இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்

(இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (Indian Union Muslim League) இந்தியாவின் முஸ்லிம் தேசியவாத அரசியல் கட்சி. இக்கட்சி வடக்கு மற்றும் தெற்கு கேரளாவின் பகுதிகளில் செல்வாக்கு பெற்றுள்ள கட்சியாகும். இந்தியாவில் முஸ்லிம் மக்களுக்காக 1906-ல் நவாப் சலீம் முல்லாகான் "அகில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்"கை ஆரம்பித்தார். அவருக்கு பின்னர் முகமது அலி ஜின்னா , அதனை நடத்தி வந்தார். பாகிஸ்தான் பிரிவினைக்குப்பின், இதன் தலைவரானார் காயிதே மில்லத்.

Indian Union Muslim League (IUML)
இந்திய ஒன்றிய இஸ்லாமிய கூட்டிணைவு
தலைவர்கே. எம். காதர் மொகிதீன்
நிறுவனர்நவாப் சலீம் முல்லாகான்
மக்களவைத் தலைவர்ஈ. டி. மொகமது பசீர்
மாநிலங்களவைத் தலைவர்அப்துல் வஹாப்
தொடக்கம்10 மார்ச்சு 1948 (76 ஆண்டுகள் முன்னர்) (1948-03-10)
தலைமையகம்மரைக்காயர் லெப்பை தெரு,சென்னை.
இளைஞர் அமைப்புமுசுலிம் இளையோர் லீக்
பெண்கள் அமைப்புமுசுலிம் பெண்கள் லீக்
அரசியல் நிலைப்பாடுவலது
இ.தே.ஆ நிலைமாநில கட்சி [1]
கூட்டணிஐக்கிய முற்போக்குக் கூட்டணி (இந்தியா) மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி (தமிழ்நாடு)
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
3 / 543
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
1 / 245
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
()
15 / 140
கேரளா
தேர்தல் சின்னம்
IUML Election Symbol- ஏணி
இணையதளம்
indianunionmuslimleague.in
இந்தியா அரசியல்

சுதந்திர இந்தியாவில்

தொகு

இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின் போது அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்குப் போகாமல் இந்தியாவில் தங்கிவிட்டதால், அவர்களுக்காக கட்சி பெயரில் இருந்த "அகில" என்பதை நீக்கிவிட்டு 1949-ல் "இந்திய யூனியன் முஸ்லிம் லீக்" என்று மாற்றினார் காயிதே மில்லத். இதன் முதல் மாநாடு சென்னையில் உள்ள ராஜாஜி ஹாலில் நடந்தது., பெரும்பாலும் இசுலாமியர்கள் பங்கு வகிக்கும் இந்திய அரசியல் கட்சியாகும். தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களில் அதிக முனைப்புடன் செயல்படுகிறது.

தலைவர்கள்

தொகு

காயிதே மில்லத்துக்கு பின்னர் இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக் அகில இந்தியத் தலைவராக இப்ராஹிம் சுலைமான் சேட், பனாத்வாலா, முன்னாள் மத்திய இரயில்வே துறை இணை அமைச்சர் ஈ. அகமது ஆகியோர் பணியாற்றினர். தற்போது கே. எம். காதர் மொகிதீன் அகில இந்தியத் தலைவராக உள்ளார்.[2][3]

தமிழகத்தில் அப்துல்சமது, கே. எம். காதர் மொகிதீன் ஆகியோர் தமிழக தலைவராக பணியாற்றினர்.

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல்

தொகு

1952 ஆம் ஆண்டு முதல் 1967 வரை சட்ட மன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள்

வருடம் வெற்றி பெற்றவர் வெற்றி பெற்ற தொகுதி
1952 கண்ணியமிகு காயிதே மில்லத் முகம்மது இசுமாயில் சென்னை மாகாண சட்ட சபை
1967 ஏ.ஜி. சாகிப் என்கிற அப்துல் கபூர் சாகிப் ராணிப்பேட்டை
1967 ஹபிபுல்லா பெய்க் துறைமுகம்
1967 எம். எம். பீர்முஹம்மது மேலப்பாளையம்

தமிழ் நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு

1971 ஆம் ஆண்டு முதல் 2021 வரை சட்ட மன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள்

வருடம் வெற்றி பெற்றவர் வெற்றி பெற்ற தொகுதி சின்னம்/ஆதரவு
1971 அப்துல் ஜப்பார் (அரசியல்வாதி) அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி) ஏணி
1971 எம். ஏ. அபுசாலி புவனகிரி சுயேட்சை (மு.லீக்-திமுக ஆதரவு)
1971 கே. ஏ. வகாப் ராணிப்பேட்டை சுயேட்சை (மு.லீக்-திமுக ஆதரவு)
1971 அப்துல் லத்தீப் (அரசியல்வாதி) வாணியம்பாடி சுயேட்சை (மு.லீக்-திமுக ஆதரவு)
1971 முகமது கோதர் மைதீன் மேலப்பாளையம் உதயசூரியன் (மு.லீக் ஆதரவு)
1971 திருப்பூர் ஏ. எம். மைதீன் துறைமுகம் சுயேட்சை (மு.லீக்-திமுக ஆதரவு)
1977 அப்துல் லத்தீப் (அரசியல்வாதி) வாணியம்பாடி சுயேட்சை (லீக் ஆதரவு)
1984 அப்துல் சமது திருவல்லிக்கேணி உதயசூரியன்
1984 வி. எஸ். டி. சம்சுல் ஆலம் பாளையங்கோட்டை உதயசூரியன்
1989 அப்துல் லத்தீப் (அரசியல்வாதி) சேப்பாக்கம் உதயசூரியன் (மு.லீக்-திமுக ஆதரவு)
1989 பி. அப்துல் சமது வாணியம்பாடி உதயசூரியன் (மு.லீக்-திமுக ஆதரவு)
1989 எம். முகம்மது சித்தீக் பூம்புகார் உதயசூரியன் (மு.லீக்-திமுக ஆதரவு)
1989 ஏ. எம். அமீத் இப்ராஹிம் கடலாடி உதயசூரியன் (மு.லீக்-திமுக ஆதரவு)
2006 அப்துல் பாசித் வாணியம்பாடி உதயசூரியன் (மு.லீக்-திமுக ஆதரவு)
2006 கலிலூர் ரகுமான் அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி) உதயசூரியன் (மு.லீக்-திமுக ஆதரவு)
2016 கே. ஏ. எம். முகம்மது அபூபக்கர் கடையநல்லூர் ஏணி

