யுவராஜ் சிங்
யுவராஜ் சிங் (Yuvraj Singh பிறப்பு: 12 திசம்பர் 1981) ஒரு முன்னாள் இந்திய துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் இவர் இந்திய அ அணி மற்றும் இருபது20 ஆகிய உள்ளூர் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். நடுத்தர வரிசையில் இடது கை மட்டையாளர் மற்றும் மித இடது கை வழமைச் சுழல் வீசும் ஒரு சகலத் துறையராக இருந்தார். யுவராஜ், முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளரும் பஞ்சாபி நடிகருமான யோகிராஜ் சிங்கின் மகன் ஆவார். [1] அதிரடியாகத் மட்டையாடுதல் மற்றும் களத் தடுப்பு செய்தல் போன்றவற்றின் மூலமாக இவர் பரவலாக அறியப்பட்டார்.
2012 ஆம் ஆண்டில், யுவராஜுக்கு இந்திய அரசால் இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த விளையாட்டு விருதான அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டில், இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடியுரிமை விருதான பத்மசிறீ இவருக்கு வழங்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டில் ஐபிஎல் ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இவரை ₹ 14 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. 2015 ஆண்டிலும், தில்லி டேர்டெவில்ஸ் அணி 16 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
10 ஜூன் 2019 அன்று, யுவராஜ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். [2] [3] அவர் கடைசியாக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஜூன் 2017 இல் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார். [4]
ஆரம்பகால வாழ்க்கை
தொகுசிங் ஒரு சீக்கிய குடும்பத்தில் பிறந்தார்.இவரின் தந்தையான யோகிராஜ் சிங் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவரின் தாய் ஷப்னம் சிங். [5] டென்னிஸ் மற்றும் ரோலர் ஸ்கேட்டிங் ஆகியன இவரது குழந்தை பருவத்தில் மிகவும் பிடித்த விளையாட்டுகளாக இருந்தன. இந்த இரண்டிலும் சிறப்பாக விளையாடும் திறனைக் கொண்டிருந்தார். இவர் 14 வயதுக்குட்பட்ட தேசிய ஸ்கேட்டிங் வாகையாளர் பட்டத்தினை வென்றிருந்தார். இவரது தந்தை பதக்கத்தை தூக்கி எறிந்து, ஸ்கேட்டிங்கை மறந்து கிரிக்கெட்டில் கவனம் செலுத்தும்படி கூறினார். [6] அவர் ஒவ்வொரு நாளும் யுவராஜை பயிற்சிக்கு அழைத்துச் செல்வார்.
யுவராஜ் சண்டிகரில் உள்ள டி.ஏ.வி பொதுப் பள்ளியில் படித்தார். சண்டிகரின் பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் டி.ஏ.வி கல்லூரியில் வணிகப் பிரிவில் பட்டப்படிப்பை முடித்தார். [7] மெஹந்தி சக்னா டி மற்றும் புட் சர்தாரா ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக இரண்டு சிறிய வேடங்களிலும் நடித்தார்.
இந்தியன் பிரீமியர் லீக்
தொகுமுதல் இரண்டு இந்தியன் பிரீமியர் லீக் பருவங்களில் கிங்ஸ் லெவன் பஞ்சாபின் முக்கிய வீரராகவும் மற்றும் தலைவராகவும் யுவராஜ் இருந்தார். 2010 ஆம் ஆண்டின் மூன்றாவது பருவத்தில் குமார் சங்கக்காராவுக்கு தலைவர் பதவி வழங்கப்பட்டது. அரையிறுதிப் போட்டியில் இந்த அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. மே 1, 2009 அன்று, யுவராஜ் தனது முதல் ஹாட்ரிக் டி 20 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக டர்பனில் நடைபெற்ற போட்டியில் எடுத்தார்.
விருது
தொகு2012 ஆம் ஆண்டில், யுவராஜுக்கு இந்திய அரசால் இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த விளையாட்டு விருதான அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டில், இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடியுரிமை விருதான பத்மசிறீ இவருக்கு வழங்கப்பட்டது
மேற்கோள்கள்
தொகு- ↑ "Yuvraj Singh in Sportskeeda". Sportskeeda. பார்க்கப்பட்ட நாள் 12 February 2019.
- ↑ "Yuvraj Singh announces retirement from all forms of cricket". Cricbuzz. பார்க்கப்பட்ட நாள் 10 June 2019.
- ↑ "Yuvraj Singh, hero of India's 2011 World Cup triumph, retires from international cricket". India Today. பார்க்கப்பட்ட நாள் 10 June 2019.
- ↑ "'I have decided to move on' yuvraj has been retired from international cricket on 10th June 2019 probably a sad day for his fans- Yuvraj Singh announces international, IPL retirement". ESPN Cricinfo. 10 June 2019. பார்க்கப்பட்ட நாள் 10 June 2019.
- ↑ "My son has come back as a winner, says Yuvraj Singh's father". NDTV.com. 6 February 2012. Archived from the original on 11 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 9 April 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Yuvraj Singh: Inside out". The Times of India. 10 April 2011. Archived from the original on 6 நவம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 10 April 2011.
- ↑ "The Tribune, Chandigarh, India - Chandigarh Stories". www.tribuneindia.com. பார்க்கப்பட்ட நாள் 16 May 2019.