மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி (மமுகூ) (Secular Progressive Alliance) ஜனநாயக முற்போக்கு கூட்டணி (ஜமுகூ) (Democratic Pograssive Alliance) 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு தேர்தல் கூட்டணி ஆகும். [1]
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி | |
---|---|
சுருக்கக்குறி | மமுகூ |
தலைவர் | மு. க. ஸ்டாலின் ஆர். சிவா |
நிறுவனர் | மு. கருணாநிதி |
தொடக்கம் | ஏப்ரல் 2006 |
கொள்கை | •மதச்சார்பின்மை •முற்போக்குவாதம் •தமிழர் நலன் •மாநில சுயாட்சி •சமூக நீதி |
கூட்டணி | மத்தியில் கூட்டணி காங்கிரஸ் ( இந்தியா) |
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 40 / 40
|
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 12 / 18
|
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (மாநிலச் சட்டப் பேரவைகள்) | இந்திய மாநிலங்கள் |
இந்தியா அரசியல் |
கூட்டணி வரலாறு
தொகு- முன்னர் இக்கூட்டணி 2006 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையில் அமைக்கப்பட்ட போது ஜனநாயக முற்போக்குக் கூட்டணி 2006 முதல் 2009 வரையிலும் சட்டமன்ற தேர்தல் கூட்டணியாகவும்.
- பின்பு 2014 முதல் 2016 வரை திமுக மத்தியில் எக்கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் தனித்து செயல்பட்டுவந்த போது 2014 நாடாளுமன்றத் தேர்தலில் இக்கூட்டணி திமுக தலைமையில் மீண்டும் செயல்பட்டது.
- மேலும் இக்கூட்டணி திமுக தலைமையில் 2006 சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2014 நாடாளுமன்றத் தேர்தல் ஆகிய இரண்டு தேர்தல்களை திமுக தலைமையில் சந்தித்து உள்ளது.
- பின்பு 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்ற பெயர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தலைமையில் அமைந்த இக்கூட்டணியில் பல கட்சிகள் இணைந்து எதிர்கட்சியான ஆளும் அதிமுக கட்சியில் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மர்ம மரணத்தில் உள்ள உண்மைகளை முறைப்படி நீதி விசாரணை அமைக்க கொரியும்.
- பின்பு ஜெயலலிதா இறப்பிற்கு பிறகு அதிமுக ஆட்சி சட்டப்படி கலைக்கபடாமல் மத்திய பாஜக பிரதமர் நரேந்திர மோடியின் வரைமுறையற்ற அதிகாரத்தால் அதிமுக அரசை பின் நின்று இயக்கி அக்கட்சியின் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் திராவிட சித்தாந்த சுயமரியாதை எஃகு கோட்டையாக உருவாக்கி வைத்திருந்த அதிமுக கட்சியின் தனித்தன்மையை கொச்சைபடுத்தி தமிழ்நாட்டில் ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்ட மக்களுக்கு பல நல்ல திட்டங்களையும், மாநில சுயாட்சி தன்மையையும் நிராகரித்து விட்டு மத்திய அரசின் பிரதமர் நரேந்திர மோடியின் கைப்பாவையாக செயல்பட்டு வந்த அதிமுக கட்சியின் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரின் நிலையில்லா ஆட்சி அதிகார கட்டுப்பாட்டை எதிர்த்தும் அடிமை அதிமுக கட்சியை பின் நின்று இயக்கும் பாஜக தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பல எதிர்கட்சி அணிகளை எதிர்த்தும் மத்திய பாஜக அரசின் மதவாத சக்திகளையும், வரைமுறையற்ற அதிகாரத்தையும் எதிர்த்து திமுக தலைமையில் பல கூட்டணி கட்சிகளோடு இணைந்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியாக உருவானது.
கடந்த கால கூட்டணி பிரிவுகள்
தொகு- 2006 சட்டமன்ற தேர்தல் திமுக தலைமையில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபோது திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு அளவுக்கு அதிகமான தொகுதிகளை வழங்கியதால்.
