சிவ்நாராயின் சந்தர்பால்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

சிவ்நாராயின் சந்தர்பால் (Shivnarine Chanderpaul, பிறப்பு: ஆகத்து 16, 1974) கயானா நாட்டைச் சேர்ந்த ஒரு துடுப்பாட்ட வீரர். மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணியின் முன்னணி துடுப்பாளர்களுள் ஒருவரான இவர் இடதுகை துடுப்பாட்டக்காரராவார். பகுதிநேரமாக பந்துவீச்சில் பங்கேற்கும் இவரின் பந்துவீச்சு வலதுகை சுழல் திருப்பம் ஆகும். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. அனைத்துக் காலத்திற்குமான சிறந்த மட்டையாளர்களுள் ஒருவராக அறியப்படுகிறார்.[1] இந்தோ கரீபியனான இவர் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக 100 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். சச்சின் டெண்டுல்கர் மறும் சனத் ஜயசூரிய ஆகியோருக்கு அடுத்தபடியாக இருபதாண்டு காலம் துடுப்பாட்டம் விளையாடிவர்களில் மூன்றாவதாக கருதப்படுகிறார்.

சிவ்நாராயின் சந்தர்பால்
தனிப்பட்ட தகவல்கள்
பட்டப்பெயர்சிவ்
மட்டையாட்ட நடைஇடதுகை
பந்துவீச்சு நடைவலதுகை கழல் திருப்பம்
பங்குதுடுப்பாட்டக்காரர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம்மார்ச்சு 17 1994 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வுதிசம்பர் 5 2010 எ. இலங்கை
ஒநாப அறிமுகம்அக்டோபர் 17 1994 எ. இந்தியா
கடைசி ஒநாபபிப்ரவரி 6 2011 எ. இலங்கை
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 161 272 49 11716 203* 52.53 268 264 379
ஓட்டங்கள் 11,776 8,778 19,101 12,162
மட்டையாட்ட சராசரி 52.53 41.60 54.26 41.79
100கள்/50கள் 30/66 11/59 55/98 12/88
அதியுயர் ஓட்டம் 203* 150 303* 150
வீசிய பந்துகள் 1,740 740 4,634 1,681
வீழ்த்தல்கள் 9 14 56 56
பந்துவீச்சு சராசரி 105.62 45.42 43.80 24.78
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 1/2 3/18 4/48 4/22
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
50/– 73/– 141/– 109/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சனவரி 6 2015

இவர் 14 தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் 16 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளுக்கு மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்குத் தலைவராக இருந்துள்ளார்.[2] இடதுகை மட்டையாளரான இவர் நண்டு போல வித்தியாசமான முறையில் நின்று விளையாடியதன் மூலம் பரவலாக அறியப்படுகிறார். சர்வதேச போட்டிகளில் 20,000 ஓட்டங்களுக்கு மேல் எடுத்துள்ளார். 2008 ஆம் ஆண்டின் சிறந்த வீரர்களுள் ஒருவராக இவரை விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு அறிவித்தது.

தனது 19 ஆவது வயது முதல் சர்வதேச துடுப்பாட்டப்போட்டிகளில் விளையாடினார். ஆனால் மூன்று ஆண்டுகாலமாக நூறு அடிக்காத காரணத்தினால் இவர் விமர்சனத்திற்கு உள்ளானார். துவக்கத்தில் காயங்களினால் அவதிப்பட்டார். 2000 ஆம் ஆண்டில் இவர் காலிலுள்ள எலும்பின் ஒரு பகுதியை எடுத்ததினால் ஏதிலாச் சோர்வுடையராக இருந்தார். அதன்பின் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 11,000 ஓட்டங்களைக் குவித்தார். இதன்மூலம் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களின் தரவரிசையில் 8 ஆவது இடத்தில் உள்ளார்.[3]

நிலையான ஆட்டத் திறனை வெளிப்படுத்தாததால் 2015 ஆம் ஆண்டில் விளையாடும் அணியில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை. அதன்பின் 2016 ஆம் ஆண்டில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.[4][5]

