கே. எம். காதர் மொகிதீன்

இந்திய அரசியல்வாதி

பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் (K.M. Kader Mohideen) (பிறப்பு 5 சனவரி 1940) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் ஆவார். [1][2] இந்தியாவில், தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் திருநல்லூர் என்ற கிராமத்தில் 5-1-1940ம் நாள் பிறந்தார். இவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியப் பொதுச் செயலாளரும், தமிழ் மாநிலத் தலைவராகவும் இருந்தவர். கடந்த 2004-ல் வேலூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இஸ்லாமிய தமிழிலக்கியக் கழகத்தின் உலக ஒருங்கிணைப்பாளருமாவார். மேலும் இவர் ஒரு சிறந்த பேச்சாளரும், மணிச்சுடர் இதழின் ஆசிரியரும், ஆங்கிலம், அரபு, உருது, இந்தி, பார்ஸி போன்ற மொழிகளை நன்கறிந்தவருமாவார்.

கே. எம். காதர் மொகிதீன்
தேசியத் தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
முன்னையவர்ஈ. அகமது
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 சனவரி 1940 (1940-01-05) (அகவை 84)
புதுக்கோட்டை, தமிழ்நாடு
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய யூனியன் முஸ்லிம் லீக்
துணைவர்லத்திபா பேகம்
பிள்ளைகள்3 மகன்கள், கலீலுர் ரஹ்மான், ஹபீபுர் ரஹ்மான், பைஜுர் ரஹ்மான்.
வாழிடம்திருச்சி

செம்மொழி மாநாட்டில் தமிழகத்துக்கும், அரபகத்துக்கும் உள்ள தொடர்புகள் பற்றிய ஆய்வுக் கட்டுரை வழங்கிய தமிழறிஞரான இவர், திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் 15 ஆண்டுகள் வரலாற்றுத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி8 ஆண்டுகள் தாருல் குர்ஆன் இதழில் 'தமிழர்க்கு இஸ்லாம் வந்த மதமா? சொந்தமா?' எனும் தலைப்பில் தொடர் கட்டுரையை எழுதியுள்ளார்.

எழுதிய நூல்கள்

தொகு
  • வாழும் நெறி
  • குர்ஆனின் குரல்
  • இஸ்லாமிய இறைக்கோட்பாடு

உட்பட ஆறு நூல்களை எழுதியுள்ளார்.

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்

தொகு
  • முதுகலை வரலாற்றில் முதல் மாணவனாகத் தேறித் தங்கப் பதக்கம்
  • இஸ்லாமியத் தமிழிலக்கியக் கழகத்தின் தமிழ்மாமணி விருது
  • விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் பிறை விருதும்ää 50000 பொற்கிழியும் வழங்கி கௌரவித்துள்ளது.

இலட்சியம்

தொகு

தமிழ் நாட்டில் திருக்குர்ஆன் பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்க வேண்டும் என்பதைத் தம் வாழ்வின் இலட்சியமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.

உசாத்துணை

தொகு
  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011

வெளி இணைப்புக்கள்

தொகு

[* இந்திய நாடாளுமன்ற இணையத்தளத்தில் பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்

  1. "Indian Union Muslim League Kerala State Committee (IMUL) – Party History, Symbol, Founders, Election Results and News".
  2. Khader Mohideen elected as national president of IUML Times of India, Feb 27, 2017
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._எம்._காதர்_மொகிதீன்&oldid=3943443" இலிருந்து மீள்விக்கப்பட்டது