வேலூர் மக்களவைத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதி

வேலூர் மக்களவைத் தொகுதி (Vellore Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 8வது தொகுதி ஆகும்.

வேலூர் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
வேலூர் மக்களவைத் தொகுதி (மறுசீரமைப்புக்கு பிந்தையது)
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
நிறுவப்பட்டது1951-நடப்பு
மொத்த வாக்காளர்கள்14,07,817[1]
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிதிமுக
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டுஇந்தியப் பொதுத் தேர்தல் - 2024

இந்த தொகுதியில் 2019 மக்களவைத் தேர்தல், ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் அலுவலகத்தில் இருந்து கணக்கிடப்படாத பெரும் தொகையை மீட்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று, இத்தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆணையிட்டார்.[2][3][4]

தொகுதி மறுசீரமைப்பு

தொகு

தொகுதி மறுசீரமைப்புக்கு முன் காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு (தனி), அணைக்கட்டு, வேலூர், ஆரணி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன.

சட்டமன்ற தொகுதிகள்

தொகு

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:

  1. வேலூர்
  2. அணைக்கட்டு
  3. கே. வி. குப்பம் (தனி)
  4. குடியாத்தம் (தனி)
  5. வாணியம்பாடி
  6. ஆம்பூர்

எல்லைகள்

தொகு

திருவண்ணாமலை, ஆரணி, அரக்கோணம், சித்தூர் ஆகிய மக்களவைத் தொகுதிகள் வேலூர் மக்களவைத் தொகுதியின் எல்லைகளாக அமைந்துள்ளன.

வென்றவர்கள்

தொகு
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி கூட்டணி ஆதாரம்
1 ஆவது மக்களவைத் தேர்தல், 1951 ராமச்சந்தர் & எம். முத்துகிருஷ்ணன் காமன்வீல் கட்சி & காங்கிரசு
2 ஆவது மக்களவைத் தேர்தல், 1957 எம். முத்துகிருஷ்ணன் & என். ஆர். முனியசாமி இருவரும் காங்கிரசு
3 ஆவது மக்களவைத் தேர்தல், 1962 அப்துல் வாகித் காங்கிரசு
4 ஆவது மக்களவைத் தேர்தல், 1967 குசேலர் திமுக
5 ஆவது மக்களவைத் தேர்தல், 1971 ஆர். பி. உலகநம்பி திமுக
6 ஆவது மக்களவைத் தேர்தல், 1977 வி. தண்டாயுதபாணி நிறுவன காங்கிரசு
7 ஆவது மக்களவைத் தேர்தல், 1980 ஏ.கே.ஏ. அப்துல் சமது சுயேட்சை
8 ஆவது மக்களவைத் தேர்தல், 1984 ஏ. சி. சண்முகம் அதிமுக
9 ஆவது மக்களவைத் தேர்தல், 1989 ஏ.கே.ஏ. அப்துல் சமது காங்கிரசு
10 ஆவது மக்களவைத் தேர்தல், 1991 அக்பர் பாஷா காங்கிரசு
11 ஆவது மக்களவைத் தேர்தல், 1996 பி. சண்முகம் (வேலூர்) திமுக
12 ஆவது மக்களவைத் தேர்தல், 1998 என். டி. சண்முகம் பாமக
13 ஆவது மக்களவைத் தேர்தல், 1999 என். டி. சண்முகம் பாமக
14 ஆவது மக்களவைத் தேர்தல், 2004 கே. எம். காதர் மொகிதீன் திமுக
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 எம். அப்துல் ரஹ்மான் திமுக
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 பி. செங்குட்டுவன் அதிமுக
17 ஆவது மக்களவைத் தேர்தல், ஆகஸ்ட்,2019 கதிர் ஆனந்த் திமுக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி
18 ஆவது மக்களவைத் தேர்தல், 2024 கதிர் ஆனந்த் திமுக இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி

வாக்காளர்கள் எண்ணிக்கை

தொகு
தேர்தல் ஆண்கள் பெண்கள் மூன்றாம்
பாலினத்தவர்கள்
மொத்தம் ஆதாரம்
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 6,47,299 6,58,547 20 13,05,866 2014 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி[5]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 6,90,154 7,17,581 82 14,07,817 2019 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி[1]

