ஆர். சிவா

இந்திய அரசியல்வாதி

ஆர். சிவா (R. Siva)(பிறப்பு: செப்டம்பர் 27, 1963), என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். தற்போது புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக உள்ள இவர் புதுச்சேரியில் உள்ள வில்லியனூர் சட்டமன்றத் தொகுதிக்கு ஏப்ரல் 2, 2021ல் நடைபெற்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1] இத்தேர்தலில் குறைவான இடங்களைப் பெற்ற திராவிட முன்னேற்றக் கழகம் பிரதான எதிர்கட்சியாக உள்ளது. எனவே புதுச்சேரி மாநில எதிர்கட்சித் தலைவராக ஆர். சிவா நியமிக்கப்பட்டுள்ளதாக திமுகவின் பொதுச்செயளாலர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.[2] 2001, 2006, 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களில் உருளையன்பேட்டை தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[3]

ஆர். சிவார்
R. Siva
சட்டமன்ற உறுப்பினர், புதுச்சேரி
பதவியில் உள்ளார்
பதவியில்
மே, 2021
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புவில்லியனூர், புதுச்சேரி, இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
வாழிடம்(s)குளக்கரை, புதுச்சேரி
தொழில்விவசாயம்
தேர்தல் தொகுதி கட்சி முடிவு வாக்கு சதவீதம் எதிர்க்கட்சி வேட்பாளர் எதிர்க்கட்சி எதிர்க்கட்சி வேட்பாளர் வாக்கு சதவீதம்
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2021 வில்லியனூர் திமுக வெற்றி 55.73 எஸ்.வி.சுகுமாரன் என். ஆர். காங்கிரசு 36.02[4]
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2016 உருளையன்பேட்டை திமுக வெற்றி 53.82 ஜி. நேரு @ குப்புசாமி என். ஆர். காங்கிரசு 39.38 [5]
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2006 உருளையன்பேட்டை திமுக வெற்றி 52.67 ஜி. நேரு @ குப்புசாமி என். ஆர். காங்கிரசு 40.54[5]
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2001 உருளையன்பேட்டை திமுக வெற்றி 49.41 ஜி. செழியன் அஇஅதிமுக 27.42[5]

மேற்கோள்கள்

தொகு
  1. https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=675044[தொடர்பிழந்த இணைப்பு]
  2. https://www.hindutamil.in/news/tamilnadu/668462-siva-mla-appointed-as-opposition-leader-in-puducherry-1.html
  3. https://www.newindianexpress.com/states/tamil-nadu/2021/may/08/four-time-mla-r-siva-appointed-leader-of-dmk-legislature-party-in-puducherry-2300076.html
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-05-10. பார்க்கப்பட்ட நாள் 2021-05-09.
  5. 5.0 5.1 5.2 வார்ப்புரு:Cite siva
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._சிவா&oldid=3926421" இலிருந்து மீள்விக்கப்பட்டது