திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதி

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி (Tiruvannamalai Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 11ஆவது தொகுதி ஆகும்.

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி (மறுசீரமைப்புக்கு பிந்தையது)
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
சட்டமன்றத் தொகுதிகள்49. ஜோலார்பேட்டை
50. திருப்பத்தூர்
62. செங்கம் (தனி)
63. திருவண்ணாமலை
64. கீழ்பெண்ணாத்தூர்
65. கலசப்பாக்கம்
நிறுவப்பட்டது2009-நடப்பு
மொத்த வாக்காளர்கள்13,31,721 [1]
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிதிமுக
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டுஇந்தியப் பொதுத் தேர்தல் - 2024

தொகுதி மறுசீரமைப்பு

தொகு

2008 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின்போது, திருப்பத்தூர் மக்களவைத் தொகுதியில் இருந்து திருப்பத்தூர், செங்கம், கலசப்பாக்கம் ஆகிய தொகுதிகளும், கலைக்கப்பட்ட பழைய வந்தவாசி மக்களவைத் தொகுதியில் இருந்து திருவண்ணாமலை தொகுதியை எடுத்தும் மற்றும் ஜோலார்பேட்டை மற்றும் கீழ்பெண்ணாத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை புதியதாக உருவாக்கியும் புதிய திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.

எல்லைகள்

தொகு

ஆரணி, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மக்களவைத் தொகுதிகள் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியின் எல்லைகளாக அமைந்துள்ளன.

சட்டமன்ற தொகுதிகள்

தொகு

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை:

  1. ஜோலார்பேட்டை
  2. திருப்பத்தூர்
  3. செங்கம் (தனி)
  4. திருவண்ணாமலை
  5. கீழ்பெண்ணாத்தூர்
  6. கலசப்பாக்கம்

வென்றவர்கள்

தொகு
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி கூட்டணி ஆதாரம்
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 த. வேணுகோபால் திமுக
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 வனரோஜா அ.தி.மு.க.
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 சி. என். அண்ணாத்துரை திமுக
18 ஆவது மக்களவைத் தேர்தல், 2024 சி. என். அண்ணாத்துரை திமுக

வாக்காளர்கள் எண்ணிக்கை

தொகு
தேர்தல் ஆண்கள் பெண்கள் மற்றவர்கள் மொத்தம் ஆதாரம்
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 6,64,261 6,67,440 23 13,31,724 ஜனவரி 10, 2014 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,[1]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019

வாக்குப்பதிவு சதவீதம்

தொகு
தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு ஆதாரம்
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 79.89% - [2]
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 78.80% 1.09% [3]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019

18-ஆவது மக்களவைத் தேர்தல் (2024)

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல் : திருவண்ணாமலை
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக சி. என். அண்ணாத்துரை 5,47,379 47.75 10.46
அஇஅதிமுக எம். கலியபெருமாள் 313,448 27.34 4.3
பா.ஜ.க ஏ. அஸ்வத்தாமன் 156,650 13.67
நாதக ஆர். இரமேஷ்பாபு 83,869 7.32  4.92
நோட்டா பெயர் இல்லை 11,957 1.04 0.04
வெற்றி விளிம்பு 233,931 20.41 6.17
பதிவான வாக்குகள் 1,146,273 74.24 3.52
பதிவு செய்த வாக்காளர்கள்
திமுக கைப்பற்றியது மாற்றம்

17-ஆவது மக்களவைத் தேர்தல் (2019)

தொகு

முக்கிய வேட்பாளர்கள்

தொகு

இத்தேர்தலில், 6 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 19 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 25 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த வேட்பாளர் சி. என். அண்ணாதுரை, அதிமுகவின் எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தியை 3,04,187 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் சின்னம் கட்சி தபால் வாக்குகள் பெற்ற மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம் (%)
சி. என். அண்ணாதுரை   திமுக 4,553 6,66,272 57.85%
எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி   அதிமுக 1,829 3,62,085 31.44%
ஞானசேகர்   அமமுக 136 38,639 3.35%
ரமேஷ்பாபு   நாம் தமிழர் கட்சி 245 27,503 2.39%
அருள்   மக்கள் நீதி மய்யம் 142 14,654 1.27%
நோட்டா - - 94 12,317 1.07%

16-ஆவது மக்களவைத் தேர்தல் (2014)

தொகு

முக்கிய வேட்பாளர்கள்

தொகு
வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
வனரோஜா அ.தி.மு.க 5,00,751
சி. என். அண்ணாதுரை தி.மு.க 3,32,145
எதிரொலி மணியன் பாமக 1,57,954
ஏ.சுப்ரமணியம் இந்திய தேசிய காங்கிரசு 17,854

15-ஆவது மக்களவைத் தேர்தல் (2009)

தொகு

30 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின் வேணுகோபால் பாமகவின் காடுவெட்டிகுரு என்னும் ஜெ. குருநாதனை 1,48,300 வாக்குகள் வேறுபாட்டில் வென்று திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வு பெற்றார்.[சான்று தேவை]

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
த. வேணுகோபால் திமுக 4,73,866
காடுவெட்டி குரு என்னும் ஜெ. குருநாதன் பாமக 2,88,566
எசு. மணிகண்டன் தேமுதிக 56,960

மேற்கோள்கள்

தொகு
  1. "Parliamentary Constituency wise Electorate as on 10/01/2014" (PDF). முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 10 சனவரி 2014. Archived from the original (PDF) on 2014-03-30. பார்க்கப்பட்ட நாள் 3 பெப்ரவரி 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 30, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. பார்க்கப்பட்ட நாள் 29 செப்டம்பர் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)