பிரிசுபேன் துடுப்பாட்ட அரங்கம்

பிரிசுபேன் துடுப்பாட்ட அரங்கம் (Brisbane Cricket Ground), பரவலாக தி காபா,[1][2] ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத் தலைநகரான பிரிசுபேனின் முதன்மை விளையாட்டரங்கமாகும். இது அமைந்துள்ள ஊல்லூன்காபா புறநகர்பகுதியின் பெயரால் காபா என அழைக்கப்படுகின்றது.

தி காபா
பிரிசுபேன் துடுப்பாட்ட அரங்கம்
120px
Australia vs South Africa.jpg
அரங்கத் தகவல்
அமைவிடம்ஊல்லூன்காபா, குயின்ஸ்லாந்து
ஆள்கூறுகள்27°29′9″S 153°2′17″E / 27.48583°S 153.03806°E / -27.48583; 153.03806ஆள்கூறுகள்: 27°29′9″S 153°2′17″E / 27.48583°S 153.03806°E / -27.48583; 153.03806
உருவாக்கம்1895
இருக்கைகள்42,000
உரிமையாளர்குயின்சுலாந்து அரசு
இயக்குநர்இசுடேடியம்சு குயின்சுலாந்து
குத்தகையாளர்குயின்சுலாந்து துடுப்பாட்ட அணி, பிரிசுபேன் இலயன்சு, பிரிசுபேன் ஹீட்
முடிவுகளின் பெயர்கள்
இசுடான்லி தெரு முனை
வல்ச்சர் தெரு முனை
பன்னாட்டுத் தகவல்
முதல் தேர்வு27 நவம்பர் 1931:
 ஆத்திரேலியா v  தென்னாப்பிரிக்கா
கடைசித் தேர்வு17-21 திசம்பர் 2014:
 ஆத்திரேலியா v  இந்தியா
முதல் ஒநாப23 திசம்பர் 1979:
 இங்கிலாந்து v  மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒநாப17 சனவரி 2014:
 ஆத்திரேலியா v  இங்கிலாந்து
அணித் தகவல்
குயின்சுலாந்து துடுப்பாட்ட அணி (1896–நடப்பில்)
பிரிசுபேன் பியர்சு (ஆஸ்திரேலியக் கால்பந்து கூட்டிணைவு) (1991, 1993–1996)
பிரிசுபேன் இலயன்சு (ஆஸ்திரேலியக் கால்பந்து கூட்டிணைவு) (1997–நடப்பில்)
கோல்டுகோசுட்டு சன்சு (ஆஸ்திரேலியக் கால்பந்து கூட்டிணைவு) (2011)
பிரிசுபேன் ஹீட்(பிபிஎல்) (2011–நடப்பில்)
As of 5 மே 2010
Source: கிரிக்கெட்ஆர்க்கைவ்

1895இல் துடுப்பாட்டம் விளையாட ஏதுவாக இந்த அரங்கம் ஒதுக்கப்பட்டது; பாராளுமன்ற அணிக்கும் இதழாளர் அணிக்கும் இடையே முதல் துடுப்பாட்டம் திசம்பர் 19, 1896இல் நடைபெற்றது. இதற்கு முன்னதாக துடுப்பாட்டங்கள் 'கிரீன் ஹில்சில்' (தற்போது நார்தெர்ன் பஸ்வே அமைந்துள்ளது) நடைபெற்று வந்தன.[3] since at least the early 1860s.[4]

காபாவில் முதல்நிலை துடுப்பாட்டத்தைத் தவிர 1931 வரை கண்காட்சி மைதானமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. முதல் தேர்வுத் துடுப்பாட்டம் ஆஸ்திரேலியாவிற்கும் தென்னாபிரிக்காவிற்கும் இடையே 1931ஆம் ஆண்டு நவம்பர் 27 முதல் திசம்பர் 3 வரை நடைபெற்றது.

கடந்த ஆண்டுகளில், காபா அரங்கம் தட களப் போட்டிகள், ஆஸ்திரேலியக் காற்பந்தாட்டம், அடிபந்தாட்டம், கச்சேரிகள், துடுப்பாட்டப் போட்டிகள், மிதிவண்டியோட்டம், இரக்பி கூட்டிணைவு, இரக்பி யூனியன், சங்கக் கால்பந்து மற்றும் மட்டக்குதிரை பந்தயங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

1993க்கும் 2005க்கும் இடையே காபா அரங்கம் A$128,000,000 செலவில் ஆறு முறை மீளமைக்கப்பட்டுள்ளது. ஆடுகளத்தின் அளவைகள்: கிழக்கு-மேற்காக 170.6 மீட்டர்கள்; வடக்கு-தெற்காக 149.9 மீட்டர்கள். இதனால் உயர்நிலை ஆத்திரேலியக் காற்பந்தாட்டங்களை இங்கு நடத்த இயலும். 42,000 பார்வையாளர்கள் அமரக்கூடிய வசதி கொண்டுள்ளது.


2006-07 ஆசசுத் தொடரின் தேர்வுப் போட்டியின் இரண்டாம் நாளன்று காபா அரங்கம்

மேற்சான்றுகள்தொகு

வெளி இணைப்புகள்தொகு