நாடாளுமன்ற உறுப்பினர்கள் (மக்களவை)

தொகு

1952 ஆம் ஆண்டு முதல் 2021 வரை நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள்

வருடம் வெற்றி பெற்றவர் வெற்றி பெற்ற தொகுதிகள் சின்னம்/ஆதரவு
1967 எஸ். எம். முகம்மது செரிப் இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி சுயேட்சை
1971 எஸ். எம். முகம்மது செரிப் பெரியகுளம் மக்களவைத் தொகுதி ஏணி
2004 கே. எம். காதர் மொகிதீன் வேலூர் மக்களவைத் தொகுதி உதய சூரியன்
2009 எம். அப்துல் ரஹ்மான் வேலூர் மக்களவைத் தொகுதி உதய சூரியன்
2019 நவாஸ் கனி இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி ஏணி
2024 நவாஸ் கனி இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி ஏணி

நாடாளுமன்ற உறுப்பினர்கள் (மாநிலங்களவை)

தொகு
வருடம் வெற்றி பெற்றவர் சின்னம்/ஆதரவு
1964 ஆ. கா. அ. அப்துல் சமது ஏணி
1970 ஆ. கா. அ. அப்துல் சமது ஏணி
1968 எஸ். ஏ. காஜா மொய்தீன் ஏணி
1972 ஏ. கே. ரிபாயி ஏணி
1974 எஸ். ஏ. காஜா மொய்தீன் ஏணி

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016

தொகு

2016 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து வாணியம்பாடி, கடையநல்லூர், விழுப்புரம்,பூம்புகார், மணப்பாறை ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது.[4] இதில் கடையநல்லூரில் முகமது அபுபக்கர் வெற்றிபெற்று இக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5]

போட்டியிட்ட தொகுதிகள் வெற்றி பெற்ற தொகுதிகள் வாக்குகள் வாக்கு %
5 1 313808 0.7 %[6]

கேரள சட்டமன்றத் தேர்தல், 2016

தொகு

2016,கேரளா சட்டமன்றத் தேர்தலில் இக்கட்சி ஐக்கிய ஜனநாயக முன்னணியுடன் கூட்டணி அமைத்து 24 தொகுதிகளில் போட்டியிட்டது.இதில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

போட்டியிட்ட தொகுதிகள் வெற்றி பெற்ற தொகுதிகள் வாக்குகள் வாக்கு %
24 18 1496864 7.4 %[7]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021

தொகு

2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து மூன்று தொகுதிகளில் ஏணி சின்னத்தில் போட்டியிட உடன்பாடு ஒப்பந்தம் கையெழுத்தானது.[8][9]

ஆதாரம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "List of Political Parties and Election Symbols main Notification Dated 18.01.2013" (PDF). India: Election Commission of India. 2013. Archived from the original (PDF) on 24 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 9 May 2013.
  2. "Indian Union Muslim League Kerala State Committee (IMUL) – Party History, Symbol, Founders, Election Results and News".
  3. Khader Mohideen elected as national president of IUML Times of India, Feb 27, 2017
  4. "வாணியம்பாடி, கடையநல்லூர், விழுப்புரம், பூம்புகார், மணப்பாறை..இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தொகுதிகள்". தட்சு தமிழ். பார்க்கப்பட்ட நாள் 8 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-05-22. பார்க்கப்பட்ட நாள் 2016-05-19.
  6. "GENERAL ELECTION TO LEGISLATIVE ASSEMBLY TRENDS & RESULT 2016". ELECTION COMMISSION OF INDIA. 19 மே 2016. Archived from the original on 2016-11-24. பார்க்கப்பட்ட நாள் 19 மே 2016.
  7. "GENERAL ELECTION TO LEGISLATIVE ASSEMBLY TRENDS & RESULT 2016". ELECTION COMMISSION OF INDIA. 19 மே 2016. Archived from the original on 2016-05-24. பார்க்கப்பட்ட நாள் 19 மே 2016.
  8. "தி.மு.க. கூட்டணி: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-3; மனிதநேய மக்கள் கட்சிக்கு- 2 ; ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகளுடன் பேச்சுவார்த்தை". தினத்தந்தி நாளிதழ். பார்க்கப்பட்ட நாள் 2 மார்ச் 2021. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  9. செய்திப்பிரிவு, ed. (01 Mar 2021). தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: திமுக கூட்டணியில் ஐயூஎம்எல்-க்கு- 3; மமக-வுக்கு- 2 தொகுதிகள் ஒதுக்கீடு. தி ஹிந்து நாளிதழ். {{cite book}}: Check date values in: |year= (help)