. "Cricketer Michael Clarke's girl, Kyly Boldy, makes the cut for beautiful people". 1 April 2012. http://www.heraldsun.com.au/entertainment/cricketer-michael-clarkes-girl-kyly-boldy-makes-the-cut-for-beautiful-people/story-e6frf96o-1226315430292. பார்த்த நாள்: 9 February 2013. 
  11. "Kyly Clarke: Michael Clarke's wife Kyly". Dailytelegraph.com.au. 15 August 2012. பார்க்கப்பட்ட நாள் 29 November 2012.
  12. "Kelsey Lee: Michael Clarke reveals baby daughter's name". 20 November 2015. http://www.smh.com.au/lifestyle/celebrity/kelsey-lee-michael-clarke-reveals-baby-daughters-name-20151119-gl3mfx.html. பார்த்த நாள்: 25 November 2017. 
  13. "Clarke pays tribute to Phillip Hughes". Cricinfo.
  14. Thompson, Allan (10 November 2016). "My Story, by Michael Clarke, Pan Macmillan, RRP: $44.99". The Weekly Times. https://www.weeklytimesnow.com.au/country-living/bookshelf/my-story-by-michael-clarke-pan-macmillan-rrp-4499/news-story/2a7ed7d1bf007d112cb2bf2f29d6d863?nk=2a0b2680f80d56fb0cfda1e94cf13625-1568723578. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கல்_கிளார்க்&oldid=3986810" இலிருந்து மீள்விக்கப்பட்டது