சி. என். அண்ணாத்துரை (திருவண்ணாமலை)

இந்திய அரசியல்வாதி

சி. என். அண்ணாத்துரை என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், பதினேழாவது மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், திருவண்ணாமலை தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

இவர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர். முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவரான இவர் திருவண்ணாமலை மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். இவர் இதற்கு முன்னர் 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இதே தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அத்தேர்தலில் அதிமுக வேட்பாளரான வனரோஜா என்பவரிடம் தோல்வியடைந்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் 2019 - 38 தொகுதிகள் வெற்றியாளர்களின் முழு பட்டியல்".பிபிசி தமிழ் (மே 23, 2019)