சுப்மன் கில்

சுப்மன் கில் (Shubman Gill பிறப்பு:செப்டம்பர் 8, 1999) இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார்.[1] வலதுகை மட்டையாளரான இவர் பஞ்சாப் அணி சார்பாக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார். 2017- 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பைத் தொடரில் வங்காள அணிக்கு எதிராக அறிமுகமானார். அறிமுகப் போட்டியில் அரைநூறு ஓட்டங்களும் இரண்டாவது போட்டியில் 29 ஓட்டங்களையும் எடுத்தார்[2][3]. 2019இல் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இவர் சர்வதேச ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார்.

சுப்மன் கில்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சுப்மன் கில்
பிறப்பு8 செப்டம்பர் 1999 (1999-09-08) (அகவை 22)
பசில்கா, பஞ்சாப், இந்தியா
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை
பங்குமட்டையாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 297)26 திசம்பர் 2020 எ ஆத்திரேலியா
கடைசித் தேர்வு7 சனவரி 2021 எ ஆத்திரேலியா
ஒரே ஒநாப (தொப்பி 227)31 சனவரி 2019 எ நியூசிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2017 – தர்போதுவரைபஞ்சாப்
2018– தற்போதுவரைகொல்கத்தா நைட் ரைடர்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒபது முதது பஅ
ஆட்டங்கள் 2 3 25 58
ஓட்டங்கள் 161 49 2,431 2,313
மட்டையாட்ட சராசரி 53.66 16.33 67.52 45.35
100கள்/50கள் 0/1 0/0 7/12 6/11
அதியுயர் ஓட்டம் 50 33 268 143
வீசிய பந்துகள் 6 6
வீழ்த்தல்கள் 0 0
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/– 0/– 16/– 26/–
மூலம்: கிரிக் இன்ஃபோ, 11 சனவரி 2021

ஆரம்பகால வாழ்க்கைதொகு

கில் செப்டம்பர் 8, 1999 இல் பசில்கா, பஞ்சாபில் பிறந்தார். இவரின் தந்தை லக்விந்தர் சிங் துடுப்பாட்ட வீரராக வேண்டும் என விரும்பினார். ஆனால் அது நிறைவேறாமல் போகவே தனது மகனை துடுப்பாட்ட வீரராக்க நினைத்தார். பின் பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கிற்கு அருகில் வாடைக்கு குடிபெயர்ந்தனர்.[4]

சர்வதேச போட்டிகள்தொகு

பெப்ரவரி, 2017இல் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அறிமுகமானார்.[5][6][7]

2019இல் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இவர் சர்வதேச ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார்.[8]

சான்றுகள்தொகு

  1. "Shubman Gill". ESPN Cricinfo. பார்த்த நாள் 25 February 2017.
  2. "Ranji Trophy 2017: Bengal inch closer to quarterfinal berth with innings victory over Punjab". PTI. https://indianexpress.com/article/sports/cricket/ranji-trophy-2017-bengal-inch-closer-to-quarterfinal-berth-with-innings-victory-over-punjab-4945137/. 
  3. "Ranji Trophy 2017: Punjab in command with Shubman Gill, Anmolpreet Singh tons". PTI. https://indianexpress.com/article/sports/cricket/ranji-trophy-2017-punjab-in-command-with-shubman-gill-anmolpreet-singh-tons-4954353/. 
  4. "'I sat inside the washroom when my bidding was on'". பார்த்த நாள் 28 January 2018.
  5. "Shubman Gill stars as India U-19 beat England by 7 wickets" (in en). Hindustan Times. 3 February 2017. http://www.hindustantimes.com/cricket/shubman-gill-stars-as-india-u-19-beat-england-by-7-wickets-take-2-1-series-lead/story-8skWEp6qIRDM2tRmIQ0cpN.html. 
  6. "Shubman Gill, Prithvi Shaw slam tons to help India hammer England, clinch U-19 ODI series" (in en-US). Firstpost. 6 February 2017. http://www.firstpost.com/sports/shubman-gill-prithvi-shaw-slam-tons-to-help-india-hammer-england-clinch-u-19-odi-series-3269408.html. 
  7. "Shubman Gill was terrific, says U-19 coach Dravid - Times of India". The Times of India. http://timesofindia.indiatimes.com/sports/cricket/news/shubman-gill-was-terrific-says-u-19-coach-dravid/articleshow/57045134.cms. 
  8. "India vs New Zealand 4th ODI: Shubman Gill debuts, Khaleel Ahmed replaces Mohammed Shami" (en) (31 January 2019). பார்த்த நாள் 31 January 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுப்மன்_கில்&oldid=3089246" இருந்து மீள்விக்கப்பட்டது