லங்கா பிரிமியர் லீக்

லங்கா பிரிமியர் லீக் (Lanka Premier League, எல்.பி.எம், LPL, சிங்களம்: ලංකා ප්‍රිමියර් ලීග් என்பது இலங்கையில் ஆண்டுதோறும் விளையாடப்படும் தொழில்முறை இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடர் ஆகும். இத்தொடர் இலங்கை நகரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகளால் 2020 ஆம் ஆண்டு முதல் விளையாடப்பட்டு வருகின்றது.[1][2] இக்கூட்டமைப்பு இலங்கைத் துடுப்பாட்ட வாரியத்தால் 2018 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.[3] ஆகத்து 2020 இல் இத்தொடரின் இயக்குநராக ரவீன் விக்கிரமரத்தின நியமிக்கப்பட்டார்.[4]

லங்கா பிரிமியர் லீக்
Lanka Premier League (LPL)
நாடு(கள்)இலங்கை இலங்கை
நிர்வாகி(கள்)இலங்கை துடுப்பாட்ட வாரியம் (இ.து.வா)
வடிவம்இருபது20
முதல் பதிப்பு2020
போட்டித் தொடர் வடிவம்ரொபின்-சுழல், வெளியேற்றம்
மொத்த அணிகள்5
தொலைக்காட்சிஒலிபரப்பாளர்களின் பட்டியல்
2020 லங்கா பிரிமியர் லீக்
வலைத்தளம்lankapremierleague.com

வரலாறு

தொகு

பின்னணி

தொகு

முதல் பருவப் போட்டித் தொடர் முதலில் 2020 ஆகத்து 18 முதல் செப்டம்பர் 10 வரை நடைபெறவிருந்தது,[5][6][7] ஆனால் துடுப்பாட்ட வாரியத்தினுள் நிலவிய பல நிர்வாகச் சிக்கல்கள் காரணமாக இத்தொடர் பல முறை ஒத்திவைக்கப்பட்டது.[8][9][10] 2020 சூன் மாதத்தில், கோவிட்-19 பெருந்தொற்றின் மத்தியில், இத்தொடர் 2020 ஆகத்து 28 இல் தொடங்கும் என இலங்கைத் துடுப்பாட்ட வாரியம் அறிவித்தது.[11][12] 70 வெளிநாட்டு வீரர்கள் இத்தொடரில் விளையாடுவதில் ஆர்வம் காட்டினர்.[13] கோவிடு-19 தொற்றுக்கான கட்டுப்பாடுகள் காரணமாக பல முறை மாற்றியமைக்கப்பட்ட பின்னர், முதல் பருவம் 2020 நவம்பர் 26 அன்று தொடங்கியது.

அணிகள்

தொகு
அணி நகரம் முதல் ஆட்டம் உரிமையாளர் தலைவர் பயிற்சியாளர் முத்திரை வீரர்
கொழும்பு கிங்க்சு கொழும்பு, மேல் மாகாணம் 2020 முர்பாத் முஸ்தபா (பாசா குழு)   அஞ்செலோ மத்தியூஸ்   ஹெர்ச்சல் கிப்ஸ்   அஞ்செலோ மத்தியூஸ்
தம்புள்ளை வைக்கிங் தம்புள்ளை, மத்திய மாகாணம் 2020 சச்சின் ஜே. ஜோசி (வைக்கிங்கு வென்ச்சர்சு)   தசுன் சானக்க   உவைஸ் ஷா   தசுன் சானக்க
காலி கிளேடியேட்டர்சு காலி, தென் மாகாணம் 2020 நதீம் ஒமார் (ஒமார் அசோசியேட்சு)   சாகித் அஃபிரிடி   முயீன் கான்   லசித் மாலிங்க
யாழ்ப்பாணம் இசுடாலியன்சு யாழ்ப்பாணம், வட மாகாணம் 2020 பிரிந்தன் பகீரதன், இராகுல் சூத்   திசாரா பெரேரா   திலின கந்தம்பே   திசாரா பெரேரா
கண்டி டசுக்கர்சு கண்டி, மத்திய மாகாணம் 2020 சொகைல் கான் (சொகைல் கான் என்டர்நாசனல் எல்.எல்.பி)   குசல் பெரேரா   ஹசான் திலகரத்ன   குசல் பெரேரா

ஒலிபரப்பு

தொகு

சோனி பிக்சர்சு நெட்வர்க்சு, இசுக்கை இசுபோர்ட்சு, பாக்கித்தான் டெலிவிசன் கார்ப்பரேசன் ஆகிய நிறுவனங்கள் 2020 எல்.பி.எல் தொடரை ஒலி, ஒளிபரப்புவதற்கான உரிமங்களை வென்றன. இலங்கையில் உள்ளூர் ஒலிபரப்பு உரிமையை ஐ.ரி.என் நிறுவனம் வென்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. "SLC optimistic about inaugural Lanka Premier League despite concerns over border reopening". Zee News. பார்க்கப்பட்ட நாள் 27 July 2020.
  2. "Lanka Premier League 2020: Sri Lanka Cricket to confirm fixtures after decision on India series". The Sports Rush. பார்க்கப்பட்ட நாள் 27 July 2020.
  3. "Sri Lanka Cricket to launch Lankan Premier League 2018". ThePapare.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 25 March 2018.
  4. "Sri Lanka Cricket Vice President Ravin Wickramaratne officially appointed LPL Tournament Director". cricketage.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 10 August 2020.
  5. "Sri Lanka Cricket to launch Lankan Premier League 2018". ThePapare.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 25 March 2018.
  6. "SLC set to relaunch Sri Lanka Premier League in August 2018; Nidahas Trophy to act as launch pad- Firstcricket News, Firstpost". FirstCricket (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 19 May 2018.
  7. "Sunday Times - Cricket: Sri Lanka to launch LPL with five-year window in August–September". www.sundaytimes.lk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 19 May 2018.
  8. "SLC shambles lead to postponement of Lankan Premier League". ESPNCricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 11 July 2018.
  9. "Lankan Premier League (LPL) postponed". ThePapare.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 20 July 2018.
  10. "Lankan Premier League revival in the works - SLC secretary Mohan De Silva". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 April 2019.
  11. "Sri Lanka plan Lanka Premier League in August". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 22 June 2020.
  12. "Lanka Premier League to start on August 28". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 July 2020.
  13. "Lanka Premier League: Irfan Pathan in pool of 70 foreign players for draft". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 31 July 2020.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லங்கா_பிரிமியர்_லீக்&oldid=3712743" இலிருந்து மீள்விக்கப்பட்டது