அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி

அக்ரி. எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி ஓர் தமிழக அரசியல்வாதியும், தமிழகத்தின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் கலசப்பாக்கம் தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு 2011 முதல் 2016 வரை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.[1] அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை சார்ந்த இவர் வேளாண் துறை அமைச்சராக பதவி வகித்தார்.[2]. இவர் 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போளூர் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[3]

அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி
போளூர் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
பதவியில் உள்ளார்
வணிகவரி, பதிவுத்துறை, பள்ளிக்கல்வி துறை, இளைஞர் நலன், விளையாட்டு துறை, தொல்லியல் துறை அமைச்சர்
பதவியில்
சூன் 2014 - மார்ச்சு 2015
உணவுத்துறை அமைச்சர்
பதவியில்
2011 - 2012
கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2006 - 2016
தனிநபர் தகவல்
பிறப்பு செப்டம்பர் 26, 1959 (1959-09-26) (அகவை 64)
எலத்தூர், கலசப்பாக்கம் வட்டம், திருவண்ணாமலை, தமிழ்நாடுஇந்தியா
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி அதிமுக
இருப்பிடம் எலத்தூர், கலசப்பாக்கம் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்,தமிழ்நாடு, இந்தியா

தமிழ்நாடு வேளாண் பொறியியல் துறையின் திருநெல்வேலி மாவட்ட செயற்பொறியாளர் முத்துகுமாரசாமி 22 பிப்ரவரி 2015 ஆம் தேதி ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட காரணமாக, கிருஷ்ணமூர்த்தி அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டு, தற்போது காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.[4][5][6]

மேற்கோள்கள் தொகு