நாராயணசாமி சீனிவாசன்

நா. சீனிவாசன் என்கிற நாராயணசாமி ஸ்ரீநிவாசன் (Narayanaswami Srinivasan, பிறப்பு: சனவரி,3 ,1945)[3] ஓர் இந்திய தொழிலதிபரும் தற்போதைய பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் (ஐசிசி) தலைவரும் ஆவார். தென்னிந்தியாவிலேயே மிகுதியான அளவில் சிமெண்ட் தயாரிக்கும் நிறுவனம் இந்தியா சிமெண்ட்ஸ். இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தை நிறுவியவர் இவரது தந்தையும் பிரபல தொழிலதிபருமான டி.எஸ்.நாராயணசாமி. சங்கர் சிமெண்ட், கோரமண்டல் சிமெண்ட், ராசி சிமெண்ட் என்ற வர்த்தகப் பெயர்களில் இந் நிறுவனத்தின் சிமெண்ட் விற்பனை ஆகிறது. இந்த இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராகப் பொறுப்பாற்றுகிறார். ஐசிசியின் தலைவராவப் பொறுப்பேற்பதற்கு முன்னர் பிசிசிஐ-ன் தலைவராகவும், தமிழ்நாடு துடுப்பாட்ட வாரியத்தின் தலைவராகவும் பொறுப்பிலிருந்தார்.

நா. சிறீனிவாசன்
பிறப்பு3 சனவரி 1945 (1945-01-03) (அகவை 79)
இருப்பிடம்சென்னை
தேசியம்இந்தியர்
கல்விஅறிவியல் இளங்கலை, முதுகலை பட்டயம்
படித்த கல்வி நிறுவனங்கள்சென்னைப் பல்கலைக்கழகம்,
இல்லினாய் தொழில்நுட்பக் கழகம்
பணிஇந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர்.
பட்டம்பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் தலைவர்
பதவிக்காலம்2011-மே 2013
முன்னிருந்தவர்சசாங்க் மனோகர்
பின்வந்தவர்நடப்பில்; சூன் 2013 முதல் ஜக்மோகன் டால்மியா இடைக்காலப் பொறுப்பு[1]
பெற்றோர்டி. எஸ். நாராயணசாமி
வாழ்க்கைத்
துணை
சித்ரா
பிள்ளைகள்அசுவின், ரூபா [2]

இளமையும் கல்வியும்

தொகு

சீனிவாசன் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் பிறந்தார்.[4] இவரது தந்தை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முதல் ஊழியர்களில் ஒருவரான டி.எஸ்.நாராயணசாமியின் ஆவார். சீனிவாசன் தனது பள்ளிப்படிப்பை மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் பயின்றார்.[5] சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை அறிவியல் பட்டமும், அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள இல்லினாய்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் வேதியியல் பொறியியலில் முதுகலை அறிவியல் பட்டமும் பெற்றுள்ளார்.[6]

வகித்த பதவிகள

தொகு
  • சென்னை மாநகர செரீப் 1989-1991
  • சிமெண்ட் உற்பத்தியாளர்கள் அமைப்பின் தலைவர் 1991-94
  • சிமெண்ட் மற்றும் கட்டுமானப் பொருள்களுக்கான தேசிய மன்ற நிர்வாக குழுவின் தலைவர்.1991-1993
  • இந்திய தொழில் வர்த்தகச் சம்மேளனத்தின் தலைவர்.
  • அசோசெம் நிர்வாகக் குழு உறுப்பினர்.
  • தமிழக அரசு தொழில் மேம்பாட்டு நிலைக்குழு உறுப்பினர்.
  • மத்திய நேரடி வரிகள் ஆலோசனைக் குழு உறுப்பினர்.
  • கோடைக்கானல் கோல்ப் சங்கத்தின் தலைவர்
  • தமிழ்நாடு துடுப்பாட்ட வாரியத்தின் தலைவர், துணைத்தலைவர் [7]

மேற்சான்றுகள்

தொகு
  1. "பொறுப்பிலிருந்து தற்காலிகமாக ஒதுங்குகிறார் ஸ்ரீநிவாசன்". பிபிசி செய்தித்தளம். 02 சூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 02 சூன் 2013. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. Pawar, Yogesh (2013). "Gurunath Meiyappan always had links with bookies of Chennai, Dubai, reveals N Srinivasan's son". zeenews.india.com. பார்க்கப்பட்ட நாள் 30 May 2013.
  3. http://www.indiacements.co.in/areports/izl.pdf[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Who is Srinivasan".
  5. "N. Srinivasan's controversial innings at BCCI". Livemint. 28 May 2013. பார்க்கப்பட்ட நாள் 3 March 2021.
  6. "Who is N Srinivasan?". NDTV.com. NDTV. பார்க்கப்பட்ட நாள் 7 May 2012.
  7. தினமணி தீபாவளி மலர்,1999,பக்கம் 36
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாராயணசாமி_சீனிவாசன்&oldid=3711853" இலிருந்து மீள்விக்கப்பட்டது