சர்வதேச போட்டிகள்

தொகு

1993 ஆம் ஆண்டில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடும் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணியில் இவருக்கு இடம் கிடைத்தது. இந்தத் தொடரில் சிறப்பான திறனை வெளிப்படுத்தி அதிக ஓட்டங்கள் எடுத்தவர்கள் பட்டியலில் இடம்பிடித்தார். இந்தத் தொடரில் இவர் 372 ஓட்டங்கள் எடுத்தார். இவரின் துடுப்பாட்ட சராசரி 124.00 ஆகும். நாட்டிங்ஹாமில் நடைபெற்ற முதல் துடுப்பாட்டப் போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 203 ஓட்டங்கள் எடுத்தார்.[6] 1993-1994 ஆம் ஆண்டில் நடைபெற்ற ரெட் ஸ்ட்ரிப் கோப்பைக்கான போட்டியில் அதிகபட்ச மட்டையாளர் சராசரிக்கும் சற்றுக் குறைவான சராசரியைப் பெற்றார்.[7] இதன்மூலம் அடுத்த தொடர்களிலும் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். இவர் இடதுகை சுழற்பது வீச்சாளராகவும் செயல்பட்டார்.[8] இங்கிலாந்து அணிக்கு எதிராக 16 ஓவர்கள் வீசினார். ஆனால் இலக்குகளைப் பெற இயலவில்லை. மேலும் அந்தப் போட்டியில் 62 ஓட்டங்கள் எடுத்தார்.[9] நான்கு போட்டிகளில் விளையாடிய இவர் மொத்தம் 288 ஓட்டங்களைப் பெற்றார். இவரின் சராசரி 57.60 ஆகும்.[10]

இதற்கு அடுத்த இரண்டு ஆண்டுகள் சில போட்டிகளில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டிகள் உள்ளிட்ட சில போட்டிகளில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

1993 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது . 19 வயதிற்கு உட்பட்டோருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியில் இவர் இடம் பெற்றார். அந்தத் தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தினார். மொத்தம் 372 ஓட்டங்களை 124. எனும் சராசரியோடு எடுத்தார். அந்தத் தொடரில் டிரெண்ட் பிரிட்ஜில் நடைபெற்ற போட்டியில் இவர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 203* ஓட்டங்கள் எடுத்தார்.[11] 1993-94 ஆண்டுகளில் நடைபெற்ற ரெட் ஸ்டிரிப் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இவர் பந்து வீச்சு மற்றும் மட்டையாட்டம் ஆகிய இரண்டிலும் சிறப்பான திறனை வெளிப்படுத்தினார்.[12] முதல் ஆட்டப் பகுதியில் 16 ஓவர்கள் வீசினார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை.பின் மட்டையாட்டத்தில் 62 ஓட்டத்தினை எடுத்தார்.[13] அரிமுகத் தொடரில் நான்கு போட்டிகள் கொண்ட தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் இவர் விளையாடினார். அதில் 288 ஓட்டங்களும் 57.60 எனும் சராசரியோடு பெற்றார்.[14]

1994 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது . அக்டோபர் 17 இல் பரிதாபாத்தில் நடைபெற்ற இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் ஒருநாள் பன்னட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானர். அந்தப் போட்டியில் இவர் மட்டையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

தனது முதல் 18 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 1,232 ஓட்டங்களை 49.28 எனும் சராசரியோடு எடுத்தார். அதில் பதின்மூன்று ஐமது ஓட்டங்கள் அடங்கும்.அதில் அதிகபட்சமாக 82 ஓட்டங்களை எடுத்தார்.[15] இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 19 ஆவது தேர்வுப் போட்டியில் கலந்து கொண்டார். அதில் 137 ஓட்டங்கள் எடுத்து தனது முதல் நூறு ஓட்டங்களைப் பதிவு செய்தார். அதற்கு அடுத்த மாதம் அதே அணிக்கு எதிராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டார். அந்தப் போட்டியில் 109 ஓட்டங்கள் எடுத்து தனது முதல் நூறு ஓட்டங்களைப் பதிவு செய்தார்.[15]

