புதிய நீதிக் கட்சி

புதிய நீதிக் கட்சி (ஆங்கிலம்: New Justice Party) என்பது தமிழ்நாட்டில் உள்ள ஒரு அரசியல் கட்சி ஆகும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் உறுப்பினரான ஏ. சி. சண்முகம் என்பவரால் இக்கட்சித் தொடங்கப்பட்டது. 14 செப்டம்பர் 2022 அன்று இந்த கட்சியின் அங்கீகாரம் இந்திய தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டது.[1]

புதிய நீதிக் கட்சி
தலைவர்ஏ. சி. சண்முகம்
நிறுவனர்ஏ. சி. சண்முகம்
தொடக்கம்2001
கூட்டணிதேசிய ஜனநாயகக் கூட்டணி
கட்சிக்கொடி
இந்தியா அரசியல்

உருவாக்கம் தொகு

ஏ. சி. சண்முகம் என்பவர் நீதிக் கட்சி என்ற அரசியல் கட்சியை தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001க்கு முன் தொடங்கினார். பின்னர் செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி 2009 ஆம் ஆண்டு இவர் நீதிக் கட்சி என்பதை புதிய நீதிக் கட்சி என பெயர்மாற்றம் செய்து இதன் தலைவராக பணியாற்றிவருகிறார்.[2] தமிழகத்தில் முதலியார் சமூக மக்களின் பிரதிநிதித்துவம் பெறவும், இட ஒதுக்கீடு பெறவும், இம்மக்களின் வாழ்வாதாரம் மேம்படவும் புதிய நீதிக் கட்சி தொடங்கப்பட்டது.[3]

கொள்கைகள் தொகு

இக்கட்சி அனைத்து முதலியார் பட்டங்களை கொண்ட (செங்குந்தர், அகமுடையார், துளுவ வேளாளர், சேனைத்தலைவர்) ஆகிய பல்வேறு சமூகமக்களுக்கும், குறைந்தபட்சம் வறுமைக் கோட்டிற்கு கீழேயுள்ளவர்களுக்கு, கல்வி, வேலைவாய்ப்புகளில் உரிய இட ஒதுக்கீடு பட்டியலில் அல்லது தனி இட ஒதுக்கீடோ வழங்குவோம் என்று தங்கள் தேர்தல் வாக்குறுதியாக, பகிரங்கமாக அறிவிக்கும் கூட்டணிக்கு, புதிய நீதிக்கட்சி தனது நிபந்தனையற்ற முழுமையான ஆதரவினை தெரிவித்து வருகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழகத்தில் செயல்படாத கட்சிகள் என '22 கட்சிகள்' நீக்கம் - இந்திய தேர்தல் ஆணையம்". Puthiyathalaimurai. பார்க்கப்பட்ட நாள் 2022-09-14.
  2. "Puthiya Needhi Katchi gets a makeover". இந்தியன் எக்சுபிரசு. 7 September 2009 இம் மூலத்தில் இருந்து 12 மே 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120512012425/http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=Puthiya+Needhi+Katchi+gets+a+makeover&artid=q. பார்த்த நாள்: 31 January 2010. 
  3. A. K. J. Wyatt (2002). "New Alignments in South Indian politics: The 2001 Assembly elections in Tamil Nadu". Asian Survey 42 (5): 743–744. doi:10.1525/as.2002.42.5.733. http://research-information.bristol.ac.uk/files/3022152/asian%20survey%20article.pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதிய_நீதிக்_கட்சி&oldid=3935815" இலிருந்து மீள்விக்கப்பட்டது