மதீச பத்திரன
மதீச பத்திரன (Matheesha Pathirana பிறப்பு: டிசம்பர் 18, 2002) ஓர் இலங்கைத் துடுப்பாட்டக்காரர்.[1] லசித் மலிங்க போன்று இவரது பந்துவீச்சு இருப்பதனால் இவர் குழந்தை மலிங்க என்று குறிப்பிடப்படுகிறார். [2] [3] ஆகத்து 2021 இல், இவர் 2021 SLC இன்விடேஷனல் இ20 தொடரில் SLC கிரேஸ் அணியில் இடம் பெற்றார். [4] ஆகத்து 22 , 2021 இல் இருபது 20 போட்டியில் அறிமுகமானார்.[5] பின்னர் 2020 ஆம் ஆண்டில் 19 வயதுக்குட்பட்ட துடுப்பாட்ட உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணியில் இடம் பெற்றார். [6] சனவரி 2022 இல்,மேற்கிந்தியத் தீவுகளில் 2022 ஐசிசி 19 வயதுக்குட்பட்ட துடுப்பாட்ட உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணியில் இடம் பெற்றார். [7] 2023 இந்தியன் பிரீமியர் லீக் கிண்ணம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராக இருந்தார். அந்தத் தொடரில் 19 இலக்குகளைக் கைப்பற்றினார். ஐபிஎல் கோப்பையை வென்ற இளம் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை பெற்றார்.
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 18 திசம்பர் 2002 கண்டி, இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலக்கை விரைவு வீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்து வீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||
ஒரே இ20ப (தொப்பி 96) | ஆகத்து 27 2022 எ. ஆப்கானித்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||
2022– | சென்னை சூப்பர் கிங்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||
2022 | Nondescripts | |||||||||||||||||||||||||||||||||||||||
2022– | பெங்கால் டைகர்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||
2023– | டெசர்ட் வைப்பர்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: Cricinfo, 27 August 2022 |
கிளைத் துடுப்பாட்டப் போட்டிகள்
தொகுஏப்ரல் 2022 இல், 2022 இந்தியன் பிரீமியர் லீக்கில் ஆடம் மில்னேவுக்கு மாற்று வீரராக, சென்னை சூப்பர் கிங்ஸால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். [8] குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமாகி [9] [10] முதல் பந்திலேயே, சுப்மன் கில்லின் இலக்கைக் கைப்பற்றிய முதல் இலங்கை மற்றும் சர்வதேச அளவில் ஒன்பதாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். [11] [12] [13] சூலை 2022 இல், லங்கா பிரீமியர் லீக்கின் மூன்றாவது பதிப்பிற்காக கண்டி பால்கன்சுவால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். [14]
சர்வதேச போட்டிகள்
தொகுமே 2022 இல், ஆத்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கான இலங்கையின் பன்னாட்டு இருபது20 அணியில் இடம்பிடித்தார். [15] இருப்பினும், எந்தப் போட்டியிலும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை, பின்னர் காயம் காரணமாக அந்தத் தொடரில் இருந்து விலகினார். [16] [17] ஆகத்து 2022 இல், 2022 ஆசியக் கின்னத்திற்கான இலங்கையின் பன்னாட்டு இருபது20 அணியில் இடம்பெற்றார். [18] ஆகத்து 27, 2022 அன்று ஆப்கானித்தானுக்கு எதிராக அறிமுகமானார். [19]
மார்ச் 2023 இல், நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்கான ஒருநாள் மற்றும் பன்னாட்டு இருபது20 அணியில் இடம்பெற்றார். [20]
சான்றுகள்
தொகு- ↑ "Matheesha Pathirana". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 22 August 2021.
- ↑ "WATCH:'Baby Malinga' Matheesha Pathirana breaks camera lens with explosive bouncer during CSK net session". TimesNow (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 20 May 2022.
- ↑ "'Big shoes to fill': Next Malinga lights up IPL - and teenage star could take on Aussies next month". Fox Sports (in ஆங்கிலம்). 16 May 2022. பார்க்கப்பட்ட நாள் 20 May 2022.
- ↑ "Sri Lanka Cricket announce Invitational T20 squads and schedule". The Papare. 4 August 2021. பார்க்கப்பட்ட நாள் 9 August 2021.
- ↑ "11th Match, Pallekele, Aug 22 2021, SLC Invitational T20 League". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 22 August 2021.
- ↑ "Sri Lanka squad for the ICC U19 World Cup 2020 announced". The Papare. 6 January 2020. பார்க்கப்பட்ட நாள் 6 January 2020.
- ↑ "Sri Lanka U19 Team to the World Cup". Cricket Sri Lanka. 2 January 2022. பார்க்கப்பட்ட நாள் 4 January 2022.
- ↑ "CSK sign up Matheesha Pathirana as replacement for Adam Milne". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 April 2022.
- ↑ "'Next Malinga' in IPL 2022: Know About Matheesha Pathirana Who Dismissed Gill, Pandya on IPL Debut - WATCH". www.news18.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 20 May 2022.
- ↑ "Shami and Saha lead the way as Titans ensure top-two finish". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 2022-06-12.
- ↑ "MS Dhoni: Matheesha Pathirana 'is an excellent death bowler'". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 2022-06-12.
- ↑ Gautam, Sonanchal (2022-05-15). "CSK vs GT: Watch – Matheesha Pathirana Bags His Maiden IPL Wicket On 1st Ball By Dismissing Shubman Gill" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-12.
- ↑ "'We have got a junior Malinga': CSK debutant breaks the internet after picking maiden IPL wicket with slingy action". Hindustan Times (in ஆங்கிலம்). 2022-05-15. பார்க்கப்பட்ட நாள் 2022-06-12.
- ↑ "LPL 2022 draft: Kandy Falcons sign Hasaranga; Rajapaksa to turn out for Dambulla Giants". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 July 2022.
- ↑ "Sri Lanka call up Matheesha Pathirana, Nuwanidu Fernando for T20I series against Australia". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 June 2022.
- ↑ M, Suryesh. "Sri Lanka's Kasun Rajitha and Matheesha Pathirana ruled out of 3rd T20I vs Australia; replacements named". www.sportskeeda.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-12.
- ↑ "Injury rules Kasun Rajitha and Matheesha Pathirana out of final T20I vs Australia". Island Cricket (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2022-06-11. பார்க்கப்பட்ட நாள் 2022-06-12.
- ↑ "Sri Lanka squad for Asia Cup 2022". Sri Lanka Cricket. பார்க்கப்பட்ட நாள் 20 August 2022.
- ↑ "Group B (N), Dubai (DSC), August 27, 2022, Asia Cup". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 August 2022.
- ↑ "Sri Lanka name squad for limited-overs leg of New Zealand tour". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 22 March 2023.