1998 ஆம் ஆண்டில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத்திலும் 1999 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் இவர் நூறு ஓட்டங்களை எடுத்தார். அதற்கு அடுத்த போட்டியில் சந்திரபால் மற்றும் கார்ல் ஹூப்பர் ஆகியோர் இணாஇந்து 226 ஓட்டங்கள் எடுத்தனர். அதில் சந்திரபால் 150 ஓட்டங்களையும் ஹூப்பர் 108 ஓட்டங்களையும் எடுத்தனர். தற்போதுவரை ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் அடித்த இணை எனும் சாதனையினைத் தக்க வைத்துள்ளது.[16] மேலும் அந்த ஒட்டங்களே சந்திரபாலின் அதிகபட்ச ஒருநாள் ஓட்டமாகும்.[17] இதன் பிறகான போட்டிகளில் சந்திரபால்போதுமான திறன்களை வெளிப்படுத்தத் தவறினார். ஐம்பது ஓட்டங்களை நூறு ஓட்டங்களாக எடுக்க தவறினார்.[18] 1999 ஆம் ஆண்டில் நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பும் போது திருடன் என நினைத்து ஒரு காவல திகாரியினை சுட்டார்.[19] 2000 ஆம் ஆண்டில் நடைபெற்ற சிகிச்சைக்குப் பின் சிறப்பாக விளையாடத் துவங்கினார்.[20]

சந்திரபாலின் சர்வதேச போட்டி முடிவுகள்[21]
  போட்டிகள் வெற்றி தோல்வி Drawn சமன் முடிவில்லை
தேர்வு[22] 164 39 77 48 0
ஒபது[23] 268 110 144 1 13
ப இ20[24] 22 9 11 2

சான்றுகள்

தொகு
  1. "Chanderpaul retires – 'One of the greatest batsmen of our time'". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 11 March 2017.
  2. "Numbers Game". Cricinfo.
  3. "Records – Test matches – Batting records – Most runs in career". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 28 December 2017.
  4. Farrell, Melinda (23 January 2016). "Chanderpaul retires from all cricket". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 January 2016.
  5. "Reliable yet misunderstood". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 24 January 2016.
  6. "Under-19 Test Batting and Fielding for West Indies Under-19s: West Indies Under-19s in England 1993". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 17 September 2013.
  7. "Batting and Fielding in Red Stripe Cup 1993/94 (Ordered by Average)". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 17 September 2013.
  8. "Second Test: West Indies v England, 1993–94". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 17 September 2013.
  9. "2nd Test: West Indies v England at Georgetown, Mar 17–22, 1994". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 17 September 2013.
  10. "Test Batting and Fielding for West Indies: England in West Indies 1993/94". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 17 September 2013.
  11. "Under-19 Test Batting and Fielding for West Indies Under-19s: West Indies Under-19s in England 1993". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 17 September 2013.
  12. "Second Test: West Indies v England, 1993–94". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 17 September 2013.
  13. "2nd Test: West Indies v England at Georgetown, Mar 17–22, 1994". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 17 September 2013.
  14. "Test Batting and Fielding for West Indies: England in West Indies 1993/94". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 17 September 2013.
  15. 15.0 15.1 "Players / West Indies / Shivnarine Chanderpaul: Timeline". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 17 September 2013.
  16. "Records / West Indies / One-Day Internationals / Highest partnerships by runs". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 September 2013.
  17. "Player profile:Shivnarine Chanderpaul". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 September 2013.
  18. Steen, Rob (27 April 2012). "The epitome of selfless striving". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 September 2013.
  19. Soni, Paresh (21 March 2005). "Quiet man Chanderpaul given new voice". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 18 September 2013.
  20. Baksh, Vaneisa (20 November 2006). "Turn again Tiger". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 September 2013.
  21. "Statistics / Statsguru / S Chanderpaul /One-Day Internationals". Cricinfo. Archived from the original on 26 செப்டெம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 25 ஏப்பிரல் 2013.
  22. "List of Test victories". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 April 2012.
  23. "List of ODI victories". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 April 2012.
  24. "List of T20I victories". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 April 2012.


வெளியிணைப்புகள்

தொகு

Extensive profile on The Cricket Monthly