அப்துல் பாசித்
அப்துல் பாசித் (H. Abdul Basith) தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வேலூர் மாவட்டத்தின், வாணியம்பாடி (சட்டமன்றத் தொகுதியில்இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் கட்சி சார்பில் தி.மு.க உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். [1]
பிறப்பும் கல்வியும்தொகு
வேலூர் மாவட்டத்தின் ஆம்பூர் நீலிக்கொல்லை மசூதி தெருவில் பிறந்த இவர் டிப்ளமோ பயின்றுள்ளார். [2]
தொழில்தொகு
தோல் மற்றும் காலணிகள் தயாரிக்கும் எந்திரங்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
முஸ்லீம் லீக்கில்தொகு
இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலச் செயலாளராக பணியாற்றுகின்றார். [3]
சட்டமன்ற உறுப்பினராகதொகு
ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | வாக்கு விழுக்காடு (%) | பெற்ற வாக்குகள் |
---|---|---|---|---|
2006 | வாணியம்பாடி | தி.மு.க-இ.யூ.மு.லீக் | 53 | 69837 |