- திமுகவிற்கு அறுதிபெரும்பான்மை கிடைக்காமல் போனதால் இக்கூட்டணியில் இருந்த காங்கிரஸ், பாமக, சிபிஐ, சிபிஎம் கூட்டணி கட்சிகளின் பெரும்பான்மை ஆதரவுடன் திமுக ஆட்சி அமைக்க மு. கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்டார்.
- ஆனால் 2009 இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் போது திமுக கூட்டணியில் இருந்து ஆதரவளித்த பாமக, சிபிஐ, சிபிஎம் போன்ற கட்சிகள் திமுக–காங்கிரஸ் தலைமையில் நடந்தேறிய பல ஊழல் முறைகேடுகள் மற்றும் வன்முறை செயல்களான ஸ்பெக்ட்ரம், இலங்கைத் தமிழர் இனப்படுகொலை, அமெரிக்கா அனுகுண்டு சோதனைகளை காரணம் காட்டி திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் இருந்து வெளியேறி எதிர்கட்சியான அதிமுக தலைமையிலான ஜனநாயக மக்கள் கூட்டணியில் இணைந்து விட்டதால்.
- திமுக தனது உரிமை பிரச்சனையான இலங்கையில் நடந்தேறிய ஈழதமிழர் இனப்படுகொலை நடத்திய காங்கிரஸ் கட்சியின் தவறான செயல்களை தட்டி கேட்டு கூட்டணியில் இருந்து விலகாததற்கு காரணம் திமுக அறுதிபெரும்பான்மை இல்லாத அரசாக அமைந்ததை காப்பாற்றி கொள்ள ஜனநாயக முற்போக்குக் கூட்டணியை முடக்கம் செய்துவிட்டு காங்கிரஸ் உடனான ஆதரவை பெற்று ஆட்சி நடத்தியது. திமுக–காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்ற கட்சிகள் கூட்டணியில் இணைந்து மத்தியிலும் வெற்றி பெற்று காங்கிரஸ் தொடர்ந்து ஆட்சி அமைத்தது.
- பின்பு 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முந்தைய 2013 ஆம் ஆண்டு திமுக–காங்கிரஸ் உடனான உறவில் முந்தைய ஆட்சி காலத்தில் திமுக மீது குற்றமாக இருந்த ஸ்பெக்ட்ரம் ஊழலை நீக்கமறுத்ததாலும் இலங்கைத் தமிழர் இனப்படுகொலையில் எதிராக செயல்பட்ட காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை கண்டித்து அதன் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து வெளியேறியது
- பின்பு 2014 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி மீண்டும் செயல்பட்டது. இதில் திமுக மத்தியில் எக்கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் விடுதலை சிறுத்தைகள் கட்சி, புதிய தமிழகம் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி போன்ற தமிழக உள்நாட்டு சிறிய கட்சிகள் மற்றும் இஸ்லாமிய கட்சிகளோடு இணைந்து போட்டியிட்ட போதிலும் முந்தைய காலத்தில் திமுக ஆட்சியில் முதல்வர் கருணாநிதி மீதான அதிருப்தியால் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் திமுக தனது கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து தோல்வி அடைந்தாலும் வாக்கு சதவீதத்தில் அதிமுகவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய கட்சியாக இடம் பிடித்தது.
- பிறகு 2016 சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கட்சி மீண்டும் கூட்டணியில் இணைந்தது அதற்கு காரணம் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் மக்களிடையே தனித்தன்மை இழந்துவிட்டதாலும். கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனித்து நின்று போட்டியிட்டு முழுமையான தோல்வியை தழுவியதையடுத்து. மீண்டும் திமுகவுடன் கூட்டணியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இணைந்தது.
- இதனால் தமிழகத்தில் கடந்த காலத்தில் திமுக ஆட்சியில் முதல்வர் கருணாநிதி மீதான கசப்பான சம்பவங்கள் மக்களிடையே விருப்பு, வேறுப்புகள் இருந்தாலும் திமுக– காங்கிரஸ் உடனான கூட்டணிக்கு தமிழக மக்களிடையே பலமான எதிர்ப்பு நிலை உருவானது.