வாக்குப்பதிவு சதவீதம்

தொகு
தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு ஆதாரம்
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 71.69% - [6]
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 74.58% 2.89% [5]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 71.91%

தேர்தல் முடிவுகள்

தொகு

18-ஆவது மக்களவைத் தேர்தல் (2024)

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல் : வேலூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக கதிர் ஆனந்த் 5,68,692 50.35% 3.14
பா.ஜ.க ஏ. சி. சண்முகம் 352,990 31.25%
அஇஅதிமுக எஸ். பசுபதி 117,682 10.42% 36.00
நாதக மகேஷ் ஆனந்த் 53,284 4.72%  2.09
நோட்டா பெயர் இல்லை 8,736 0.77% 0.15
வெற்றி விளிம்பு 215,702 19.08%  18.29
பதிவான வாக்குகள் 1,129,458 73.53%  2.07
பதிவு செய்த வாக்காளர்கள்
திமுக கைப்பற்றியது மாற்றம்

17-ஆவது மக்களவைத் தேர்தல் (2019)

தொகு

இத்தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த வேட்பாளர் கதிர் ஆனந்த், புதிய நீதிக் கட்சியைச் சேர்ந்த ஏ. சி. சண்முகத்தை 8,141 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் சின்னம் கட்சி பெற்ற மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம் (%)
கதிர் ஆனந்த்   திமுக 4,85,340 47.30%
ஏ. சி. சண்முகம்   அதிமுக 4,77,199 46.51%
தீபலக்ஷ்மி   நாம் தமிழர் கட்சி 26,995 2.63%
நோட்டா - - 9,417 0.92%

16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)

தொகு

ஏ. சி. சண்முகம் - பாரதீய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டார். இவர் இதே தொகுதியில் 1984 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர். மோடி தலைமையில் பா.ஜ.க.வின் தாமரைச் சின்னத்தில், இவரது புதிய நீதிக் கட்சி போட்டியிட்டது.

திமுக கூட்டணியின் சார்பாக முஸ்லீம் லீக் போட்டியிட்டது.[7]

முக்கிய வேட்பாளர்கள்

தொகு
வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
பி. செங்குட்டுவன் அதிமுக 3,83,719
ஏ. சி. சண்முகம் புதிய நீதிக் கட்சி 3,24,326
அப்துல் ரஹ்மான் முஸ்லிம் லீக் 2,05,896
விஜய இளஞ்செழியன் காங்கிரசு 43,960

15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)

தொகு

24 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின் அப்துல் ரகுமான் அதிமுகவின் வாசுவை 1,07,393 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
எம். அப்துல் ரஹ்மான் திமுக 3,60,474
வாசு அதிமுக 2,53,081
சௌகத் செரிப் தேமுதிக 62,696
இராஜேந்திரன் பாசக 11,184

14 ஆவது மக்களவைத் தேர்தல் (2004)

தொகு

கே. எம். காதர் மொகிதீன் (திமுக) - 4,36,642.

சந்தானம் (அதிமுக) - 2,58,032.

வாக்குகள் வேறுபாடு - 1,78,610

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Special Summary Revision 2019 - PC wise Electorate in TN as per Final publication of Electoral Rolls on 31/01/2019".
  2. "வேலூர் தொகுதிக்கு தேர்தல் அதிரடி ரத்து.. தேர்தல் ஆணையம் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி உத்தரவு". ஒன் இந்தி்யா. பார்க்கப்பட்ட நாள் 17 ஏப்ரல் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "Lok Sabha Polls In Tamil Nadu's Vellore Cancelled After Huge Cash Haul". என் டி டி வி. பார்க்கப்பட்ட நாள் 17 ஏப்ரல் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "Lok Sabha polls in Tamil Nadu's Vellore cancelled after huge cash seizure". டைம்சு ஆப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 17 ஏப்ரல் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. 5.0 5.1 "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. பார்க்கப்பட்ட நாள் 28 சூலை 2018.
  6. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2012-12-07. பார்க்கப்பட்ட நாள் 30 ஏப்ரல் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  7. "Puthiya Tamizhagam founder Krishnasamy to contest from Tenkasi". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 6-3-2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேலூர்_மக்களவைத்_தொகுதி&oldid=4036963" இலிருந்து மீள்விக்கப்பட்டது