- இதனால் எதிர்கட்சியான அதிமுகவில் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் மூன்றாவது அணியில் தேமுதிக–மதிமுக தலைமையில் அமைந்த மக்கள் நல கூட்டணியில் விஜயகாந்த், வைகோ, திருமாவளவன், ஜி. கே. வாசன் மற்றும் இடதுசாரிகட்சி தலைவர்கள் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், பாமக தலைவர் ராமதாஸ் போன்ற எதிர்க்கட்சி தலைவர்களால் திமுக–காங்கிரஸ் கூட்டணியை ஈழம் அழித்து ஊழல் செய்த கூட்டணி என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
- இதனால் தமிழக மக்களிடையே கடுமையான எதிர்ப்பு நிலை உருவாகியதால் திமுக பெற வேண்டிய வெற்றி வாய்ப்பை காங்கிரஸ் உடனான கூட்டணியாலும் அதிகமான தொகுதிகளை கொடுத்ததாலும் திமுக தோல்வியடைந்தது. மேலும் திமுக–காங்கிரஸ் கூட்டணியில் 98 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழக சட்டமன்றத்தில் பலமான எதிர்கட்சியாக திமுக செயல்பட்டது.
- மேலும் இந்த திமுக–காங்கிரஸ் உடனான மக்கள் வெறுப்பு கூட்டணியாலே திமுக ஆட்சி அமைக்க முடியாமலும் கருணாநிதி அவர்கள் தனது இறுதி காலம் வரை முதலமைச்சர் பதவியை அனுபவிக்க முடியாமலும் இறந்தார் என்றும் கூறப்படுகிறது.
தற்போதைய கூட்டணியின் தேர்தல் நிலவரம்
தொகு2019 நாடாளுமன்றத் தேர்தல் நிலவரப்படி
39 / 40
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021 வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் நிலவரப்படி
159 / 234
புதுச்சேரி
தொகுகூட்டணி சந்தித்த தேர்தல்கள்
தொகுவரிசை எண் | சட்டமன்ற/நாடாளுமன்ற தேர்தல்கள் | (ஜமுகூ/மமுகூ) கூட்டணி கட்சிகள் |
---|---|---|
1 | 2006 சட்டமன்ற தேர்தல் | (ஜமுக) திமுக+காங்கிரஸ், பாமக, சிபிஐ, சிபிஎம், இயூமுலீ |
2 | 2014 நாடாளுமன்றத் தேர்தல் | (ஜமுகூ) திமுக+விசிக, புதக, இயூமுலீ, மமக |
3 | 2021 சட்டமன்ற தேர்தல் | (மமுகூ) திமுக+காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம், இயூமுலீ, மமக, கொமதேக, தவாக, ஆபே, மவிக, அபாபி [2] |
16ஆவது சட்டமன்ற சட்டமன்ற தேர்தல்
தொகுஎண் | கட்சி | தற்போதைய தமிழக சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | தற்போதைய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை |
---|---|---|---|
1 | திராவிட முன்னேற்றக் கழகம் | 125 | 20 |
2 | இந்திய தேசிய காங்கிரசு | 18 | 8 |
3 | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் | 4 | 1 |
4 | விடுதலை சிறுத்தைகள் கட்சி | 4 | 2 |
5 | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | 2 | 2 |
6 | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 2 | 2 |
7 | இந்திய யூனியன் முஸ்லிம் லீக் | 0 | 1 |
8 | மனிதநேய மக்கள் கட்சி | 2 | 0 |
9 | கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி | 1 | 1 |
10 | தமிழக வாழ்வுரிமைக் கட்சி | 1 | 0 |
11 | அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு | 0 | 0 |
12 | மக்கள் விடுதலைக் கட்சி | 0 | 0 |
13 | ஆதித்தமிழர் பேரவை | 0 | 0 |
- | Total | 159 | 37 |
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் பட்டினிப் போராட்டம்.. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அறிவிப்பு.
- ↑ திமுக கூட்டணியில் ஆதித்தமிழர் பேரவை, தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலைக் கட்சிக்கு தலா ஒரு தொகுதி; உதயசூரியன் சின்னத்தில் போட்டி: ஒப்பந்தம் கையெழுத்து. தி ஹிந்து நாளிதழ். 08-மார்ச் -2021.
{{cite book}}
: Check date values in:|year=
(help)